Sunday, October 14, 2012

பெண்மையைப் போற்றுவோம்!



நான் பிறக்கும்போது
என்னைத் தூக்கியெடுத்து
அன்போடு அணைக்க ஒரு
பெண்ணிருந்தாள்---என் அம்மா

வளரும் பருவத்தில்
என்னுடன் விளையாடிக்
கவனம் செலுத்த ஒரு
பெண்ணிருந்தாள்---என் அக்கா

பள்ளி செல்கையில்
பாடம் சொல்லித்தர
அங்கும் ஒரு
பெண்ணிருந்தாள்---என் ஆசிரியை

என் சுக துக்கங்களில்
தானும் பங்குகொண்டு
ஊன்றுகோலாய் ஒரு
பெண்ணிருந்தாள்---என் மனைவி

என் முரட்டுத்தனத்தை
மாற்றி என்னை இளக்க
மலர்போல் ஒரு
பெண்ணிருந்தாள்---என் மகள்.

நான் உயிர் நீகும்போது
என்னை உள்வாங்கிக் கொள்ள
பொறுமையாய் ஒரு
பெண்ணிருக்கிறாள்---நிலமகள்!

பெண்மையைப்போற்றுவோம்!

பெண்ணே நீ வாழ்க!!




16 comments:

  1. அருமை அருமை
    ஆரம்பம் ஆவது பெண்ணுக்குள்ளே
    நாம் ஆடி அடங்குவதே (பூமித்தாய் )மண்ணுக்குள்ளே
    என்பது மட்டுமல்ல இடையில் வாழுகையில் கூட
    நம் வாழ்வை சிறப்பாக்குவது பெண்தான்
    எனச் சொல்லிப் போகும் பதிவு
    அருமையிலும் அருமை
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. மனம் நிறைந்த பாராட்டுக்கு நன்றி ரமணி ஐயா!

      Delete
  2. அழகுக் கவிதை! எல்லாம் பெண்ணுக்குள்ளே. எதுவும் பெண்ணாலே என்கிறீர்கள். நன்று!

    ReplyDelete
  3. அருமை.. பெண்மையின் பல பரிணாமங்களை அழகாக கூறியுளீர்கள்...

    ReplyDelete
  4. எல்லா நிலையிலும் பெண்ணின் உதவி தேவை. என்பதை அழகாகச் சொல்லிவிட்டீர்கள்.நன்று.

    ReplyDelete
  5. பெண்மையைப் பேற்றுவோம்....
    அருமை.

    ReplyDelete
  6. பெண்மை வாழ்க! பெண்மையைப் பேற்றுவோம். அன்பர் இரமணியின்
    கருத்தை அப்படியே வழிமொழிகிறேன்

    ReplyDelete
  7. சிறப்புக்கவிதை... வாழ்த்துக்கள்...

    நன்றி...

    TM 9

    ReplyDelete