Tuesday, September 11, 2012

கொச்சைப் படுத்தப்பட்ட மண உறவு!



என்னங்க!
என்ன விசயம் சொல்லு.
நம்ம பக்கத்து வீட்டுல வேலை செய்யறாளே பாரு.
அதுக்கென்ன?
அவங்க வீட்டிலே பாத்திரம் கழுவறா;துணி துவைக்கிறா;கூட்டித் துடைக்கிறா.
சரி?
சம்பளம்1000 ருபாயாம்!
ஓஹோ!

அப்புறம் கனகா வீட்டுல சமையலுக்கு ஆள் வச்சிருக்காங்க.
ஆமாம்,ரெண்டு பெரும் வேலைக்குப் போறாங்க இல்ல?
சரிங்க ,சம்பளம் மாசத்துக்கு 3000 ருபாயாம்.
ஓஹோ!

சுசிலா குழந்தையைக் க்ரெச்சில  விடறா இல்ல?
ஆமாம்.
அதுக்கு 1500 ரூபாயாம்!

இதெல்லாம் எதுக்குச் சொல்றே?
இல்லீங்க இந்த மூணு வேலைக்கே 5500 ருபாய் ஆகுதில்ல?
ஆமாம்.

நம்ம வீட்டுல நாந்தான்  சமைக்கிறேன், பாத்திரம் கழுவறேன்,கூட்டறேன்,குழந்தையைப் பாத்துக்கறேன்.இன்னும் எவ்வளவோ செய்யறேன்.எனக்கு எவ்வளவு சம்பளம் தரப் போறீங்க?

என்ன திடீர்னு இப்படி கேக்குற?

பேப்பர்ல பாத்தீங்கல்ல?மகளிர்,குழந்தகள் மேம்பாட்டு அமைச்சகம்,மனைவிக்குக் கணவன் சம்பளம் தரணும்னு சட்டம் கொண்டு வரப் போகுதாம்.

ஊம்.சரிதான்.ஆனா இன்னும் முக்கியமான சேவை ஒண்ணு இருக்கே அதுக்குக் கூலி கொடுக்க ஆரம்பிச்சா,என் சமபளமே பத்தாதே?!அதுக்கு என்ன செய்யறதாம்?அதைப் பத்தி ஒண்ணும் சொல்லலியா?

 இதைச் சொன்னதுக்காக என்னை ஒரு “குறுமதி படைத்த  ஆண் பன்றி” என்று கூடச் சொல்வாங்க!(male chauvinist pig) 

ஆனா,கணவன் மனைவி உறவு என்பது கொச்சைப் படுத்தப்படுகிறதுங்கறதே உண்மை!

15 comments:

  1. கடைசில இப்படியா ஒரு குண்ட தூக்கி போடுவீங்க

    ReplyDelete
    Replies
    1. உண்மையைச் சொல்வது குண்டா?
      நன்றி சீனு அவர்களே

      Delete
  2. "தனியார் மயம் தனியார் மயம்" என்ற் எல்லோரின் புலம்பலும் ஒருநாள் புரட்சியாக மாறி விடுவதற்கு முன்பு கணவர்களையெல்லாம் சம்பளம் கொடுக்கும் முதலாளிகளாக்கி விட்டால் போராட்டக்காரர்களின் எண்ணிக்கை பாதியாக குறைந்து விடுமென்ற திட்டமிடுதலின் அச்சாரம்.

    ReplyDelete
  3. இருக்கும் பிரச்சனைகளை மேலும் அதிகமாக்கும் சட்டம்...

    ReplyDelete
  4. மனைவியின் இடத்தை வேலைக்காரர்களால் இட்டு நிரப்ப முடியாது.

    ReplyDelete
  5. Replies
    1. நன்றி வெங்கட் நாகராஜ்

      Delete
  6. எதிலெல்லாம் கவனம் செலுத்தவேண்டுமோ
    அதையெல்லாம் விட்டுவிட்டு
    தேவையில்லாத விஷயத்தில் கவனத்தைச்
    செலுத்துவதில் நம் அரசுக்கு ஈடு நம் அரசுதான்
    சொல்லிச் சென்றவிதம் அருமை
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. சரியாகச் சொன்னீர்கள்
      நன்றி

      Delete