Tuesday, January 8, 2013

எந்த லோகத்தில்,எந்த யுகத்தில் இருக்கிறீர்கள் ஆசாராம் பாபு?!

தில்லியில் மருத்துவ மாணவிக்கு நேர்ந்த கொடுமைக்குப் பின்,பல உணர்ச்சிகளற்ற ஜடங்கள் இஷ்டம் போல் தங்கள் கருத்துக்களைச் சொல்லத் தொடங்கினர்.அந்த வரிசையில் கடைசியாக இப்போது வந்திருப்பவர் ஆசாராம் பாபு என்பவர்.தென்னிந்தியாவில் இவரைப் பலருக்குத் தெரிய வாய்ப்பில்லை;ஆனால் இப்போது தெரிந்து கொண்டிருக்கிறோம் இந்த உளறல் திலகத்தை.

தில்லி சம்பவம் பற்றி அவர் சொல்லியிருக்கிறார்” அந்த ஐந்தாறு பேர்கள் மட்டும் குற்றவாளி களல்ல;அந்தக் கற்பழிப்பாளர்களைப் போல் அந்தப் பெண்ணும் குற்றவாளிதான்.அவள் அவர்களில் ஒருவன் கையைப் பிடித்துக்கொண்டு கடவுளின் பெயரைச் சொல்லி அவனைச் சகோதரன் என்று சொல்லி,மற்றவர்களையும் சகோதரர்கள் எனச் சொல்லி காலைப்பிடித்து யாசித்திருந்தால்  இது நடந்திருக்காது.”

வெறி கொண்ட மிருகங்கள்,அப்பெண்ணின் உடல் தவிர எதுவுமே கண்களில் தெரியாத காம வெறியர்கள் முன் வேண்டுகோள்கள் எடுபடுமா,ஸ்வாமி?

இவர் இதற்கு மேலும் சொல்லியிருக்கிறார்” ஒரு கை தட்டினால் ஓசை எழுமா?எழாது” 


தன் மானத்தைக்காக்கப் போராடி உயிரையே நீத்த  அந்தப் பயமில்லா புனிதப் பெண்ணைப் யும் குற்றவாளி என்கிறார் இவர்.

முதலிலேயே சரஸ்வதி மந்திரம் சொல்லியிருந்தால் அந்தப் பேருந்திலேயே ஏறியிருக்க மாட்டாளாம்!

ஸ்வாமி!நீங்கள் சொல்லும் சரஸ்வதி மந்திரம் எத்தனை பேருக்குத் தெரியும். கண்ணா காப்பாற்று எனச் சரணாகதி அடைந்தால்  முழமுழமாகக் கண்ணன் புடைவை அனுப்ப இது மகாபாரதக் காலமல்ல!

ஆதிமூலமே என்றழைத்தவுடன் சங்கு சக்கரத்துடன் கருடன் மேலேறி வந்து விஷ்ணு காப்பாற்ற இது புராண காலமல்ல

”இது நீங்கள் எல்லாம் சொல்லும் கலிகாலம். ”

ஆபத்தில் தன்னைக் காப்பாற்றிக்கொள்ளத் துணிச்சலுடன் போராடிய ஒரு பெண்ணைப் பற்றி
இப்படி பேசலாமா/”

வேதம் கற்றென்ன?சாத்திரம் படித்தென்ன?

                   

8 comments:

 1. இவரது பேச்சை 'பைத்தியக்காரனின் உளறல்' என்று விட்டுவிட வேண்டியதுதான்.

  ReplyDelete
 2. பொண்ணுங்க கையில லைசன்சொட துப்பாக்கி குடுத்து விடுவது தான் சரியாக இருக்கும்.

  ReplyDelete
 3. this man has said that those who speak against him are barking dogs!

  ReplyDelete
 4. இது விபத்தல்ல,திட்டமிட்ட சாதி ,உங்களின் வாதம் சரியே

  ReplyDelete
 5. அட பாவிங்களா! எது எதுக்கெல்லாம் இப்படி மாற்று கருத்துகள் சொல்வதென்று ச்சே!

