Monday, October 8, 2012

பாம்பும் மேலாண்மையும்!



சமீபத்தில் “ஒரு ராஜநாகத்தின் கொலை” என்றொரு பதிவு வெளியிட்டிருந்தேன்.

அதை எழுதும்போதே பாம்பு பற்றிய ஒரு கதை,ராமகிருஷ்ண பரமஹம்ஸர் சொன்ன கதை,ஒன்று நினைவுக்கு வந்தது.

இக்கதையில் ஒரு மேலாண்மை தத்துவமே அடங்கியிருக்கிறது.

கதை------

ஒரு ஊரில் ஒரு பாம்பு இருந்தது.அந்த வழியாகச் செல்பவர்களை பார்த்துச் சீறிப்படமெ டுக்கும்.

 சிலர் கடிபட்டு இறந்தனர்.

ஊர் மக்கள் அனைவரும் அந்த வழியே போவதற்கே பயந்தனர்.

ஒரு நாள் அந்த வழியே ஒரு சாது வந்தார்.

பாம்பு சீறி எழுந்து அவரைக் கடிக்கப் போனது.

ஆனால் அவர் பார்த்த பார்வையில்,மனிதர்களைப் போல் பெட்டிப் பாம்பாய் அடங்கிப் போனது.

அவர் அந்தப் பாம்பிடம் ”ஏன் இப்படி எல்லாரையும் கடித்துத் துன்புறுத்துகிறாய்? இதனால் உனக்கு ஒரு பயனுமில்லை.நல்லபாம்பு என்ற பெயருக்கேற்ப ,நல்ல பாம்பாக இரு யாரையும் கடிக்காதே”என்று அறிவுரை சொன்னார்.

பாம்பும் மகுடிக்கு மயங்குவது போல் அவர் பேச்சில் மயங்கியது.

அன்று முதல் அது யாரையும் கடிப்பதில்லை.அதோடு மட்டுமன்றி அருகில் யார் வந்தாலும் சீறுவதுமில்லை.

அனைவருக்கும் அச்சம் நீங்கியது.

சிலர் அதன் மீது கல்லெறிந்து அதை காயப்படுத்தினர்.எப்போது தன் பொந்தை விட்டு வெளியே வந்தாலும் அடிபட்டது.

சில நாட்கள் கழித்து அந்தச் சாது மீண்டும் அங்கு வந்தார்.

உடலெல்லாம் காயத்துடன் பரிதாபமாக இருந்த பாம்பைக் கண்டார்.

என்ன நடந்த்து என வினவினார்.

பாம்பு சொன்னது”நீங்கள் சொன்ன படி நான் யாருக்கும் தீங்கு செய்யாமல்,என் அருகில் வரும்போது கூட சும்மாயிருந்தேன். இப்படி அடித்து விட்டார்கள்.”

சாது சொன்னார்ர்”நான் உன்னை யாரையும் கடிக்காதே எனத்தான் கூறினேன்;சீறாதே எனக் கூறவில்லையே.!நீ சீறிப் படம் எடுத்திருந்தால் உன் அருகே வரவே பயந்திருப்பார்களே !’

பாம்புக்குப் புரிந்தது!-
-
------------கதை முடிவு.

மேலதிகாரிகள் வேலை சரியாக நடக்க வேண்டுமெனில்.தன் கீழ்ப் பணி புரிவர்களுக்குத் தன்னிடம்  பயம் இருக்கும் படி இருக்க வேண்டும்.

தான் தவறு செய்தால் தண்டனை கிடைக்கும் என்ற பயம் அவர்களுக்கு  இருக்க வேண்டும்.
ஆனால்,அநாவசியமாக,அவர்களது முன்னேற்றத்தைத் தடை செய்யக் கூடாது.தேவையற்று தண்டிக்கக் கூடாது.

எங்கு தேவையோ அங்கு கண்டிப்பு அவசியம் வேண்டும்.

கண்டிப்பே இல்லையென்றால் எதுவும் சரியாக நடக்காது.

என் பாஸ் ஒருவர் சொல்வார்”be good;do not be goody,goody”என்று.

நல்லபாம்பு சீறவேண்டும்.சீறுவதையும் விட்டால் சீரழிய வேண்டியதுதான்!


16 comments:

  1. காவல் துறையிலும் இப்படித்தான்...

    அமைதியான போலீஸை யாரும் மதிப்பது கிடையாது...


    சீறுபவர்களுக்கே எங்கும் மதிப்பு...

    ReplyDelete
    Replies
    1. அதுவும் வேண்டும் ஆசிரியரே

      Delete
  2. காவல் துறையிலும் இப்படித்தான்...

    அமைதியான போலீஸை யாரும் மதிப்பது கிடையாது...


    சீறுபவர்களுக்கே எங்கும் மதிப்பு...

    ReplyDelete
  3. unmaithaan..

    arumaiyaana pakirvu....

    ReplyDelete
  4. "எங்கு தேவையோ அங்கு கண்டிப்பு அவசியம் வேண்டும்" நன்றாகச்சொன்னீர்கள்.

    ReplyDelete
  5. உண்மை... அதுவும் இந்தக் காலத்திற்கு மிகவும் அவசியம்...

    ReplyDelete
  6. எல்லா குணமும் இருத்தல் அவசியம் சிறந்த பகிர்வு.

    ReplyDelete
  7. இந்தக் கதையை ஏற்கனவே ராமகிருஷ்ணர் புத்தகத்தில் படித்து இருக்கிறேன். நினைவுபடுத்தியதற்கு நன்றி! அருமையான கதைதான். அது சொல்லும் தத்துவமும் கூட.

    ReplyDelete
  8. ரெண்டு கதையையும் அருமையாக இணைத்துயுள்ளீர்கள்....

    அருமை....

    ReplyDelete
  9. பாம்பின் மேலாண்மை நன்று.
    பணி தொடர வாழ்த்து.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete

  10. தலைப்பும் செய்தியும் பெருத்தமே! விளக்கமும் நன்று !

    ReplyDelete
  11. நம் இயல்பு என்னவோ அதையே வெளிக்காட்ட வேண்டும். இயல்புக்கு அதிகமாக "கடித்ததும்", இயல்புக்கு குறைவாக "சாதுவானதும்" நன்மைகளுக்கில்லை என்று கதை உணர்த்துவதை, அப்படியே அழகாக தங்களது கருத்தில் பிரதிபலிக்க செய்திருப்பது அருமை!

    ஒவ்வொருவனும் இயல்பை உணர்வதே போதும்!

    ReplyDelete
  12. கதைகள் அருமை .. மேலாண்மைக் கருத்தை உவகையோடு எடுத்தாண்ட விதம் சிறப்பு

    ReplyDelete
  13. எங்கு தேவையோ அங்கு கண்டிப்பு அவசியம் வேண்டும்.

    கண்டிப்பே இல்லையென்றால் எதுவும் சரியாக நடக்காது.“

    அருமையான கதைக்குறிய கருத்தைச் சொல்லியிருக்கிறீர்கள்.

    ReplyDelete