Thursday, January 31, 2013

அலிபாபாவும் 40 திருடர்களும் படத்துக்கு எதிர்ப்பு?!பத்திரிகையை எடுத்து முதல் பக்கத்தைப் பார்த்தான் அவன்.

கொட்டை எழுத்தில் செய்தி முன் நின்றது....

“அலிபாபாவும் நாற்பது திருடர்களும் படத்துக்கு எதிர்ப்பு;படம் தடை செய்யப்படுமா?”

செய்தியின் சாராம்சம் இதுதான்.....

அந்தப் படத்தில் வரும் நாற்பது திருடர்களும் இஸ்லாமியர்களாகச் சித்திரிக்கப்பட்டுள்ளதைச் சில அமைப்புகள் கடுமையாக எதிர்க்கின்றன.

இஸ்லாமியர்கள் அனைவரையும் திருடர்களாகக் காட்டும் ஒரு விஷமத்தனமான முயற்சி இது; எனவே படம் தடை செய்யப்பட வேண்டும்   என அந்த அமைப்புகள் போராட்டம் நடத்தி உள்ளன.

இது குறித்துத் தயரிப்பாளர் சொல்லும்போது “இது அரேபியாவில் நடக்கும் கதை எனவே அக்கதையில் உள்ளபடியே படம் எடுத்துள்ளோம்.நாங்களாக எதுவும் செய்யவில்லை;யார் மனத்தையும் புண்படுத்தும் நோக்கம் எங்களுக்குக் கிடையாது.” என்றார்

ஆனால் ஆர்ப்பாட்டக் குழுவினர் “கதை அரபுக்கதையாக இருந்தாலும்,படம் இந்தியாவில் எடுக்கப்பட்டிருக்கிறது.எனவே இஸ்லாமியர்களை இழிவு படுத்தும்படி எடுத்திருக்கக் கூடாது”என்று சொல்லியிருக்கின்றனர்.

இதன் காரணமாக படம் வெளியாவது தடைப் பட்டிருக்கிறது.

படத்தில் பெரும்பான்மை நேரம் திருடர்கள் வருவதால் அக்காட்சிகளை நீக்க முடியாது எனவே மாற்று வழி காண வேண்டும் என்ற நிலையில் மதசார்பற்ற நடுநிலையாளர்கள் சொல்லியிருக்கும் கருத்தாவது..”படத்தை வெட்டவோ, குறைக்கவோ வேண்டாம் .மாறாக இன்னும் கொஞ்சம் படம் எடுத்துச் சேர்க்கலாம்.திருடர்கள் இறந்தபின் ,கதாநாயகன் அவர்கள் அனைவரும் இஸ்லாமியர் போல் வேடம் அணிந்த இந்துக்கள் என்பதைக் கண்டு பிடிக்கிறான்!”

அதற்கு இந்துக்களிடமிருந்து எதிர்ப்பு வராதா என்று கேட்டதற்கு அவர்கள் பதில்....

“என்ன காமெடி பண்றீங்களா?!”
..........
முகத்தில் சில் என்று தண்ணீர்!
 
“விடிஞ்சு 3 மணி நேரம் ஆச்சு இன்னும் தூங்கறான் பார்.எந்திருடா!” அம்மாவின் குரல்..

பேப்பர் படித்துக் கொண்டே இரவு தூங்கியவன் கண் விழித்தான்….
 
எல்லாம் கனவா?!!

29 comments:

 1. நல்லா கனவு கண்டீங்க போங்க!

  ReplyDelete
  Replies
  1. கனவாகவே இருக்கட்டும்
   நன்றி சார்

   Delete
 2. ஏன் ஏன் இப்படி ...?

  ReplyDelete
  Replies
  1. எப்படி?
   நன்றி சசிகலாஜி!

   Delete
 3. வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 4. ஹா... ஹா... எப்படீங்க இப்படி எல்லாம்...!?

