Tuesday, October 2, 2012

ஒரு மறக்க முடியாத பயணம்-படங்களுடன்.இது ஒரு மறக்க முடியாத பயண அனுபவம்.

நான் சிறுவனாக இருந்த போது சென்ற ஒரு பயணம்.

எங்கள் பாட்டி ஒரு கிராமத்தில் வாழ்ந்து வந்தார்.

ஒரு முறை விடுமுறைக்கு நாங்கள்-நானும் என் சகோதரிகளும்-அம்மாவுடன் கிராமத்துக்குப் போனோம்.

முதன் முறை கிராமத்தைப் பார்க்கும் போது மகிழ்ச்சியாகவே இருந்தது.

வைக்கோல் போரில் குதிப்பது,குளத்தில் குதிப்பது என்று புதிய பல செயல்கள் மகிழ்ச்சி யளித்தன.

                                                  நாங்கள் குளித்த  கிராமத்துக் குளம்

ஆனால் நான்கு நாட்களில் எல்லாம் போரடித்து விட்டது.

எங்கள் பாட்டியை எங்காவது அழைத்துச் செல்லச் சொல்லித் தொந்தரவு செய்ய ஆரம்பித்து விட்டோம்.

எனவே ஒரு நாள் கிராமத்துக்கு அருகில் இருந்த கொக்கரக்கோபட்டிக்குப் போகலாம் என முடிவு செய்யப்பட்டது.

அங்கு போய் ஆற்றில் குளித்து விட்டுக் கோவிலுக்குப் போய் விட்டுத் திரும்பி வரலாம் எனத் திட்டம்.

அந்த நாளும் வந்தது.

காலை எழுந்து பாட்டி புளிசாதம்,தயிர்சாதம்,இட்லி,சட்னி எல்லாம் தயார் செய்தார்கள்.

எல்லோரும் 7 மணி அளவில் புறப்பட்டோம்.

கொ.பட்டிக்கு நடந்தே சென்று திரும்புவதாகத்தான் முடிவு.

நடந்தால் ஒரு மணி நேரத்தில் போய்ச் சேர்ந்து விடலாம் என்று பாட்டி சொன்னார்கள்.

உற்சாகமாகப் புறப்பட்டோம்;பாடியபடியே சாலையில் நடந்தோம்

                                                   நாங்கள் நடந்து சென்ற சாலை
                                        

ஒரு மணி நேரத்தில் கொ.பட்டி ஆற்றை அடைந்தோம்.

அதற்குள் பசி வந்து விட கொண்டு போன இட்லிகளைக் காலி செய்தோம்.

                                         இதுதான் இட்லி-நாங்கள் சாப்பிடுவதற்கு முன்!

பின் ஆற்றில் நீண்ட  நேரம் அட்டகாசம் செய்தோம்.

                                                   இதுதான் நாங்கள் குளித்த ஆறு

பின் கரை ஏறி,உடை அணிந்து கோவிலுக்குப் போனோம் ;

கோவில் என்று எதுவும் இல்லை.

சாலை ஓரத்தில் ஒரு கல்லுக்கு துணி சுற்றிப் பொட்டிட்டு  மாலைகள் போட்டிருந்தார்கள்.
பெயர் மைல்சாமியாம்.

                                                      படம் எடுக்க அனுமதிக்கவில்லை!


என் அக்காதான் கண்டுபிடித்துச் சொன்னாள்.அது ஒரு மைல் கல்;அதை சாமியாக்கி விட்டர்கள்;அதனால்தான் பெயர் மைல்சாமியாக இருக்கும் என்று.

சிரித்துக் கொண்டே அங்கிருந்து புறப்பட்டோம்.

இனி ஊர் திரும்ப வேண்டியதுதான்.

நாளை 2 ஆம் பாகம்.

ஊர் திரும்பும்போது நடந்த  எதிர்பாராத சம்பவங்கள்-படங்களுடன்!

