எதுவும்
சாத்தியமே!
எத்தனை
ஆசைகள்,எத்தனை கனவுகள்
இத்தனையும்
என்று நிறைவேறும்?
எண்ணுவதெல்லாம்
ஈடேறுவதும் இல்லை
என்ன
காரணம்?விதியா! விவரமின்மையா?
செம்மையாய்ச்
செய்யத் திறமையின்யா?
ஆசைப்
படுவது குற்றமா,இலக்கை
அடைய
எண்ணுவதும் பாபமா?
வானமே
எல்லை என்றுரைப்பர் பலர்
விழுந்தால்
வலியும் ஒரு தொல்லை
என்னால்
முடியுமா?
பயங்களைக்
கொன்று
தடைகளைத்
தகர்த்து
வெற்றி
பெற?
உள்ளத்தில்
உறுதியும்
உணர்வில்
செறிவும்
என்றும்
இருப்பின்
எதுவும் சாத்தியமே!
.........................................................
இப்போதெல்லாம்
பத்திரிகையில் வரும் பல செய்திகள் சுவாரஸ்யமாக ஒரு ட்விஸ்ட்டோடு இருக்கின்றன!
அது
போல இரு செய்திகள்-
1)
வருமானத்தை மறைத்து வரி ஏய்ப்புச் செய்வோரைப் பார்த்திருக்கிறோம்.
வந்து சேராத வருமானத்துக்கு முன்வரி கட்டுபவரைப்
பார்த்ததுண்டா?!இதோ இருக்கிறார் பேட்மிண்டன் வீராங்கனை
சாய்னா நேவால்!டெக்கான் கிரானிகிள் பத்திரிகை,
ஒப்பந்தப்படி அவருக்குத் தரவேண்டிய ரூபாய்3-4 கோடியை இன்னும்
தராத போதும்,அந்தத் தொகைக்கு முன்வரியாக 70 லட்சம் கட்டிவிட்டாராம் சாய்னா! அதிசயம் ஆனால் உண்மை!
2)
ஒருவர் சோதிடரைப்பார்த்துத் தன் எதிர்காலம் பற்றித் தெரிந்துகொள்ளச்
சென்றார்.திரும்பி வரும் வழியில் விபத்துக்குள்ளாகி உயிரிழந்தார்!(சோதிடர் இவ்வாறு
நடக்கும் என்று சொல்லியிருப்பாரா?!)
செய்தி
:இந்தியாவின் நேரங்கள்:11-10-12
.......................................................
முல்லா
நசிருத்தீன் கதை ஒன்று.
முல்லாவிடம்
ஒரு வழக்கு வந்தது.
ஒரு
பெண் வழக்குரைத்தாள்”நான் சாலையில் சென்று
கொண்டிருந்தபோது முன்பின் தெரியாத இந்த ஆள் என்னைக்கட்டிப் பிடித்து முத்தமிட்டு
விட்டான். எனக்கு நியாயம் தேவை.
முல்லா
சொன்னார்”உனக்கு நியாயம் வழங்கப்படும்.என் உத்தரவு இதுதான்,நீ
அவனைக் கட்டிப்பிடித்து முத்தமிட்டுப் பழி தீர்த்துக்கொள்!”
...........................................................
பெண்ணின்
டி சர்ட்டில் காணப்பட்ட வாசகம்
“மன்னிக்கவும்;என்
முகம் மேலே இருக்கிறது”
.............................................................
உள்ளத்தில் உறுதியும்
ReplyDeleteஉணர்வில் செறிவும்
என்றும் இருப்பின்
எதுவும் சாத்தியமே!
நம்பிக்கை வரிகள் தொடருங்கள்.
சாய்னாவின் நேர்மை எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு. இவரை முன்னுதாரணமா அனைவரும் எடுத்துக்கணும். டிஷர்ட் வாசகம் அருமை. எதுவும் சாத்தியமே என்று உரைத்திட்ட கவிதையும் மனதில் இடம் பிடித்தது. அழகிய ராகமாலிகை நண்பா.
ReplyDeleteநன்றி பாலகணேஷ்
Deleteஅருமையான ராக மாலிகை
ReplyDeleteகுறிப்பாக கடைசி..
தொடர வாழ்த்துக்கள்
நன்றி ரமணி
Deletetha.ma 6
ReplyDeleteநம்பிக்கை வரிகளுக்கு நன்றி... (TM 8)
ReplyDeleteநன்றி தனபாலன்
Deleteகதம்ப மாலை! கவிதை சோலை!
நன்றி புலவர் ஐயா
Deleteகவிதையை ரசித்தேன்.
ReplyDeleteநன்றி.
நன்றி அருணா செக்வம்
Deleteநல்ல பகிர்வு... சாய்னா நேவால் பாராட்டப்பட வேண்டியவர்....
ReplyDeleteநன்றி வெங்கட்
Delete