Monday, January 21, 2013

பக்கத்து வீட்டுக்காரன் மோசமானவன்!



ஒரு மனிதன் பிரம்மாவைக் குறித்துத் தவம் இருந்தான்.

பிரம்மா அவன் முன் தோன்றி என்ன வேண்டும் எனக் கேட்டார்.

அவன் சொன்னான்நான் வசதியாக வாவேண்டும்;உயர்ந்த நிலை அடைய வேண்டும்; எல்லோரும் என்னைப் புகழ்ந்து கொண்டாட வேண்டும்”

பிரம்மா அவனுக்கு எதிரில் இரண்டு மூட்டைகளை நிரப்பிக் கொடுத்தார்.சொன்னார்”இதில் ஒரு மூட்டையில் உன் பக்கத்து வீட்டுக்காரனின் குற்றங்கள் நிரம்பியுள்ளன;இதை முதுகில் மாட்டிக் கொள்;இதை எப்போதும் மூடியே வைத்திரு;திறந்து நீயும் பார்க்க்க் கூடாது; பிறருக்கும் காண்பிக்கக்  கூடாது.மற்றொரு மூட்டையில் உன் குற்றங்கள் நிரம்பியுள்ளன; அதை முன்னால் தொங்க விடு;அடிக்கடி அதைத் திறந்து பார்”

அவன் இரண்டு மூட்டைகளையும் எடுத்துக் கொண்டான்;

ஆனால் பிரம்மா சொன்ன படி செய்யவில்லை.

மாறாகத் தன் குற்றம் உள்ள மூட்டையை முதுகில் கட்டிக் கொண்டு அதை இழுத்து மூடி விட்டான்.

பக்கத்து வீட்டானின் குற்றங்கள் நிறைந்த மூட்டையைமுன்புறம் தொங்க விட்டான்;

அடிக்கடி அதைத் திறந்து பார்த்தான்;பிறருக்கும் காண்பித்தான்.


அவன் எதிர் மாறாகச் செய்ததனால்,எல்லாம் மாறி விட்டது; வசதி இழந்தான்;அவன் நிலை தாழ்ந்தது,எல்லோரும் அவனை இகழ்ந்து பேசினர்.

“ஏதிலார் குற்றம்போல் தங்குற்றங் காண்கிற்பின்
 தீதுண்டோ மன்னும் உயிர்க்கு”—குறள் .190

15 comments:

  1. அருமையான கதையையும் அதற்கு பொருத்தமான குறளையும் தந்தமைக்கு நன்றி

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஐயா!

      Delete
  2. கதையும், குறளும் நன்று....

    ReplyDelete
    Replies
    1. நன்றி வெங்கட் நாகராஜ்

      Delete
  3. குறளுக்கேற்ப கதை சிறப்பு.த.ம.6

    ReplyDelete
  4. ஆஹா.... குறளுக்கேற்ற கதை.
    அருமை குட்டன் ஐயா.
    த.ம. 7

    ReplyDelete
  5. பக்கத்து வீட்டானின் குற்றங்கள் நிறைந்த மூட்டையை ? இது நிறைய பேருக்கு பொருந்தும்

    ReplyDelete
  6. குறளுக்கேற்ற கதை வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  7. கதையும் குறளும் நன்றாக இருக்கின்றது.

    ReplyDelete