Friday, March 22, 2013

முத்தம்!!


ரெண்டு வாரமா வேலை பெண்டு நிமிருது.

நடுவில 'சண்டேன்னா ஒண்ணு 'பதிவோடு  சரி.

அடுத்த வாரமாவது வலை உலா வர முடியுதா பார்க்கலாம்.

இன்னைக்கு வந்தாச்சு!!

வந்ததுக்கு வருகை பதிவு செய்ய வேண்டாமா!


.....................
எதற்கு கிடைப்பதைக் காட்டிலும் தேவை அதிகமாக இருக்கிறதோ அதன் பெயர் ..முத்தம்---பொருளாதார ஆசிரியர்

முத்தம் என்பது ஒரு கடன் வழங்கல்;ஏனெனில் திரும்பக் கிடைக்கும்போது லாபத்துடன் கிடைக்கும்!
---கணக்கியல் ஆசிரியர்

இருவரின் இதழ்களுக்கு இடையே இருக்கும் மிக்குறைந்த தூரமே முத்தம் என்பது
--வடிவியல் ஆசிரியர்

இதயம் விரிவடைவதால் உதடுகள் குவிவதே முத்தம்
--இயற்பியல் ஆசிரியர்

இரண்டு இதயங்களின் உரசலில் ஏற்படும் எதிர்வினையே முத்தம் என்பது
--வேதியல் ஆசிரியர்

இருவரின் உமிழ்நீரில் உள்ள நுண்ணுயிர்களின் பரிமாற்றமே முத்தம்
--உடற்கூறு ஆசிரியர்


“பாலொடு தேன் கலந்தற்றே பணிமொழி 
 வாலெயிறு ஊறிய நீர் ”

---திருவள்ளுவர் 

5 comments:

  1. சத்தமில்லாத முத்தமோ?

    ReplyDelete
  2. முத்தத்திற்கு இத்தனை விளக்கமா?

    ReplyDelete
  3. நல்ல ஆய்வு...! வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  4. மொத்தத்தில் முத்தம் இனித்தது! நன்றி!

    ReplyDelete
  5. முத்தம் அருமை வாழ்த்துக்கள்

    ReplyDelete