Saturday, October 27, 2012

சூப்பரு சிங்கரும்,(விரல்) சூப்புற ரசிகர்களும்!



சூப்பர் சிங்கர் என்ற மகா நாடகத்தின் ஆறாம் அங்கம்முடிந்து விட்டது-பெரியவர் நடித்து மூன்று,சிறியவர் நடித்து மூன்று.

வழக்கம் போல் மக்களின் வாக்கு என்ற மாயத் தோற்றத்தின் மூலம்,நடுவர்களால் கடைசி 5க்கு வராமலே வெளியேற்றப்பட்ட  ஆஜித்,கட்டுப்பாடற்ற அட்டைச் சுற்றில்(wild card க்கு இதுவா தமிழ்?அபத்தம்!  என்னுடைய நேரடியான அர்த்தமற்ற தமிழாக்கம்!) மீண்டும் உள்ளே வந்து மக்கள் தீர்ப்பாகிய மகேசன் தீர்ப்பினால் வெற்றி பெற்று விட்டான்!

இறுதிச் சுற்றுக்கு முதலில் வந்த சுகன்யா,முதல் மூவருக்குள் வரவில்லை.இறுதிச் சுறில் இரண்டாவதாக நுழைந்த பிரகதி, இரண்டாவது இடத்தில்!

இது முதல் முறையல்ல.சென்ற பெரியவர்கள் போட்டியிலும் இது போல்தான் நடந்தது.அதன் பின் நடுவர்கள் கூடி ஒரு போஸ்ட் மார்ட்டம் நடத்தி,தோற்றுப்போன சத்தியப்பிரகாஷுக்காக ஒப்பாரி வைத்து,வென்றவனைச் சிறுமைப்படுத்தினர்.இம்முறையும் அது நடக்கும்.

நடுவர்களால் வெளியேற்றப்பட்ட போட்டியாளர் இறுதியில் வெல்கிறார் என்றால் அந்த நடுவர்கள் திறமையற்றவர்களா?இந்த தேர்ந்தெடுக்கும் முறையே பிழையானதா?அல்லது எல்லாம் நாடகமா?

இந்த முறையும் கடைசியில் மனோ பிரகதியிடம் கூறினார்”உனக்கும் ,ஆஜித்துக்கும் அரை பாயிண்ட் தான் வித்தியாசம்.நடுவர் மதிப்பெண்கள் சமம்.மக்கள் வாக்கில் ஆஜித் அதிகம்” என.

ஒவ்வொரு முறையும் அதே மூன்று நடுவர்கள் ஏன்? மாற்றலாமே?ஒரு பின்னணிப்பாடகர்,ஒரு சாஸ்த்ரீய சங்கீதப் பாடகர்,ஒரு இசை இயக்குனர்,ஒரு இசை விமரிசகர் என்று ஒரு நடுவர் குழுவை அமைக்கலாமே?இறுதிச்  சுற்றுக்கு முப்பது நடுவர்களை நியமித்து அவர்கள் மதிப்பெண்களின் அடிப்படையில் தீர்மானிக்கலாமே?இவையெல்லாம் என் எண்ணங்கள். 

எத்தனையோ நல்ல ஆலோசனைகள் பிறக்கக்கூடும்.

ஆயிற்று.அடுத்த நாடக அங்கத்துக்கான ஒத்திகைகள் தொடங்கப் போகின்றன.

அதையும்  ரசிகர்கள் விரல் சூப்பிக்கொண்டு பார்க்க வேண்டியதுதான்.

ஐயா ,சூப்புவதற்கு ஒரு குச்சி மிட்டாயாவது கொடுங்களேன்!!!

8 comments:

  1. எல்லாம் அப்பட்டமா தெரியுது.இதோனட எதிரொலி அடுத்த சீசன்ல நிச்சயம் தெரியும்.போன முறையைவிட இந்த முறை ஒரு சலிப்பு இருக்கத்தான் செய்தது. ஏ.ஆர்.ரகுமானை வைத்து ஒப்பேற்றி விட்டார்கள்.
    த.ம.2

    ReplyDelete
  2. இ ன்னொரு WWF /IPL????????

    ReplyDelete
  3. இது அங்கீகரிக்கப் பட்ட போட்டி அல்ல..
    Just a Show... அவ்வளவே...
    சிறுவர்கள் பாடுவதை ரசியுங்கள், அல்லது புறக்கணியுங்கள்..
    விமர்சிப்பது இந்த கேடுகெட்ட நிகழ்ச்சிக்கு இலவச விளம்பரம் தருவதுபோல் ஆகும்...

    ReplyDelete
  4. உங்கள் எண்ணங்கள் நல்ல ஆலோசனைகளாக ஏற்கப்பட வேண்டும்.

    ReplyDelete
  5. உண்மைதான்! இதிலும் பிக்சிங் நடப்பது கண்கூடாகத் தெரிகிறது! அதனால் இந்த போட்டியை பார்ப்பதை தவிர்த்து வருகிறேன்!

    ReplyDelete
  6. அடுத்த முறை மிட்டாய் உண்டு...
    tm7

    ReplyDelete
  7. ஏதோ போங்க....நடத்துறாங்க... ரசிப்போம். அவ்வளவுதான். விடுங்க சகோ.

    ReplyDelete
  8. இந்தப் போட்டியின் வெற்றியாளர்கள் டி.ஆர்.பி ரேட்டிங்கை வைத்தே நிர்ணயிக்கப்படுகிறார்கள். மற்றபடி வெற்றியாளர் நல்ல பாடகர் என்று அர்த்தம் இல்லை. இது ஒரு உட்டாலக்கடி போட்டி எனபது கிட்டத்தட்ட விரல்சூப்பி பார்க்கும் அனைவருக்கும் தெரிந்திருக்கும்.

    ReplyDelete