அக்டோபர்,19.1965
இரவு
மணி 9.00.
இந்தியாவுக்கும்
பாகிஸ்தானுக்கும் போர் நடக்கும் காலம்.
சியால்கோட்டில்
இருந்த எதிரி இலக்கை நோக்கி,ஆறு இந்திய
ஜவான்கள்,ஊர்ந்து முன்னேறிக்கொண்டிருகிறார்கள்.
வான்
வெளித் தாக்குதலில்,கண்ணி வெடிகள் வெடிக்கின்றன.
அறுவரும்
காயமடைகிறார்கள்.
அதில்
ஒருவர்,பெயர் ஷெரிஃப் ,கடுமையாகக் காயம் அடைகிறார்.
மருத்துவ
மனையில் அவர் உயிரைக்காப்பாற்றுவதற்காகச் சிதைந்து போன அவர் கைகளை முழங்கை வரை
வெட்டி விடுகிறார்கள்.
அதுமட்டுமல்ல.
அவரது
இரண்டு கண்களும் காயப்பட்டு அவர் பார்வை இழக்கிறார்.
அவர்
வயது—28.
இந்நிகழ்வுக்கு
இரண்டு ஆண்டுகளுக்கு முன் , அவரது நண்பன் வீட்டுக்குச் சென்றபோது அவன் சகோதரி
கமலத்தைச் சந்தித்தார்.
இருவரும்
காதல் வயப்பட்டனர்.
இப்போது
இது நடந்து விட்டது.
அவர்
கமலத்திடம் திருமணத்தைப் பற்றி மறந்து விட சொன்னார்.
ஆனால்
அவள் கேட்கவில்லை.
கோவையில்
அவர் சிகிச்சை பெறுவது அறிந்து அங்கு சென்று அவருக்குப் பணிவிடை செய்தாள்.
அவர்
தமிழ் முஸ்லிம்.அவள் மலையாள இந்து.
அதானால்
எழுந்த எதிர்ப்புகளைப் புறந்தள்ளி 1967
இல்அவள் அவரையே மணந்தாள்.
இப்போது
அவருக்கு வயது 75;கமலத்துக்கு 70.
ஒரு பையன்(38)இரண்டு பெண்கள்.
இன்றும்
அதே காதலுடன் வாழ்கிறார்கள்.
நினைக்கும்போதே
நெஞ்சு நெகிழவில்லையா?
அந்தப்
பெண்தெய்வத்துக்கு நான் தலை வணங்குகிறேன்.
(செய்தி:டைம்ஸ் ஆஃப் இந்தியா,21-10-2012 )
நெஞ்சை நெகிழவைக்கிறது உண்மைக காதல்.இது அதிசயம்தான்.
ReplyDeleteத.ம. 2
நெஞ்சத்தை நெகிழச் செய்கிறது.....
ReplyDeleteகாதல்....
ReplyDeleteஎன்ன சொல்வது இந்த ஆதர்ச தம்பதி பற்றி...
ஹாட்ஸ் ஆஃப் டு தெம்....
வாழ்த்துவோம்...
ReplyDeleteநன்றி...
tm4
இதுதான்யா உண்மைக் காதலு........... சினிமாவில் காட்டுவது டுபாக்கூரு............
ReplyDeletenekizhchi sako!
ReplyDeleteஉண்மையான அன்பு என்பது கடவுள்தான். இவர்கள் கடவுளை வாழவைத்துக்கொண்டிருக்கிறார்கள்! நல்ல பகிர்வுக்கு நன்றி நண்பரே!
ReplyDeleteஉண்மைக் காதல் நல்ல பகிர்வு.
ReplyDeleteநல்லதொரு பகிர்வு! காதல் தம்பதிக்கு வணங்குகிறேன்! வாழ்த்துக்கிறேன் உம்மை இதை பகிர்ந்தமைக்கு! நன்றி!
ReplyDeleteகீழ் கண்ட பாடல்தான் நினைவுக்கு வருகிறது. பகிர்வுக்கு நன்றி!
ReplyDelete"ஈதல் அறம்; தீவினைவிட்டு ஈட்டல் பொருள்: எஞ்ஞான்றும்
காதல் இருவர் கருத்தொருமித்து - ஆதரவு
பட்டதே இன்பம்: பரனை நினைந்து இம்மூன்றும்
விட்டதே பேரின்ப வீடு."
- ஔவையார் (தனிப் பாடல்)
உண்மையான காதல்.....
Deleteகாதலென்றால் இதுவன்றோ...!!!
ReplyDeleteதலை வணங்குகிறேன்,
ReplyDeletebest love
ReplyDeletegood couple
ReplyDeletebest love
ReplyDelete