Thursday, February 9, 2012

ஐன்ஸ்டைனின் சார்பியல் கோட்பாடு!


ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் எங்கு சென்றாலும் அனைவரும் அவரிடம் அவரது சார்பியல் கோட்பாடு பற்றியே கேட்பார்கள்.ஒரு முறை ஒரு கூட்டத்தில் சார்பியல் பற்றிக் கேட்ட கேள்விக்கு அவர் இவ்வாறு பதிலளித்தார்”நீங்கள் ஒரு சூடா அடுப்பின் மீது ஒரு விநாடியே கை வைத்தாலும் அது ஒரு மணி நேரம்போல் தோன்றும்.ஆனால் நீங்கள் ஒரு அழகான பெண்ணுடன் பொழுது போக்கும்போது.ஒரு மணி நேரம் என்பது ஒரு விநாடியாகத்தோன்றும்.இதுதான் சார்பியல்!” 

எப்படி விளக்கம்!!

ஒரு முறை ஐன்ஸ்டைன் ரயிலில் பயணித்துக் கொண்டிருந்தபோது,பரிசோதகர் வருவதைப் பார்த்துப் பயணச்சீட்டுக்காகத் தன் சட்டைப்பயில் தேடினார்.பின் கால்சட்டைப்பையில் தேடினார்.அதன் பின் தன் கைப்பயில் தேடினார் .சீட்டுக் கிடைக்கவில்லை.பரிசோதகர் சொன்னார்”ஐயா!உங்களை எல்லோருக்கும் தெரியும்.நீங்கள் நிச்சயமாகச் சீட்டு எடுத்திருப்பீர்கள். கவலை வேண்டாம் “ எனச் சொல்லிச் சென்று விட்டார்.சிறிது தூரம் சென்ற பின் திரும்பிப் பார்க்கையில்,ஐன்ஸ்டைன் இருக்கைக்கு அடியில் குனிந்து தேடிக் கொண்டிருப்பதைப் பார்த்தார்.அவரிடம் வந்து”ஐயா!நான்தான் கவலை வேண்டாம்  என்று கூறினேனே”என்றார்.

அதற்கு ஐன்ஸ்டைன் சொன்னார்”எல்லாம் சரிதான்.ஆனால் நான் எங்கு போய்க்கொண்டிருக்கிறேன் என்பதை மறந்து விட்டேனே!”

ஐன்ஸடைனின் கூட்டங்களுக்கு அவரது கார் ஓட்டுநரும் சென்று கடைசி வரிசையில்அமர்ந்து கேட்டுக்கொண்டிருப்பார்.ஒரு முறை அவர் ஐன்ஸ்டைனிடம் சொன்னார்.”உங்கள் பேச்சைப்பல முறை கேட்டதில்,இப்போது நானே அது போல் பேச முடியும்அடுத்த கூட்டத்தில்,ஓட்டுநர் பேச,ஐன்ஸ்டைன் ஓட்டுநர் உடையணிந்து கடைசி வரிசையில் அமர்ந்தார்.ஓட்டுநர் அழகாகப்பேசி முடித்த பின் கூட்டத்தில் ஒருவர் எழுந்து ஒரு கடினமான கேள்வி எழுப்பினார்.ஓட்டுநர் சொன்னார்இது மிக எளிதானது இதற்குப் பதில் கடைசி வரிசையில் இருக்கும் என் ஓட்டுநரே சொல்வார்!”

Wednesday, February 8, 2012

வளரிளம்பருவம்!

ஆதௌ கீர்த்தனாரம்பத்திலே.குட்டன்,குட்டன் னு ஒரு பையன் இருந்தான்.இரண்டு தடவை சொன்னாலும் ஒரு பையன்தான்! அவன் இந்த வலைப்பூ வகையறாவெல்லாம் படிச்சிண் டிருந்தான்.திடீர்னு அவனுக்கும் ஒரு வலைப்பூ ஆரம்பிக்க ஆசை வந்தது! வரலாமோ? வந்துடுத்து.ஒரு வலைப்பூ ஆரம்பிச்சு அதுல ஒரு பதிவும் போட்டுட்டான்.

அப்பறம்தான் யாரோ அவனைக் கேட்டா”என்ன குட்டா?நேரா பதிவுக்குப் போயிட்டயே?
முதல்ல  அறிமுகம் அது ,அது எல்லாம் வேண்டாமா ன்னு.அவன் சொன்னான். “அறிமுகமெல்லாம் பண்ணிக்க நான் என்ன பெரிய ஆளா?என்னவோ எழுதணும்னு தோணித்து எழுதறேன். படிக்கறவாளுக்குப் பிடிச்சிருந்தா சரி.பின்னூட்டம் போடறவா போடட்டும்.எனக்கும் எழுதணும்னு ஒரு ஆசை அவ்வளவுதான் அப்படின்னு சொல்லிட்டான்.

”எனக்கு 15 வயசா இருந்தபோது தமாஷா டயரி எழுதினேன்.அதை இன்னிக்கிப் பொறட்டிப் பாக்கறச்சே சில சுவாரஸ்யமான சம்பவங்கள் ஞாபகம் வந்தது.அது ஒரு ரெண்டுங்கெட்டான் வயசில்லையா?எல்லாப்பெண்களுமே அழகாத்தோணின காலம் அது. அது வளரிளம் பருவம்.அந்த உணர்ச்சிகளே சுகமானவைதானே?” அப்படின்னுட்டான்.

சரி,தொடர்ந்து கலக்குன்னு சொல்லிட்டா.

பாப்போம்,கலக்கப்போறானா,கலங்கப்போறானான்னு! 

குட்டன்: பிள்ளையாரப்பா!பால்,தேன்.பாகு,பருப்பு(என்ன பருப்பு-கடலையா,முந்திரியா,பாதாமா) இதெல்லாம் நான் தரவில்லை.நீயும் எனக்குச் சங்கத்தமிழெல்லாம் தரவேண்டாம். சாதாத் தமிழே தா!

Sunday, February 5, 2012

குட்டனின் நாட்குறிப்பிலிருந்து

மே,16,1992.

இன்னிக்கு என்னவோ காத்தாலலேருந்தே,மனசு பர,பரன்னு இருந்தது.ஏன்னு இப்பத்தான் தெரியறது.

வாசல்ல நின்னு பாத்துண்டே இருக்கேன்,அடுத்தாத்து வாசசில ஒரு லாரி வந்து நிக்கறது. காலியாயிருந்த ஆத்துக்குப் புதிசா குடி வரா போலிருக்கு.லாரிக்குப் பின்னாலயே ஒரு காரும் வந்து நிக்கறது.காரிலிருந்து ஒரு மாமா,மாமி அவாளோட அழகா ஒரு பொண்ணும் எறங்கறா.அவ்வளவு அழகா ஒரு பொண்ணை நான் பாத்ததே இல்லை.இத்தனை நாள் கோடியாத்துக் கோகிலாதான் ரொம்ப அழகுன்னு நெனச்சிண்டிருந்தேன்.அவளெல்லாம் இவ கால் தூசிக்குக் காணமாட்டா.

மாமியும் பொண்ணும் கதவைத்தெறந்து உள்ள போயிட்டா.போகும்போதுஅந்தப் பொண்னு என்னைப் பாத்தாளோ?அப்படித்தான் இருந்தது.மாமா வாசல்ல நின்னு லாரியில இருந்து சாமானையெல்லாம் இறக்கறதைப் பாத்துண்டிருந்தார்.

அம்மா கூப்பிடறா.போய் எதுக்குன்னு பாத்துட்டு வறேன்.