Friday, January 11, 2013

பெண்கள் கெட்டிக்காரர்கள்தான்!

முதல் பகுதி இங்கே

கணவனைக் குளிக்கச் செய்து மரத்தடியில் ஜபம் செய்யச் சொல்லி உட்கார்த்திவிட்டு,ஆற்றில் தானும் குளித்து விட்டு ஈரப்புடவையைக் காய வைத்துக் கொண்டிருந்த ரூபவதியின் மீது “சிவனின் ஆணைப்படி” மன்மதன்,பாணம் தொடுக்க ,ரூபவதி விரகதாபத்தில் ஆழ்ந்து, கட்டழகனாகக் கண்முன் தோன்றிய மன்மதனின் தோளில் சாய்ந்தாள்.

சக்தி திகைக்க,சிவன் நொடிப் பொழுதில் பிரிதிவிக்குப் பார்வையை மீண்டும் அருளினார். ரூபவதியின்  தகாத செயலைக் கண்டு வெகுண்ட பிரிதிவி ரூபவதியின் மீது சீற மன்மதன் மாயமானான்.

சிவகாமி சிரித்தாள்.பின்  கணவனிடம் சொன்னாள்”ரூபவதி இந்த சிக்கலிலிருந்து எப்படி மீள்கிறாள் எனப் பாருங்கள்”

“அடி பாதகி!உன்னை என்ன செய்கிறேன் பார்” என்று ஆக்ரோஷமாகத் தன் மீது பாய்ந்த பிரிதிவியிடம் ரூபவதி”நாதா!அந்த  ஆணைத் தழுவினால் உங்களுக்குக் கண்பார்வை மீளும் என ஒரு அசரீரி ஒலித்தது.உங்கள் பார்வையை மீட்கவே இந்தப் பாவத்தை நான் செய்தேன்; என்னை மன்னித்து ஏற்றுக் கொள்ளுங்கள்”எனக் கதறியவாறே பிரிதிவியை இறுகத் தழுவினாள்.பிரிதிவி நெகிழ்ந்தான்.

சிவன் சொன்னார்”பெண்கள் கெட்டிக்காரர்கள்தான்;பொல்லாதவர்களும்!”

பார்வதி கேட்டாள்”ஆனால் ஒரு அபலைப் பெண்ணை நீங்கள் இப்படிச் சோதிக்கலாமா?”

மகிழ்ச்சியாக வீடு திரும்பிய தம்பதியை உறவினர் அனைவரும் காளியின் அருள் எனப் போற்றி  வரவேற்றனர்.

(கதை சொல்லி---நண்பர் கிருஷ்ணகாந்த்)

4 comments:

  1. எதிர்பார்க்காத முடிவு!

    ReplyDelete
  2. Aaha!..
    congratz.
    Vetha.Elangathilakam.

    ReplyDelete
  3. நல்ல கதை! இதுகொஞ்சம் பகுத்தறிவு காரர்களால் அதிகமாக புனையப்பட்டிருக்கலாம்!

    ReplyDelete
  4. வித்தியாசமான கதையாக இருக்கிறதே!
    சுரேஷ் சொல்வதை ஆமோதிக்கிறேன்.
    பொங்கல் வாழ்த்துக்கள்

    ReplyDelete