Friday, March 22, 2013

முத்தம்!!


ரெண்டு வாரமா வேலை பெண்டு நிமிருது.

நடுவில 'சண்டேன்னா ஒண்ணு 'பதிவோடு  சரி.

அடுத்த வாரமாவது வலை உலா வர முடியுதா பார்க்கலாம்.

இன்னைக்கு வந்தாச்சு!!

வந்ததுக்கு வருகை பதிவு செய்ய வேண்டாமா!


.....................
எதற்கு கிடைப்பதைக் காட்டிலும் தேவை அதிகமாக இருக்கிறதோ அதன் பெயர் ..முத்தம்---பொருளாதார ஆசிரியர்

முத்தம் என்பது ஒரு கடன் வழங்கல்;ஏனெனில் திரும்பக் கிடைக்கும்போது லாபத்துடன் கிடைக்கும்!
---கணக்கியல் ஆசிரியர்

இருவரின் இதழ்களுக்கு இடையே இருக்கும் மிக்குறைந்த தூரமே முத்தம் என்பது
--வடிவியல் ஆசிரியர்

இதயம் விரிவடைவதால் உதடுகள் குவிவதே முத்தம்
--இயற்பியல் ஆசிரியர்

இரண்டு இதயங்களின் உரசலில் ஏற்படும் எதிர்வினையே முத்தம் என்பது
--வேதியல் ஆசிரியர்

இருவரின் உமிழ்நீரில் உள்ள நுண்ணுயிர்களின் பரிமாற்றமே முத்தம்
--உடற்கூறு ஆசிரியர்


“பாலொடு தேன் கலந்தற்றே பணிமொழி 
 வாலெயிறு ஊறிய நீர் ”

---திருவள்ளுவர் 

Sunday, March 17, 2013

சண்டேன்னா ஒண்ணு!ஒரு முதியவர் தன்  முன்னிலைச் சுரப்பிச் சோதனைக்காக சிறுநீரக மருத்துவரிடம் சென்றார்

அவர் நண்பர்கள் சிலருக்கு அறுவை சிகிச்சை நடந்தது அவருக்குக் கவலையளித்தது.
  
மருத்துவ மனையின் காக்கும் அறையில் பலர் காத்திருந்தனர்.

வரவேற்பில் ஒரு பருத்த கடுகடு முகமுடைய ஒரு பெண் அமர்ந்திருந்தாள்

அவளிடம் சென்று அவர் தன் பெயரைச் சொன்னார்.

அவள் பெரிதாக எல்லோருக்கும் கேட்கும்படிச் சொன்னாள்”உங்கள் பெயர் பதிவாகி யிருக்கிறது; ஆண்மைக் குறைபாட்டைச் சரி செய்ய வந்திருக்கிறீர்கள் இல்லையா?”

காத்திருந்த அனைவரும் அவரையே பார்த்தனர்

அவருக்கு மிக அவமானமாக இருந்தது.

யோசித்தார்.

பின் அவரும் அந்தப் பெண் போல் உரக்கச் சொன்னார்”இல்லை,இல்லை!நான் பால் மாற்று அறுவைச் சிகிச்சை பற்றித் தெரிந்து கொள்வதற்காக வந்திருக்கிறேன்.ஆனால் உனக்கு அறுவை சிகிச்சை செய்த மருத்துவர் வேண்டாம்”

காத்திருந்த அனைவரும் கை தட்டினர்!

முதியவர்களிடம் மோதாதீங்க?!

Monday, March 11, 2013

இது ஒரு பிராயசித்தப் பதிவு!நேற்று ’சண்டேன்னா ஒண்ணு ’என்ற தலைப்பில் ஒரு நகைச் சுவைக் கதை(! ) வெளியிட்டி ருந்தேன்.

அது நகைச்சுவையா,நச்சுச்சுவையா என்ற எண்ணம் இப்போது தோன்றி விட்டது.

வந்த சில பின்னூட்டங்களே காரணம்.

எனவே அதை எழுதியதற்குப் பிராயச்சித்தமாக ஒரு பதிவு எழுத முடிவு செய்தேன்.

ஒரு தவறை,ஒரு சரியால் நேர் செய்யும் முயற்சியே இது!

இப்போது கதைக்குப் போவோமா?

ஒரு சிறுவர் பள்ளி ஆசிரியை குழந்தைகளுக்கு   ஒரு விளை யாட்டு சொல்லிக் கொடுத்தாள்.

ஒவ்வொரு சிறுவனும்/சிறுமியும் ஒரு பையில் சில உருளைக் கிழங்குகள் கொண்டு வர வேண்டும்.

பையில் இருக்கும் கிழங்குகளின் எண்ணிக்கை அவர்கள் வெறுக்கும் மனிதர்களின் எண்ணிக்கையைப் பொறுத்தது—எத்தனை பேரை வெறுக்கிறார்களோ அத்தனை கிழங்கு!

அதன் படி மறுநாள் அனைவரும் பையில் உ.கிழங்கு கொண்டு வந்தனர்.

சிலர் ஒன்று,சிலர் இரண்டு,சிலர் ஐந்து என்று,அவர்கள் வெறுப்பவர் எண்ணிக்கையைப் பொறுத்து!

ஆசிரியை சொன்னார்”பையை ஒரு வாரம் உங்களுடன் வைத்திருக்க வேண்டும்.எங்கு சென்றாலும் எடுத்துச் செல்ல வேண்டும்—கழிவறைக்குக் கூட”

ஓரிரு நாட்களுக்குப் பின் அவர்கள் புகார் செய்யத் தொடங்கினர்-கிழங்குகள் கெட்டுப் போக ஆரம்பித்ததால் துர்நாற்றம் வருவதாக.அதைத் தவிர கிழங்குகள் அதிகமாக வைத்திருந்தவர்கள் சுமையை எடுத்துச் செல்ல சிரமப்பட்டனர்.

