Thursday, October 18, 2012

மனைவி இல்லாத ராத்திரிகள்! !

எவ்வளவு நேரம்தான் சேனல்களை மாற்றி மாற்றி எதையாவது பார்த்துக் கொண்டி ருப்பது?

எதிலும் மனம் செல்லவில்லை.

மணி பார்க்கிறேன்;

11.00 ஐ நெருங்கிக்கொண்டிருக்கிறது.

வழக்கமாக 10.00 மணிக்குத் தூங்கி விடுவேன்

ஒரு மணிநேரம் அதிகம் சென்றும் உறக்கம் வரவில்லை.

அதற்காக இரவு முழுவதும் விழித்துக் கொண்டே இருக்க முடியுமா!

பின் நாளை அலுவலகத்தில் தூக்கம் வந்து தொலைக்குமே!

டி வியை அணைத்து விட்டுக் கட்டிலில் படுக்கிறேன் தலையணையை அணைத்தபடி.

இன்று அதைத்தான் அணைக்க முடியும்.

வழக்கமாய் தூங்கும் முன் மனைவியின் இதழ்களை என் இதழ்களால்   ஒற்றி எடுத்து 

குட்நைட் சொல்லி விட்டுத்தான் தூங்குவேன்.இன்றோ?

ஏதோ வெறுமை;மனத்தில் அமைதியின்மை;எதையோ இழந்த தவிப்பு.

புரண்டு புரண்டு--------

படுக்கை கசங்குகிறது;உறக்கம் வரவில்லை.

மணி 12 அடிக்கிறது

எங்கிருந்தோ ஒரு நாயின் ஊளை!

பஞ்சமத்தில் சுருதி சுத்தமாய்!

ஏதாவது பிரிவுக்கு அழுகிறதா?

ஊளை மறைந்து இப்போது ஏதோ கருவி இசை.

நாகஸ்வரமா,மாண்டலினா,குழலா?

ஒரு கலவை!

ஆனால் இந்த நேரத்தில் என்ன இது?

பூபாளராகம் இசைக்கப்படுகிறதே.?

ஏற்கனவே உறக்கம் இல்லை.

இந்த அழகில் காலை ராகமான பூபாளம் கேட்டால் எங்கே தூங்குவது?

புரண்டு,புரண்டு.............

தொடர்ந்து ஒலிக்கும் பூபாளம்!

ஏன்,ஏன்?

தூக்கம் தொலைந்த இரவாகிறது.

மணி பார்க்கிறேன்

5.00 மணி.

பூபாளம் நின்று விட்டது

லேசாக உறக்கம் வருகிறது

மீண்டும் இசை! ஆனால் இம்முறை நீலாம்பரியாக வருகிறது

மெல்ல,மெல்ல உறக்கத்தில் ஆழ்கிறேன்..

ட்ரி...ங்,ட்ரி...ங்

திடுக்கிட்டு விழிக்கிறேன்.

என் தொலை பேசிதான்.

தூக்கக் கலக்கத்துடன் எடுக்கிறேன்.”ஹலோ”

”என்ன !மணி 7 ஆகுது இன்னும் தூக்கமா?ஆபீஸ் போற ஐடியா இல்லையா?நான் இல்லைன்னா அவ்வளவுதான்;தூக்கம்தான்.எப்படித்தான் உங்களுக்கு இப்படித் தூக்கம் வருதோ;நான் என்னடான்னா நேத்து ராத்திரி பூரா உங்க நினப்பிலேயே தூங்காம இருந்திருக்கேன். நீங்க நல்லாத் தூங்கறீங்க?”

என்ன அநியாயம்?நடந்தது என்ன என்று தெரியாமலே!

நான் என்ன சொன்னாலும் அவள் ஏற்றுக் கொள்ள மாட்டாள்.

அவள் மட்டுமல்ல.

எல்லாத் தங்கமணிகளும் அப்படித்தான்!

ரங்கமணிகளின் தவிப்பைப் புரிந்து கொள்வதே இல்லை!

இந்தக்கதையை யாருக்கு ச் சமர்ப்பணம் செய்வது?

ரங்கமணிகளுக்கா?தங்கமணிகளுக்கா?

டிஸ்கி:மனைவி இல்லாத இரவுகள் எனத்தலைப்புக்கொடுக்க எண்ணினேன்.ஆனால் ராத்திரிகள் என்பதில் அழுத்தம் அதிகம் இருப்பது போல் தோன்றியது!

35 comments:

 1. "இரவு", "ராத்திரி" அருமை நண்பரே!

  ReplyDelete
 2. நமக்கு அனுபவம் இல்லப்பா......
  நாம இன்னும் யூத்துதான்..........

  ReplyDelete
  Replies
  1. சீக்கிரம் பண்ணிக்குங்க!
   நன்றி

   Delete
 3. நான் இன்னும் சின்னப்பையன்.

  கல்யாண ஆசையைத் தூண்டி விட்டுட்டீங்களே.

  இது நியாயமா?

  ReplyDelete
 4. பதிவு ரொம்பவும் பிடிச்சிருக்கு. ஒரு ஓட்டும் போட்டுட்டேன்!

  ReplyDelete
 5. எல்லாரும் நம்மள மாதிரியே நல்லவங்களா இருக்காங்களே...:) Nice...Hoefully your better half reads this...Sweet dreams...

  ReplyDelete


 6. சம்சாரம் மட்டுமல்ல மின்சாரம் இல்லனாலும் இந்த கதிதான்!

  ReplyDelete
 7. தூக்கம் பிடிக்காத இரவுகள் இப்படித்தான் பாடாய்ப்படுத்துகின்றன.

  ReplyDelete
 8. நான் ஏதோ அந்த மாதி கதைன்னு நினைச்சேன் தலைப்பை பாத்ததும்..ஆனால் நன்று

  ReplyDelete
 9. நாய் <[ஏதாவது பிரிவுக்கு அழுகிறதா?]>

  செம பீல் டச் குட்டன் (கண்டினுவிட்டி கலக்கல்)

  ReplyDelete
 10. வீட்டம்மாவா அப்படிச் சொன்னாங்க நம்பவே முடியல

  ReplyDelete
 11. \\மனைவி இல்லாத இரவுகள் எனத்தலைப்புக்கொடுக்க எண்ணினேன்.ஆனால் ராத்திரிகள் என்பதில் அழுத்தம் அதிகம் இருப்பது போல் தோன்றியது! \\ ஆமாம் ஆமாம், அப்பத்தான் மலையாள 'A' படத்தோட எபக்டு வருது.............

  ReplyDelete
 12. ada poopa, TASMAC poo thookkam varum

  ReplyDelete
 13. நல்ல கில்மா பார்ட்டி சார் நீங்க! ரொம்ப எதிர்பார்த்து ஏமாந்து போய்டேன்! :-)

  ReplyDelete