  இதுவே இந்த பெண் இவரின் குடும்பத்தில் ஒருவராக இருந்திருந்தால்...........

  ReplyDelete
 6. படு முட்டாளின் உளறல் !!!

  ReplyDelete
 7. //வெறி கொண்ட மிருகங்கள்,அப்பெண்ணின் உடல் தவிர எதுவுமே கண்களில் தெரியாத காம வெறியர்கள் முன் வேண்டுகோள்கள் எடுபடுமா,ஸ்வாமி//

  Yes, possible.

  Whenever there s a possibility, it s not wrong to look out for that.

  An average Indian male looks upon all females except those w/in his family circle, as flesh to ravish - either directly or in imagination. Just as U do looking at cine actresses in ur imagination. Coz ur culture has practised ur thinking to consider them as flesh only, not ur sisters.

  Thus, it s obvious that the same Indian male s capable of having two views abt the females. It s therefore possible to change his negative perception of a particular stranger woman as flesh into positive one as person and sisterly. That s y in Delhi, the girls or the women address all men as baiyaa, or bayee sab. meaning thambi or annan. In TN, too, in Madurai, I hear that.

  This address does play - pl note - a little r more chemistry - the magnitude depends on the receiver - in the Indian male. The late jothi singh pande, who was raped and murdered, cd have resorted to addressing them as baiyaa or bayee sab, chodo. mey apka choti behen hu. (Anna Tambi, waan ungal thangai enna vidungkal)

  Instead, she immediately jumped to the idea of resistence, which makes u call her a brave heart.

  Definitely, a few, if not all, among the culprits, wd have relented and persuaded others to leave her.

  In desperate situations where u find yourself weaker than your enemies, u shd resort to all sorts of tricks to escape instead of enraging them knowing full well that they cd easily overpower u. If u do, there cant b a greater fool than u r. Shakespeare wrote:

  DISCRETION IS THE BETTER PART OF VALOR. Understand that for ur own safety. Valluvar too has written some kurals advising u to behave according to situations; don't underestimate ur enemies; and rate ur weakness and save urself. Only in Tamil cinema a Vijay or an Ajit can beat and kill 20 men at a time. In real life possible?

  There r plenty of good thinking in Swami Asharam's words which I leave now for fear of space crunch.

  ReplyDelete
 8. //அப்பெண்ணின் உடல் தவிர எதுவுமே கண்களில் தெரியாத காம வெறியர்கள் //

  This statement is wrong.

  Psychologists have said that a rape attempt was not an instantaneous act. It was well calculated and pre thought act.

  In this present case, the five men were not on the look-out for girls to rape. They were taking a vehicle for having passengers and rob some and fare some. The owner did not know where they took his vehicle. In Delhi, the owner wants money at the end of the day: that s all. It happens in Chennai autos too. More often, the licensed driver doesn’t drive it. He gives it to his friends some days.

  When the bus was emptied and the crew of the five men were taking the bus for the last ride, (it was 9.30 pm when buses go to depots ) this couple were standing at the bus stop for the last bus to come, no one was there, and the five men thought that the couple were their another easy prey. So, they took them in. Another? Yes, a passenger had filed a complaint with the police just before this sad episode of rape happened that he was robbed in the same bus (Ref to Dipankar Gupta article in TOI to know that).

  On seeing that the couple cd easily be attacked, robbed and her friend cd be easily disposed of, the men thought of sexually molesting her. Everything was pre thought. Nothing is emotional and on the spot act. In such cases, Swami Asaram's advice cd have helped her. A woman body doesn’t make the male immediately wanting to rape. The sexual urge needs some time to generate and becomes a overwhelming heat. It is possible to make them see sense or consider or to bring their human element out, as Swami has correctly hinted.

  Only where the men commit acts emotionally, there nothing can stop them: for e.g a man killing his wife for infidelity on seeing her with another man in bed. No power on earth can stop him. The act will be done. She will die. He will go to police himself and surrender. No room for others to interfere here.

  ReplyDelete