Sunday, October 7, 2012

ஒரு ஜென் கதை! ஒரு சொந்த ஜென் கவிதை!



ஒரு ஜென் குருவின் சீடன் ஒருவன், காய்கறி வாங்க் கடைக்குப் போய்க்கொண்டிருந்தான்.

அப்போது எதிரில் வந்த வேறொரு ஜென் மாணவன் ”எங்கு போகிறாய்?”எனக் கேட்டான்.

அதற்கு முதல் மாணவன், ”கால் போன போக்கில் போகிறேன் “எனக் கூறினான்.

மற்றவன் இதில் ஏதோ பெரிய பொருள் பொதிந்திருக்கிறது, நமக்குப் புரியவில்லை என்று எண்ணிப் பேசாமல் சென்று தன் குருவிடம் நடந்தைக் கூறினான்.

அவர் சொன்னார்”நீ அவனிடம் கால்கள் இல்லையென்றால் என்ன செய்திருப்பாய் என்று கேட்டிருக்க வேண்டும்” .

மறுநாள்,இவன் மீண்டும் அந்த மாணவனைப் பார்த்தான்”நீ எங்கு போகிறாய் என்று கேட்டால், கால்போன போக்கில் என்று சொல்வாய்.நான் கேட்கிறேன்....”எனச் சொல்லும்போதே அவன் ”இல்லை இன்று நான் காற்று வீசும் திசையில் போகிறேன்” என்று சொன்னான்.

மற்றவன் குழப்பமடைந்து எதுவும் பேசாமல் சென்று விட்டான்.

அவன் சென்று தன் குருவிடம் நடந்ததைச் சொன்னான்.

அவர் சொன்னார்”நீ,அவனிடம்,காற்று வீசவில்லையென்றால் என்ன செய்திருப்பாய் எனக் கேட்டிருக்க வேண்டும்”

மறுநாளும் அவன் போகும்போது அம்மாணவன் எதிரே வந்தான்.

இவன் அவனிடம் சொன்னான்”நான் எங்கு போகிறாய் என்று கேட்டால்,நீ,கால் போன போக்கில் அல்லது காற்று வீசும் திசையில் என்று சொல்வாய்;நான் கேட்கிறேன்….”

இவன் முடிக்கும் முன்பே அவன் சொன்னான்” இன்று நான் காய்கறி வாங்கப் போகிறேன்”

இதில் அடங்கியுள்ள ஜென் தத்துவம் புரிந்ததா?

புரியவில்லையா?

கீழே வாருங்கள்-
………………….
……………….
…………………..
உங்களுக்குப் புரிந்தால் கேட்டுத் தெரிந்து கொள்ளலாமே என நினைத்தேன்.

உங்களுக்கும் புரியவில்லையா?????????????


 அடுத்து ஒரு சொந்த ஜென் கவிதை!
---------------------------------------------------


சிகரத்தைத் தொட்டுப் பார்க்கத்தான் ஆசை

ஏறி முடித்ததோ ஒரு காத தூரமே

உச்சிக்குப் போவதற்கு நான்கு அடிகளே பாக்கி

ஒவ்வொரு அடியாய் எடுத்து  வைத்து

ஏழு ஆறாகி,ஆறு ஐந்தாகி,ஐந்து இன்று நாலாகி;

ஆனால் அதற்குள் நானோ நொந்து நூலாகி!!

தொடர்ந்து மேலேற வலிமை இல்லை எனக்கு.

எப்படியோ போகட்டும் சிகரம்

எனக்கேன் இந்த வேலை?!




14 comments:

  1. ஜென் கதைகளை புரிந்துகொள்வது என்பது, ஒவ்வொருவருக்கும் வேறுபடும். முழுமையாக புரிந்துகொள்வதென்பது, அது கொஞ்சம் ஓரளவிற்கு முளுமையடந்தவர்களுக்கே சாத்தியம். ஆனாலும் எந்த அளவிலான புரிதலுக்கும் அளவில்லா தத்துவத்தை கொடுக்கக்கூடியது ஜென் கதைகள்.

    இந்த கதையின் தத்துவம் தங்களது கவிதையின் இறுதிவரிகளில் மிளிர்வதாக உணர்கிறேன்.

    நல்ல ஒரு தத்துவத்தையும், அதைத்தொடர்ந்து அருமையான தத்துவ கவிதையையும் வாசித்த மன நிறைவுடன், இதுபோன்ற தங்களின் அடுத்த படைப்பிற்கு ஆவலுடன் காத்திருக்க ஆரம்பிக்கிறேன் நண்பரே!

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சுப்ரமணியன்.

      Delete
  2. A very good post,

    ReplyDelete
    Replies
    1. நன்றி இக்பால் செல்வன்

      Delete
  3. உங்காள் தளத்தி எழுத்துரு வித்தியாசமாக இருக்கிறதே!

    ReplyDelete
    Replies
    1. MS Word இல்தான் அடித்துக் காபி செய்கிறேன்!
      நன்றி

      Delete
  4. கதையும் அருமை, கவிதையும் அருமை குட்டன்! கலக்குங்கோ :))

    ReplyDelete
    Replies
    1. நன்றி மாத்தியோசி- மணி!

      Delete
  5. வந்தேன்;படித்தேன்;ரசித்தேன்;கருத்தும் சொன்னேன்!
    நன்றி மோகன்

    ReplyDelete
  6. குட்டன் ....

    ஜென் கதைகள் வித்தியாச மானவைகளாக இருந்தாலும்
    யோசிக்கத் துாண்டும் தன்மை வாய்ந்தவையாக இருப்பதாலே
    அதைப் படிக்க ஆவல் துாண்டும்.

    நல்ல பகிர்வு. நன்றி குட்டன்.

    ReplyDelete
  7. கதையும் கவிதையும் சிறப்புங்க தொடருங்கள்.

    ReplyDelete
  8. இரண்டுமே சிறப்பு... தொடர வாழ்த்துக்கள்... நன்றி...

    ReplyDelete