Monday, September 17, 2012

டெகிலாவும்,ஷகிலாவும்!

சமீப காலத்தில் இணையத்தில் டெகிலா என்ற பெயர் அடிக்கடி பார்க்க நேர்ந்தது,குறிப்பாக வலைப்பதிவுகளில்.எனக்கு ஷகிலா தெரியும்;டெகிலா தெரியாது!

ஷகிலா உங்களுக்கும் தெரியும்டி.வி.யில் பழைய படங்கள் பார்த்தால் தெரிந்து கொள்ளலாம். சமீபத்தில் கற்பகம் என்ற படம் பார்த்தேன் அதில் சுட்டிக் குழந்தை பேபி ஷகிலா நடித்திருக்கிறாள்.அக்காலத்தில் பல படங்களில் அக்குழந்தை நடித்ததாக அறிகிறேன்.

டெகிலா பற்றித் தெரிந்து கொள்ள கூகிளாண்டவர் துணை நாடினேன்.கிடைத்த விவரம் கீழே.

இது மெக்ஸிகோவில் தயாரான ஒரு மது வகை.இதைக் குடிப்பதே ஒரு சடங்கு மாதிரி

படங்களுடன் விளக்கம் கீழே.

முதல்  படி.:ஆள்காட்டி விரலுக்கும்,கட்டை விரலுக்கும் இடைப்பட்ட பகுதியில் கையின் பின்புறம் சிறிது நக்கி ஈரமாக்குங்கள்                   


இரண்டாம் படி:ஈரமான இடத்தில் சிறிது உப்பைத் தூவுங்கள்

 படி-3: விரல்களில் ஒரு சிறிய எலுமிச்சம்பழத் துண்டைப் பிடித்துக் கொள்ளுங்கள்


மூச்சை வெளியே விடுங்கள்.உப்பை நக்குங்கள்.டெகிலா ஒரு ஷாட்டைக் ஒரே விழுங்கில்  குடியுங்கள்,மூச்சை இழுக்குமுன் எலுமிச்சைத் துண்டைக் கடித்து சாறை விழுங்குங்கள். 



சடங்கு முடிந்தது.இனி அடுத்த ஷாட்!!

டெகிலாவுக்கு இப்போது காப்புரிமை வாங்கியிருக்கிறார்களாம்!

இதோ ஒரு நகைச்சுவைப் படம்!

                                                             (முக நூலிலிருந்து)

 எச்சரிக்கை:குடி குடியைக் கெடுக்கும்;குடிப் பழக்கம் உடல் நலத்தைக் கெடுக்கும்.

படிச்சுப் படிச்சுச் சொல்றாங்க பாழும் மதுவை நீக்கிப் பாலைக் குடிச்சுப் பழகணும்!
(இல்லாட்டி மோர்,நீராகாரம் இருக்கவே இருக்கு!)

10 comments:

  1. இப்படியுமா!

    ReplyDelete
  2. அது சரி... உங்களுக்கு குசும்பு ஜாஸ்தி தான்...

    ReplyDelete
  3. கேபிள் சங்கர் எழுதிய டக்கீலா பத்தி சொல்றீங்களோன்னு நினைச்சேன்....

    நல்லாத்தான் போயிட்டு இருக்கு! :)))

    ReplyDelete
  4. டெக்கீல்ல தலையில ஒரு ஓலைத்தொப்பி....பார்க்கவே மிக அழகாக இருக்குமே !

    ReplyDelete
  5. சோக்கான மேட்டருப்பா.....இன்னைக்குத்தான் இது நேக்குத் தெரின்ஜிது...
    பகிந்துகிட்டமைக்கு நன்றிப்பா..
    எப்புடி நாங்களும் ஜிகுருதண்டா பாஷையில கதைப்போமில்ல..

    ReplyDelete
  6. நன்றி சிட்டுக்குருவி

    ReplyDelete