Wednesday, January 2, 2013

காலண்டர் காத்து நிற்கும்!



அறைகள் மூன்று என் வீட்டில்

ஆண்டு பிறக்கும் முன்பே

அங்கும் இங்கும் தேடி

அழகான காலண்டர் மூன்று வாங்கி

அறைகள் மூன்றிலும் மாட்டி விட்டேன்!

ஓர் அறையில் விநாயகர்

ஓர் அறையில் முருகன்

ஓர் அறையில் லட்சுமி

ஆண்டு முழுவதும்

ஐங்கரன் ஆசிவழங்க

முருகன் காத்து நிற்க

லட்சுமி அள்ளித் தருவாள்

நான் சும்மாவே இருக்கப் போகிறேன்

அவர்கள் அருள் இருக்க

அச்சமேன் எனக்கு?!

26 comments:

  1. புத்தாண்டு வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. உங்களுக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்

      Delete
  2. நிறைய பேர் இந்த நம்பிக்கையில் தான் வாழ்ந்துக்கொண்டிருக்கிறார்கள்...

    சும்மாயிருந்தாலும் கிடைக்கும்
    உழைத்தவருக்கு பேக மீதமிருப்பது...

    ReplyDelete
    Replies
    1. சரியாச் சொன்னீங்க சார்!

      Delete
  3. காலண்டர் தேடி ஏன் போனீங்க.அது இலவசமா கிடைக்கும்.

    ReplyDelete
    Replies
    1. முரளிதரன் சார்,வாங்கி என்று சொன்னது காசு கொடுத்து அல்ல,ஓசியில் வாங்கியே!
      நன்றி

      Delete
  4. ஆசிகள் கிடைக்கும் அருமையான உழைப்பிருந்தால்! நல்ல நம்பிக்கை! நல்ல கவிதை! நன்றி!

    ReplyDelete
    Replies
    1. சுரேஷ் சார்,நல்ல கருத்துக்கு நன்றி

      Delete
  5. mமூணு காலண்டர் மட்டும்தானா?

    ReplyDelete
    Replies
    1. கண்ணதாசன் சார்,காலண்டர் தவிர சுவரில் பல படங்கள் வேறு தொங்குகின்றனவே!இடம் வேண்டாமா என் குடிலில்?!
      நன்றி

      Delete
  6. எனக்கும் நல்லதா 4 காலண்டர் பார்சல் ப்ளீஸ்

    ReplyDelete
    Replies
    1. ராஜிம்மா!டெய்லியா,மந்த்லியா எது வேணும்?!
      நன்றி

      Delete
  7. சும்மாவே இருங்க வீட்டில அடி கிடைக்கும்

    ReplyDelete
    Replies
    1. சீனு,நீங்க வேற எதையாவது சொல்லிட்டுப் போக,அவ ஆரம்பிச்சிடுவா!
      நன்றி

      Delete
  8. //அங்கும் இங்கும் தேடி அழகான காலண்டர் மூன்று வாங்கி//

    காலண்டருக்கு முன்பு இருந்த மவுசு இப்போது இல்லை என நினைக்கிறேன். இருப்பினும் உங்கள் நம்பிக்கை வீண் போகாது.

    ReplyDelete
    Replies
    1. நடனசபாபதி சார்!ஒவ்வோர் ஆண்டும் சிலர் வாடிக்கையாகத் தினசரிக்காலண்டர்கள் கொடுத்து விடுகிறார்கள்;அவையே இவை!
      நன்றி

      Delete
  9. உழைப்பின் பலனை அவர்களிடம் விட்டு விட்டு சும்மா இருஙகள். மற்றவை தானே நடக்கும. அவ்வளவுதான் காலண்டர்கள் வந்ததா? இன்னும் நிறைய இருந்தால் எங்களுக்கு அனுப்பி விடுங்களேன்...

    ReplyDelete
    Replies
    1. பால கணேஷ் சார்!நான் மாட்டுவது தினசரிக் காலண்டர்கள் மட்டுமே!இது போதாதா?
      நன்றி

      Delete
  10. ஆமா காலண்டர் வியாபாரம் எப்ப ஆரம்பிச்சிங்க சொல்லவேயில்ல.

    ReplyDelete
    Replies
    1. உங்களுக்கு எத்தனை வேண்டும்?!
      நன்றி சசிகலா

      Delete
  11. இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. இனிய புத்தாண்டு வாழ்த்துகள் மாதேவி

      Delete
  12. உங்களுக்கு என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் குட்டன் ஐயா.

    ReplyDelete
    Replies
    1. இனிய புத்தாண்டு வாழ்த்துகள் அருணா செல்வம்

      Delete