நேற்று ’சண்டேன்னா ஒண்ணு ’என்ற தலைப்பில்
ஒரு நகைச் சுவைக் கதை(! ) வெளியிட்டி ருந்தேன்.
அது நகைச்சுவையா,நச்சுச்சுவையா என்ற
எண்ணம் இப்போது தோன்றி விட்டது.
வந்த சில பின்னூட்டங்களே காரணம்.
எனவே அதை எழுதியதற்குப் பிராயச்சித்தமாக
ஒரு பதிவு எழுத முடிவு செய்தேன்.
ஒரு தவறை,ஒரு சரியால் நேர் செய்யும்
முயற்சியே இது!
இப்போது கதைக்குப் போவோமா?
ஒரு சிறுவர் பள்ளி ஆசிரியை குழந்தைகளுக்கு
ஒரு
விளை யாட்டு சொல்லிக் கொடுத்தாள்.
ஒவ்வொரு சிறுவனும்/சிறுமியும் ஒரு
பையில் சில உருளைக் கிழங்குகள் கொண்டு வர வேண்டும்.
பையில் இருக்கும் கிழங்குகளின்
எண்ணிக்கை அவர்கள் வெறுக்கும் மனிதர்களின் எண்ணிக்கையைப் பொறுத்தது—எத்தனை பேரை
வெறுக்கிறார்களோ அத்தனை கிழங்கு!
அதன் படி மறுநாள் அனைவரும் பையில்
உ.கிழங்கு கொண்டு வந்தனர்.
சிலர் ஒன்று,சிலர் இரண்டு,சிலர் ஐந்து
என்று,அவர்கள் வெறுப்பவர் எண்ணிக்கையைப் பொறுத்து!
ஆசிரியை சொன்னார்”பையை ஒரு வாரம் உங்களுடன்
வைத்திருக்க வேண்டும்.எங்கு சென்றாலும் எடுத்துச் செல்ல வேண்டும்—கழிவறைக்குக் கூட”
ஓரிரு நாட்களுக்குப் பின் அவர்கள்
புகார் செய்யத் தொடங்கினர்-கிழங்குகள் கெட்டுப் போக ஆரம்பித்ததால் துர்நாற்றம்
வருவதாக.அதைத் தவிர கிழங்குகள் அதிகமாக வைத்திருந்தவர்கள் சுமையை எடுத்துச் செல்ல
சிரமப்பட்டனர்.
ஒரு வாரத்துக்குப் பின் அனைவரும்
நிம்மதியடைந்தனர், விளையாட்டு முடிந்ததே என்று!
ஆசிரியை கேட்டார் “எப்படி இருந்தது
ஆட்டம்?”
குழந்தைகள் சொன்னார்கள்”எங்களோடு கனமான,
துர்நாற்றம் வீசும் கிழங்குகளை எடுத்துச் செல்வது
ரொம்பக் கடினமாக இருந்தது”
ஆசிரியை சொன்னார்” வெறுப்பும் இது
போலத்தான். உள்ளத்தில் வெறுப்பைச் சுமந்தால் உள்ளம் கெட்டு விடும். நாற்றம்
அடிக்கும் கிழங்குகளை ஒரு வாரம் சுமப்பதே கடினமாக இருந்ததே. பிறர் மீதான வெறுப்பை வாழ்நாள் முழுவதும்
சுமந்து கொண்டிருப்பது என்பது எவ்வளவு கடினம்?”
“இதன் நீதி என்னவென்றால் வெறுப்பை
உங்கள் உள்ளத்தில் சுமந்து துன்பப்படாமல்
தூக்கி எறியுங்கள்.உண்மையான அன்பு என்பது குறைபாடற்றவர்களை நேசிப்பது
அல்ல. குறைபாடு உள்ளவர்களையும் குறையின்றி நேசிப்பதே ஆகும்”
( எங்கோ,எப்போதோ கேட்டது)
எங்கேயோ கேட்ட கதையாயினும் எப்போதும் சொல்லக்கூடிய/ சொல்லவேண்டிய கதை. கதை நன்று.
ReplyDeleteவெறுப்பை உங்கள் உள்ளத்தில் சுமந்து துன்பப்படாமல் தூக்கி எறியுங்கள்.உண்மையான அன்பு என்பது குறைபாடற்றவர்களை நேசிப்பது அல்ல. குறைபாடு உள்ளவர்களையும் குறையின்றி நேசிப்பதே ஆகும்”
ReplyDeleteஅருமையான நிறைவான பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..
சில கிழங்குகள் அப்படித்தான் உள்ளன... அவற்றை தூக்கி விட்டால் துர்நாற்றம் ஏற்பட வழியில்லை...
ReplyDeleteகிழங்குகள் = பகிர்வுகள்
பிராயச்சித்ததிற்கும் முயற்சிக்கும் வாழ்த்துக்கள்... தொடரவும்...
இது இது சூப்பர் கதை எவ்வளவு ஆர்த்தம் பொதிந்த கதை என்வீட் டில் உள்ளவர்க்ளுகேல்லாம் படித்து காட்டினேன்
ReplyDeleteநல்ல கதை குட்டன். பாராட்டுகள்.
ReplyDeleteபதிவுலக நீதி தேவன் குட்டன் அவர்களை வாழ்த்த வயதில்லை
ReplyDeleteஅருமையான பகிர்வு்.
ReplyDelete(பாராயசித்தமா....? ஏன்...
படித்துவிட்டு வருகிறேன் குட்டன் ஐயா.)
அந்தக்கதைக்குப் பிராயசித்தம்
ReplyDeleteதேவை தான்.
ஆமா நானும் முந்தைய பதிவை படித்து விட்டு வருகிறேன்.
ReplyDeleteநல்ல முறையில் பிராயசித்தம் தேடியுள்ளீர்கள். இந்த கதை சிறப்பு.
ReplyDeleteஇதுவரை நான் கேட்காத கதை! நன்றி குட்டன்!
ReplyDeleteகதை நன்றாக இருக்கின்றது தொடர்ந்து எழுதுங்கள்
ReplyDeleteமிக அருமையான நீதிக்கதை! நல்லதொரு பகிர்வு! நன்றி!
ReplyDeleteஹ..ஹ..ஹ..ஹ..ஹ.. அற்புதம் நண்பரே.
ReplyDeleteநல்ல கதை, நல்ல கருத்து!
ReplyDelete