(தொடரும்! )

36 comments:

 1. சுவாரஸ்யமான பயணப் பதிவு
  நிஜமாகவே இட்டிலி பார்க்க
  மல்லிகைப் பூவை போலவே இருந்தது
  பொறாமையாகக் கூட இருக்கிறது
  படங்களுடன் பதிவு மிக மிக அருமை
  தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
 2. ஆரம்பம் சுவாரசியமாத்தான் இருக்கு.

  ReplyDelete
 3. பயணம் பற்றிய பதிவுகளைக் கிண்டல் செய்யுற மாதிரி இல்ல இருக்கு!கலக்கல்1

  ReplyDelete
  Replies
  1. ரிஷியின் பெயர்;நாரதர் வேலை!
   நன்றி

   Delete
 4. பயணம் பற்றிய பதிவுகளைக் கிண்டல் செய்யுற மாதிரி இல்ல இருக்கு!கலக்கல்!

  ReplyDelete

 5. அடுத்த பதிவில் சந்திப்போம்!

  ReplyDelete
 6. இது தான் இட்லியா சரி சரி ...

  நடை பயணமாக நாங்கள்மலைக்கு சென்ற ஞாபகம் வந்தது வயல்வெளி வழியாக ஏரிக்கரை யோரம் அடடா நானும் இப்படி பதிவெழுதலாம் போல இதுக்குத்தான் வரச்சொன்னீங்களா நன்றிங்க.

  ReplyDelete
  Replies
  1. ஒரு பயணக்கவிதை பிறக்கட்டும் சகோ!
   நன்றி.

   Delete
 7. நல்லதொரு பயணம்தான்! ரீலா இல்லை ரியலான்னு கொஞ்சம் குழப்புது!

  ReplyDelete
  Replies
  1. இது ரீல்,சீ ரியல்,சீசீ ரீல்.....எனக்கே குழப்பமா இருக்கே!ரீலோ,ரியலோ பிடிச்சிருந்தாச் சரி!ஹி,ஹி.
   நன்றி சுரேஷ்

   Delete
  2. பயணக்கட்டுரை போட்டு பிரபல பதிவர் ஆகிடலாம்ன்னு பார்க்குறாராம்

   Delete
  3. பயணக்கட்டுரை போட்டா பிரபல பதிவர் ஆகிடலாமா ராஜிக்கா?பரவாயில்லையே!
   நன்றி

   Delete
 8. இப்போதைய டிரென்ட்!

  அப்ப இனி நீங்க பிரபல பதிவர்தான்.

  அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. ஓஹோ!பிரபலமாக இப்படி ஒரு வழி இருக்கா?
   நன்றி சிவனந்தம்

   Delete
 9. நல்ல நினைவு பகிர்வு,வாழ்த்துக்கள்,

  ReplyDelete
 10. ஓ... அது தான் இட்லியா...?

  எனக்கு தெரியவே தெரியாது குட்டரே.

  ReplyDelete
  Replies
  1. இப்போது தெரிந்து கொண்டீர்களா?
   நன்றி அருணா செல்வம்

   Delete
 11. இட்லி சூப்பர்! குஸ்பு இட்டலியா?

  ReplyDelete
  Replies
  1. என்ன இட்லியோ!யாருக்குத்தெரியும்?
   நன்றி வரலாற்று சுவடுகள்

   Delete
 12. கொக்கரக்கோ பட்டி எங்கிருக்கிறது? பார்க்கணுமே!

  சாப்பிடுவதற்கு முன் இட்லி, சரி. சாப்பிட்ட பின்?????

  மனதைக் கவரும் எளிய அழகிய நடை.

  தொடருங்கள்.

  ReplyDelete
  Replies
  1. சாப்பிட்டபின் இலைதான் இருக்கும்;இட்லி இருக்காதே!
   நன்றி அறுவை மருத்துவன்

   Delete
 13. இன்னும் என்னன்செய்யனுமோ செய்யுங்க...

  நான் ஒரு ரைட்டு பொட்டுட்டு கிளம்புகிறேன்...

  ReplyDelete
 14. இதுதான் இட்லி-நாங்கள் சாப்பிடுவதற்கு முன்!
  //////////////////////////

  என்ன பாஸ் இது கூடவா தெரியாம இருக்காங்க.........

  ReplyDelete