Friday, January 18, 2013

புத்தகச் சந்தையும் கால் வலியும்!


இன்று மாலை 4 மணி அளவில் புத்தகச் சந்தை நடக்கும் மைதானத்தை அடைந்தேன்.

அண்ணாசாலை நுழை வாயிலிலேயே தானியிலிருந்து இறங்கி,உள்ளே நடக்க ஆரம்பித்தேன்.

நான் எதிர்பார்க்கவில்லை உள்ளே அவ்வளவு தொலைவு நடக்க வேண்டும் காட்சியை அடைய என்று!

உள்ளே நுழையும் முன், முன் ஜாக்கிரதையாக ,சின்ன விஷயத்தை முடித்துக் கொண்டேன்.

டிக்கெட் வாங்கினேன்,உள்ளே சென்றேன்.

இன்று அவ்வளவு புழுக்கமாக இல்லை.


                                                இங்கு என்ன புத்தகம் வாங்கினேன்?


      ஸ்டால் 43,44----பதிவர்கள் புகலிடம்;இன்று பதிவர்கள் யாரும் இருந்ததாகத் தெரியவில்லை.

ஒரு ரவுண்ட் அடித்து விட்டு,சில புத்தகங்கள் வாங்கி விட்டு,சில புத்தகங்களைக் குறித்துக் கொண்டு 6.30 மணி அளவில் புறப்பட்டேன்.

ஏற்கனவே கால் வலிக்க ஆரம்பித்து விட்டது.உள்ளே வரும்போது இருந்ததை விட இப்போது பாதை நீண்டு விட்டது.

ஒரு வழியாக சிரமப்பட்டு வெளியே வந்தேன்.

மீண்டும் தானி,வீடு!
வாங்கியவை--

1.இ.பா.வின் தந்திர பூமி.

2.ஜெயகாந்தன் சிறுகதைகள்

3.அசோகமித்ரனின் தண்ணீர்

4.சுந்தர ராமசாமியின் ஜே ஜே சில குறிப்புகள்

5.கி.ரா.வின் கோபல்ல கிராமம்

6.கீதா பிரஸ்ஸில் சில சின்னப் புத்தகங்கள்

நாளை மீண்டும் போகலாம்!

உள்ளே ஒரு காபி,ஒரு ஆப்பிள்ஜூஸ் குடித்தேன்!

18 comments:

  1. தொடரட்டும் புத்தக வேட்டை...

    த.ம. 2

    ReplyDelete
  2. பதிவர்களை சந்திக்கவே நாளை படையெடுக்கும் நாங்கள் வருக மறுமுறை தோழரே.

    ReplyDelete
    Replies
    1. முடிந்தால்?!
      நன்றி சசிகலா

      Delete
  3. நானும் இன்று 3.30 மணியிலிருந்து 6 மணிவரை கால்வலியோடு அங்கு தான் இருந்தேன்.காபியும்,மேங்கோ ஜூஸும் குடித்தேன்.செயின் போட்டு கட்டி வைத்திருந்த தண்ணீரும் குடித்தேன்.

    ReplyDelete
    Replies
    1. நேருக்கு நேர் பார்த்திருக்கக்கூடும்!
      நன்றி அமுதா கிருஷ்ணா

      Delete
  4. Replies
    1. தெரிந்துகொள்ளவில்லை!
      நன்றி முரளிதரன்

      Delete
  5. நாளை மீண்டும் ‌போகலாம்னு எழுதியிருக்கீங்க குட்டன். மதியம் 1.30க்கு மேல மாலை 5 வரை நான் டிஸ்கவரில இருப்பேன். நான் மட்டுமில்ல... சிங்கப்பூரிலிருந்து தம்பி சத்ரியன் வர்றதால நிறையப் பதிவர்கள் அங்க இருப்போம். ஒரு மினி பதிவர் சந்திப்பு நடக்கும். தவறாம வந்து ஹலோ சொல்லுங்க...

    ReplyDelete
    Replies
    1. முடிந்தால் நானும் வர முயற்சிக்கிறேன் வாத்தியரே

      Delete
    2. வர இயலாமல் போய்விட்டது அய்யா
      நன்றி

      Delete


  6. நானும் வருகிறேன்!

    ReplyDelete
    Replies
    1. வாய்ப்பைத் தவற விட்டு விட்டேன்!
      நன்றி ஐயா

      Delete
  7. புத்தகக் கண்காட்சியில் சந்திப்போம்.

    ReplyDelete
    Replies
    1. மன்னிக்கவும்;வர இயலவில்லை
      நன்றி

      Delete
  8. வாழ்த்துக்கள்! பதிவர்களை சந்தித்து பதிவெழுத! இன்று என் தளத்தில் அண்டப்புளுகன் ஆகாசப்புளுகன்!http://thalirssb.blogspot.in/2013/01/blog-post_19.html நான் தான் மாஸ் ஹீரோ! பவர்ஸ்டார் அட்ராசிட்டி!http://thalirssb.blogspot.in/2013/01/blog-post_9185.html

    ReplyDelete