Saturday, November 17, 2012

மன்மதலேகியம்--திடுக்கிடும் முடிவு!



முடிவு -1
முனிவரின் கடுந்தவத்தின் பயனாக மாரன் எதிரே தோன்றினான்.

அவன் கையில்  மன்மத லேகியம் நிறைந்த ஒரு பாத்திரம் இருந்தது.

அதை முனிவரிடம் அளித்து இதில் ஒரு கொட்டைப் பாக்களவு சாப்பிட்டால் இளமை திரும்பி விடும் எனச் சொல்லி மறைந்தான்.

அதைச் சோதனை செய்து பார்ப்பதற்காக முனிவர் சிறிதளவு சாப்பிட்டார்; இளைஞனானார்.

மன்னன் அதிகமாகச் சாப்பிட்டுக் குழந்தையானான்!
.............................................................
முடிவு-2

மாரன் லேகியத்தைக் கொடுக்கும்போது சொன்னான்”இதை ஒருவர்தான் சாப்பிட வேண்டும் ஒருவருக்கு மேல் சாப்பிட்டால் விளைவு விபரீதமாகி விடும்”எனச் சொல்லி மறைந்தான்

முனிவர் ஆர்வத்தினால் சிறிது சாப்பிட்டு இளமையடைந்தார்.

மன்னனுக்குத் தரும்போது உன்மையைச் சொல்லாமல் மறைத்து விட்டார்.

மன்னன்  குழந்தையானான்!
........................................................................
முடிவு-3

இளம் முனிவர் சொன்னார்”மன்னா! நான் சர்கு முனிவரல்ல;அவர் புத்திரன் அஜன்.தந்தையார் யாகம் செய்து மன்மத லேகியத்தைப் பெற்று விட்டார். அதைச் சாப்பிட்டால் இளமை திரும்பும்; ஆனால் அவர் ஒரு செய்தி சொல்லி அனுப்பி இருக்கிறார்.அவருக்குப் பாதி ராஜ்ஜியம் வேண்டாமாம். அதற்குப் பதிலாக உங்கள் மகளை எனக்கு மணம் முடித்துக் கொடுக்க வேண்டுமாம். திருமணம் முடிந்ததும் உங்களுக்கு லேகியம் கிடைக்கும்”

மன்னனுக்கு எப்படியாவது இளமை அடைய வேண்டும் என்ற வெறி;அதன் காரணமாக அந்த நிபந்தனைக்குச் சம்மதிக்கிறான்.

மறுநாளே திருமணம் நடை பெறுகிறது;அரசகுமாரிக்கும் அந்த அழகிய இளைஞனை மணப்பதில் மகிழ்ச்சியே.

திருமணம் முடிந்ததும் இளைஞன் தன் கச்சையிலிருந்து ஒரு சிறு டப்பியை எடுத்து மன்னனிடம் கொடுத்து,அதைத் தனியிடத்துக்குச் சென்று  சாப்பிடுமாறு கூறுகிறான்.

மன்னன் செல்கிறான்.

சிறிது நேரத்துக்குப் பின் ஒரு நாய் குரைத்துக் கொண்டே ஓடி வருகிறது

அரண்மனைக்குள் நாய் வந்து விட்டதே எனக் காவலர்கள் அந்த நாயை அடித்து விரட்டி விடுகின்றனர்.

அது திரும்பிப் பார்த்துக் கொண்டே பரிதாபமாக ஊளையிட்டபடி ஓடி விடுகிறது.

எல்லோரும் மன்னனுக்காகக் காத்திருக்கிறார்கள்.

மன்னன் வரவில்லை.

கடைசியில் இளைஞன் அரசியிடம் கூறுகிறான்”திருமணம் முடிந்ததும் தாம் அரச வாழ்க்கையைத் துறந்து செல்லத் தீர்மானித்திருப்பதாக மன்னர் சொன்னார். யார் கண்ணிலும் படாமல் வெளியே செல்ல நான் மருந்து கொடுத்து உதவினேன்.மன்னர் சென்று விட்டார்.இனி வரமாட்டார்”

சிறிது நாட்கள் சென்றபின் அரசியார் இளைஞனிடம் சொன்னார்” இனி நானும் துறவு பூணப் போகிறேன்.இந்த ஆட்சிப் பொறுப்பை உங்களிடம் ஒப்படைக் கிறேன்”

அவனுக்கு முடி சூட்டப்பட்டது.

அஜனான சர்கு முனிவர் வெற்றிப் புன்னகை பூத்தார்.
அந்நாட்டின் கோட்டை வாயிலில் நின்று அந்த நாய் ஊளையிட்டுக் கொண்டே இருந்தது!


