Saturday, January 26, 2013

மாடி வீட்டு ஏழை!



தமிழ்த் திரையில் மக்கள் திலகமும்,நடிகர் திலகமும் கோலோச்சி வந்த காலத்தில், அவர்களுக்கு இணையாக,சில நேரம் அதிகமாகவும் சம்பளம் வாங்கிய நடிகர்.

பின்னணிப் பாடல்களில் யோடலிங்(கிஷோர் குமார் போல்) பிரபலப் படுத்தியவர்.

பாடி நடிக்கும் நடிகர்.ஆங்கில நடனம் ஆடத் தெரிந்தவர்.

நகைச்சுவையில் தனக்கென ஒரு பாணி வகுத்தவர்.

ஒரு அரச வாழ்க்கை வாழ்ந்தவர்.

ஆனால் மறையும்போது மிகுந்த ஏழ்மை நிலை அடைந்தவர்.

சென்னையின் முக்கிய இடமான கிரீன்வேஸ் சாலையில்,20 கிரவுண்டு நிலத்தில் ஒரு பிரம்மாண்டமான வீடு கட்டி வந்தவர்,

அந்தவீட்டு மாடிக்கே நேராக காரில் செல்லும்படி வசதியுடன் கட்ட எண்ணியவர்.

மாடி வீடு கட்டி வந்த அவர் ஏழையாக இறந்தார்.

நீதி மன்றம் அவரது சொத்தைப் பறிமுதல் செய்தது.

அவர் அப்போது தயாரித்து வந்த படத்தின் பெயர் “மாடி வீட்டு ஏழை”

தீர்க்கதரிசனமா?தன்னைக் குறித்தே அப்பெயர் வைத்தாரா?

உச்சத்தில் வாழ்ந்தவர் நிலை தாழ்ந்த காரணம் என்ன?

நகைச்சுவை நடிகரான அவர் வாழ்க்கையே சோக மயமானதுதான்.

மணமான சில மாதங்களிலேயே மனைவியை அவள் காதலனுடன் அனுப்பிப் புரட்சி செய்தவர்.

அவர் எடுத்து வந்த மாடி வீட்டு ஏழையில் நடித்து வந்தவர்,திரு.எம்.ஜி.ஆர் அவர்கள்.

அவருடனான கருத்து வேறுபாட்டின் காரணமாக படம் நின்று போய்,பண இழப்பு ஏற்பட்டு மாடி வீட்டு ஏழையாக இறந்தவர்.

அவரது இறுதிச் சடங்குகளுக்கான செலவை நடிகர்திலகம் அவர்கள் ஏற்றார்.

இத் தகவல்களைத் தருகிறது ” நகைச்சுவைச் சக்ரவர்த்தி  ஜே.பி.சந்திரபாபு” என்ற தலைப்பிடப் பட்ட ,திரு.சொர்ணராஜன் எழுதிய அவரது வாழ்க்கை வரலாறுப் புத்தகம்.

பரிதாபமான வாழ்க்கை.

6 comments:

  1. திறமை இருந்தாலும் மனம் போன போக்கில் வாழ்ந்தவர் என்று நினைக்கிறேன்.

    ReplyDelete
  2. எல்லோரையும் சிரிக்க வைத்து ஏழ்மையை கொண்டுசென்றாரா ? நானும் வருந்துகிறேன்

    ReplyDelete
  3. நகைச்சுவை நடிகர் சந்திரபாபு அவர்கள் பற்றி அநேகம் பேருக்குத் தெரியாத செய்தியைத் தந்திருக்கிறீர்கள். நன்றி! அவர் ஏன் ‘மாடி வீட்டு ஏழை’ ஆனார் என்பதை 1970 களில் ‘பொம்மை’ என்ற சினிமா இதழில் தொடராக எழுதியிருந்தார். அதில் சிலரின் உண்மை முகத்தை தோலுரித்துக் காட்டியிருந்தார். அவருக்கு அந்த நிலை ஏற்பட காரணமாக இருந்தவர்களும் இறக்கும்போது கஷ்டப்பட்டுத்தான் இறந்தார்கள் என்பது வரலாறு. ‘அரசன் அன்று கொல்வான் தெய்வம் நின்று கொல்லும்.’ என்பது உண்மைதான்.

    ReplyDelete
  4. மற்றவர்களை சந்தோஷப் படுத்திய மனிதர் - கஷ்டத்தில் இறந்த மனிதர்....

    ReplyDelete
  5. நகைச்சுவையில் சிரிக்கவைததவர் அவர் வாழ்வில் சோகம்.

    ReplyDelete