  ReplyDelete
 5. கனவு மெய்ப்பட வேண்டும் என்று சொன்னது ஏனோ நினைவுக்கு வருகிறது பாஸ்

  ReplyDelete
  Replies
  1. மறந்து விடுங்கள்.
   நன்றி

   Delete
 6. யோவ். இந்த பதிவ தூக்குயா. 23 குருப்புல ஒன்னு பாத்தகூட இந்த படத்தையும் தட பண்ணிட போறாங்க. அதுக்கு அம்மா கூட கூடையா பூவ நம்ம காதுல சுத்துறாமாதிரி பேட்டி குடுக்கும் .

  ReplyDelete
 7. 10 திருடர்கள் இந்துக்கள்.10 பேர் முஸ்லீம்கள்,10 பேர் கிறித்தவர்கள் மீதி 10 பேர் சீக்கியர்கள்..இப்படி இருந்தா எந்த பிரச்சனையும் இல்லையே.

  ReplyDelete
  Replies
  1. அப்பவும் ஏதாவது வரும்.
   நன்றி

   Delete
 8. சபாஷ் குட்டன், அந்தப் படம் இன்னைக்கு ரிலீஸ் ஆயிருந்தா நிச்சயம் உங்க கனவில் வந்தது தான் நடந்திருக்கும். haa........haa....haa.........

  ReplyDelete
 9. அருமையானகனவு! இனிமே தமிழ் நாட்டுல எந்த படமும் எடுக்க யோசிப்பாங்க போலிருக்கு! வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 10. அருமையான கனவு குட்டன்.
  காலநேரத்திற்கேற்ற மாதிரி. தொடருங்கள்..
  வேதா. இலங்காதிலகம்.

  ReplyDelete
 11. கலக்கல் பதிவு

  ReplyDelete
 12. கலக்கல் பதிவு

  ReplyDelete
 13. சகோ.குட்டன்,

  லூசுத்தனமான கனவு.
  கனவுகள் இப்படித்தான்... பொதுவா கேனத்தனமாத்தான் இருக்கும்.
  எல்லாருக்கும் இயல்பானதுதான் இது.

  ஆனால், இதுவே தமிழ் சினிமாவில் புனைவு என்றால்...?

  திருடர்கள் எல்லா மதத்திலும் உள்ளார்கள். எல்லா மதத்திலும் 'திருடாதே' என்ற கட்டளை உண்டு. திருடினால் தண்டனை உண்டு. இதில், இஸ்லாமிய மார்க்கம் மட்டும் ஒருபடி மேலே போய், திருடியவருக்கு மணிக்கட்டோடு கையை வெட்டவும் சொல்லி உள்ளது. ஆக, எல்லா மதத்து திருடர்களும் ஆதாரபூர்வமாக கைது செய்யப்பட்டு தண்டிக்கவும் பட்டிருக்கிறார்கள்.

  இந்நிலையில்.........

  எல்லா முஸ்லிம்களும் திருடர்கள் அல்ல. ஆனால், எல்லா திருடர்களும் முஸ்லிம்கள்தான் என்று சொல்லிக்கொண்டு... ஆயிரம் அலிபாபாக்கள் நாற்பதாயிரம் திருடர்கள் வந்து ஒன்றன் பின் ஒன்றாக வந்து கொண்டே இருந்தால்...?

  திருடர்கள் என்றாலே... அந்த பாத்திரத்தில் முஸ்லிம்களாக மட்டுமே சினிமா எடுத்தால்....?

  'நடப்பதைத்தானே காட்டுகிறோம்' என்றால்..?

  அடடே... உங்கள் பைத்தியக்காரத்தன கனவு இப்போது தமிழ் சினிமா லாஜிக்கில் அல்ட்ரா நிஜம் போலவே இருக்கே..?!?!?!?!?!?

  ஹா....ஹா....ஹா....

  கமலை விட உங்கள் விஸ்வரூபம் பெரிதாக உள்ளது. கமல் உங்களிடம் பிச்சை எடுக்க வேண்டும்.

  ReplyDelete
 14. குட்டன் ஐயா...
  எப்படிங்க இந்த மாதிரி வித்தியாசமான
  கனவெல்லாம் உங்களுக்கு வருது...?

  ReplyDelete