(முடிந்தது?!)

Monday, November 12, 2012

தீபாவளி வாழ்த்துகள்



                                பதிவுலக நண்பர்கள் அனைவருக்கும்               
                                                                 இனிய

                               தீபாவளி
                         நல் வாழ்த்துகள்.

             அன்பன் 
             குட்டன்
         

Friday, November 9, 2012

மன்மத லேகியம்--2



முனிவர் சொன்னார்”மன்னா!சந்தேகம் வேண்டாம்.நான்தான்.இங்கிருந்து சென்றதும்,பல ஓலைச்சுவடிகளில் தேடி,மன்மதனைக் குறித்து யாகம் செய்தால் மன்மத லேகியம் பெறலாம் என அறிந்தேன்.முறைப்படி யாகத்தைத் தொடங்கினேன்.கிட்டத்தட்ட ஓராண்டுக்காலம் கடும்  யாகம்;நேற்றுத்தான் மன்மதன் என் முன் தோன்றி மன்மத லேகியம் அளித்தான்.நீங்கள் சாப்பிட்டு ஏதாவது விபரீதமான விளைவுகள் ஏற்பட்டு விட்டால்?எனவே பரிட்சை செய்வதற்காக நானே சிறிதளவு உட்கொண்டேன்;இளமைத்தோற்றம் அடைந்தேன்,இதோ லேகியம் மன்னா!”

மன்னனுக்குக் கோபம் வந்தது;”நமக்கென்று பெறப்பட்ட லேகியத்தை முனிவர் நமக்கு முன் சாப்பிட்டுப் பயன் பெறுவதா?”அவர் சொன்ன காரணம் அவனுக்குத் திருப்தியளிக்கவில்லை. எப்படியோ லேகியம் கைக்கு வந்து விட்டது.இனி நம்மை யார் என்ன செய்ய முடியும்?முட்டாள் முனிவன்! ஒப்பந்தமாவது மண்ணாவது.இதைச் சாப்பிட்டு இளமையடைவோம்;பின் காவலர்களை அழைத்து இந்த முனிவனைப் பாதாளச் சிறையில் அடைத்து விடலாம்!

”சாப்பிடுங்கள் மன்னா!” முனிவர் சொல்லி விட்டு அவனையே பார்த்தவாறு இருந்தார்,

மன்னன் ஒரு உருண்டை லேகியத்தைக் கையில் எடுத்தான்.

வாயில் போட்டு மென்று விழுங்கினான்.

லேகியம் தொண்டைக்குள் இறங்கியது.
………………………………..
…………………………………..
……………………………………..
மன்னன் அமர்ந்திருந்த இடத்தில் ஒரு சிறு குழந்தை கையைக் காலை உதைத்த படி அழுதவாறு படுத்திருந்தது!

ஏன் இப்படி நடந்தது?

விடைக்காகக் காத்திருங்கள்

விடைக்காக மட்டுமல்ல!

வேறு விதமான கதை முடிவுக்காகவும்!:):):):)
















Sunday, November 4, 2012

ரஷிய இனிப்புகள்!




                              


                                                                எப்புடி?!
               முகநூலிலிருந்து

Friday, November 2, 2012

மன்மத லேகியம்!



மன்னன் நெடுந்தோள் கேசரி வர்மன் காத்திருந்தான்.

முனிவரின் வருகைக்காக;

அவர் கொண்டு வரப்போகும் பொருளுக்காக!

முனிவரும் அவனும் சந்தித்துப் பேசி இப்போது ஓராண்டு ஓடி விட்டது.

குறுந்தோளனாகி விட்டவன் மீண்டும்,இளமையடைந்து,நெடுந்தோளனாகி வாழ்க்கையை அனுபவிக்க ஆசைப்பட்டான்.

முனிவர் தன்னால் அவனுக்கு உதவ முடியும் என்று சொன்னார்.

அவன் அதற்குப் பரிசாகப் பாதி ராஜ்ஜியம் தருவதாக வாக்களித்தான்.

வெறும் வாக்கல்ல,அதை எழுதி அரச முத்திரையிட்டு முனிவர்க்கு அளித்தான்.
முனிவர் அதற்கான தவத்தை மேற்கொள்ளச் சென்று விட்டார்.

ஓராண்டுக்காலம் ஆகி விட்டது.

அந்தப்புரப் பெண்களைப்பார்த்துப் பெருமூச்சு மட்டுமே விட முடிகிறது இப்போதெல்லாம்.