ஒரு வாரத்துக்குப் பின் அனைவரும் நிம்மதியடைந்தனர், விளையாட்டு முடிந்ததே என்று!

ஆசிரியை கேட்டார் “எப்படி இருந்தது ஆட்டம்?”

குழந்தைகள் சொன்னார்கள்”எங்களோடு கனமான, துர்நாற்றம் வீசும் கிழங்குகளை எடுத்துச் செல்வது  ரொம்பக் கடினமாக இருந்தது”

ஆசிரியை சொன்னார்” வெறுப்பும் இது போலத்தான். உள்ளத்தில் வெறுப்பைச் சுமந்தால் உள்ளம் கெட்டு விடும். நாற்றம் அடிக்கும் கிழங்குகளை ஒரு வாரம் சுமப்பதே கடினமாக  இருந்ததே.  பிறர் மீதான வெறுப்பை வாழ்நாள் முழுவதும் சுமந்து கொண்டிருப்பது என்பது எவ்வளவு கடினம்?”

“இதன் நீதி என்னவென்றால் வெறுப்பை உங்கள் உள்ளத்தில் சுமந்து  துன்பப்படாமல் தூக்கி எறியுங்கள்.உண்மையான அன்பு என்பது குறைபாடற்றவர்களை நேசிப்பது அல்ல. குறைபாடு உள்ளவர்களையும் குறையின்றி நேசிப்பதே ஆகும்”

( எங்கோ,எப்போதோ கேட்டது)

Sunday, March 10, 2013

சண்டேன்னா ஒண்ணு!-ஒரு நீதிக்கதை!!ஒரு காதல் ஜோடி இருந்தார்கள்.ஓராண்டு காதலித்த பின் மணம் புரிந்து கொள்ள முடிவு செய்தனர்.

காதலிக்கு ஒரு தங்கை இருந்தாள் 18 வயது;அழகானவள்.இவன் அருகில் வரும் போதெல்லாம்   மேலாடையை விலக்கி குனிந்து நிமிர்ந்து இவனைப் பார்த்து ஒரு மாதிரியாகச் சிரிப்பாள்.

அவளை நினைக்கும்போது அவனுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை.

திருமணம் நிச்சயமான பின் ஒரு நாள் அவள் அவனை ஃபோனில் அழைத்தாள், ,அழைப்பி தழ்களைப் பார்க்க வருமாறு.

அவன் சென்ற போது அவள் தனியாக இருந்தாள்.கவர்ச்சிகரமாக உடை அணிந்திருந்தாள்.  அவனைப் பார்த்த பார்வையிலேயே அழைப்பு இருந்தது. அவன் மீது  அவளுக்கு மோகம் என்றுகூறிவிட்டு “நான் மாடியில் என் படுக்கை அறைக்குப் போகிறேன்; வேண்டு மென்றால் மேலே வந்து என்னை….”என்று சொல்லி விட்டு   மேலே சென்றாள்.

அவன் சிறிது நேரம் யோசித்தான்

ஒரு முடிவுக்கு வந்தான்.

வீட்டு வாசலை நோக்கிநடந்தான் ,வெளியே போய் தன் காரை நோக்கிச் சென்றான்

அப்போது அவன் வருங்கால மாமனார் அவன் முன் வந்து அவன் கைகளைப் பிடித்துக் கொண்டு கண்ணீர் மல்கக் கூறினார்”நாங்கள் வைத்த பரிட்சையில் தேறி விட்டீர்கள். உங்களை மாதிரி ஒரு கணவன் என் மகளுக்குக் கிடைக்க மாட்டான்”

அவன் திகைத்து நின்றான்.

இக்கதை சொல்லும் நீதி என்ன தெரியுமா?...................
……………………….
……………………….
……………………….
ஆணுறையை எப்போதும் காரிலேயே(பைக்.ஸ்கூட்டர் etc.’) வைத்திருக்கவும்!!

Sunday, March 3, 2013

கணவன் கேட்ட பிரெஞ்சுப் பெண்!--சண்டேன்னா ஒண்ணு!
ஒரு பெண் அவள் வேலை பார்க்கும் நிறுவனத்தின் பணி நிமித்தம் இரு வாரங்கள் பிரான்ஸ் போக வேண்டி வந்தது.

அவள் கணவன் அவளை விமான நிலையத்தில் இறக்கி விட்டு  வாழ்த்துச் சொன்னான்.

அவள் “உங்களுக்கு என்ன கொண்டு வரட்டும்?” எனக்கேட்டாள்

அவன் சிரித்தவாறு சொன்னான்”ஒரு பிரெஞ்சுப் பெண்!”

அவள் ஒன்றும் சொல்லாமல் சென்று விட்டாள்.

இரு வாரத்துக்குப் பின் அவளை அழைத்து வர விமான நிலையம் சென்றான் கணவன்.

“அன்பே எப்படியிருந்தது பயணம்?”

“பயனுள்ளதாகவும்,மகிழ்ச்சியாகவும்” அவள்

“நான் கேட்டது எங்கே?”

“என்ன?”

”அதுதான் ஒரு பிரெஞ்சுப் பெண் கேட்டேனே!” குறும்பாகச் சொன்னான்

அவள் சொன்னாள்.......

“அதுவா?என்னால் முடிந்ததைச் செய்து விட்டேன்.அது பெண்தானா என அறிய 9 மாதம் பொறுத்திருக்க வேண்டும்!”

நீதி: ஒரு பெண்ணைத் தூண்டி விடாதே!அவர்கள் பயங்கர புத்திசாலிகள்!