அதிலும்,அந்தப் புதிய அழகி!அவளுடன் கூட வேண்டும்.அதற்காக முனிவர் வெற்றியுடன்  விரைவில்திரும்ப வேண்டும்.இதே சிந்தனை அவனுக்கு.

காவலாளி வந்து சொன்னான்”மன்னா!ஒரு முனிவர் உங்களைக்காண வந்திருக்கிறார்”

மன்னன்  மகிழ்ச்சியின் உச்சியில்;

“வரச்சொல்,வரச்சொல்” கத்தினான்.

மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருந்தான்.

சிறிது நேரத்தில் உள்ளே வந்தவரைப் பார்த்து ஏமாற்றமடைந்தான்.

வந்தவர் ஒரு முனிவர்தான்;ஆனால் அந்த முனிவரல்ல

அவர் வயதானவர்.

இவர் இளைஞர்.

அழகிய முகமும்,பரந்த மார்பும் பொலிவும் கொண்ட இளைஞர்.

மன்னன் கேட்டான்” வாருங்கள் முனிவரே!புதியவராகத் தெரிகிறீர்.என்ன விஷயமாக எனைப் பார்க்க வந்தீர்கள்”

அவர் பெரிதாக நகைத்தார்.


”என்ன மன்னா என்னைத்தெரியவில்லையா?”

மன்னன் உற்று நோக்கினான்.பார்த்த முகமாகத் தோன்றியது.

“யாரிவர்”யோசித்தான்.

ஒரு பொறி தட்டியது .

அவரா?.வியந்தான்.

”சர்கு முனிவரே!தாங்களா?”குரல் வித்தியாசமாக வெளி வந்தது-அளவற்ற வியப்பின் காரணமாக..

அவர் அமர்ந்தார்.

பேச ஆரம்பித்தார்!

(காத்திருங்கள்--மன்னனுடன் சேர்ந்து நீங்களும்!)

Wednesday, October 31, 2012

பயமாக இருக்கிறது!



பயமாகத்தான் இருக்கிறது.
நாட்டு நடப்பைப் பார்க்கையில் பயம் வராமல் இருக்க முடியுமா?
வலைப்பூ என்று  ஒன்று தொடங்கி எதையெல்லாமோ எழுதிக் கொண்டிருக்கிறேன்.
எனக்குத் தெரிந்து நான் சர்ச்சைக்குரிய செய்தி எதையும் எழுதியதில்லை.
ஆனாலும் பயமாகத்தான் இருக்கிறது!
நமக்கே தெரியாமல் எப்போதாவது ஏதாவது தவறாக எழுதியிருப்போமோ என்று.
இப்போது ட்விட்டரில் தொடக்கம்.முதலில் சின்மயி அவர்கள் புகாரின் பேரில் இருவர் கைது.
இப்போது கார்த்தி சிதம்பரம் அவர்கள் புகாரின் பேரில் ஒரு புதுச்சேரித் தொழிலபர் கைது.
இரண்டுக்கும் காரணம் ட்வீட்டுகள்
நாளையே இந்தச் சிக்கல் வலைப்பூவிலும் வரலாம்.
இப்போதே தங்கமணி கேட்க ஆரம்பித்து விட்டாள்”சும்மா வியாபாரத்தைக் கவனிச்சிட்டு இருக்காம இதெல்லாம் எதுக்கு”
எனவே ஒரு முடிவு செய்திருக்கிறேன்.
இனி என்ன எழுதினாலும் அவள் படித்து ஓகே செய்த பின்னரே வெளியிடுவது என்று!
இதில் அவளுக்கும் மிக மிக மகிழ்ச்சி!
இதை நீங்களும் முயன்று பாருங்களேன்.
குடும்பத்தில் குதூகலம் பொங்கும்!
……………………………………..

இரு கவுஜகள்
---------------------
இதயமில்லாதவன்
-----------------------------
 

இதயம் என்று ஒன்று
எனக்கு இருந்தது முன்பு
இன்றில்லை என்னிடம்
எடுத்துக் கொண்டுவிட்டாய் நீ!
பத்திரமாய்ப் பார்த்துக்கொள்
ஏனென்றால் இருப்பது இரண்டு
இன்று உன்னிடம்!
நான் இதயமில்லாதவன்!!

………………………….

நிழல்
--------

காதல் என்பது உன் நிழல் போல
அதைத் துரத்தினால்  
விலகி ஓடும்.
அதை விட்டு விலகிப்போ
அது உன்னைத் தொடர்ந்து வரும்!