Sunday, March 3, 2013

கணவன் கேட்ட பிரெஞ்சுப் பெண்!--சண்டேன்னா ஒண்ணு!




ஒரு பெண் அவள் வேலை பார்க்கும் நிறுவனத்தின் பணி நிமித்தம் இரு வாரங்கள் பிரான்ஸ் போக வேண்டி வந்தது.

அவள் கணவன் அவளை விமான நிலையத்தில் இறக்கி விட்டு  வாழ்த்துச் சொன்னான்.

அவள் “உங்களுக்கு என்ன கொண்டு வரட்டும்?” எனக்கேட்டாள்

அவன் சிரித்தவாறு சொன்னான்”ஒரு பிரெஞ்சுப் பெண்!”

அவள் ஒன்றும் சொல்லாமல் சென்று விட்டாள்.

இரு வாரத்துக்குப் பின் அவளை அழைத்து வர விமான நிலையம் சென்றான் கணவன்.

“அன்பே எப்படியிருந்தது பயணம்?”

“பயனுள்ளதாகவும்,மகிழ்ச்சியாகவும்” அவள்

“நான் கேட்டது எங்கே?”

“என்ன?”

”அதுதான் ஒரு பிரெஞ்சுப் பெண் கேட்டேனே!” குறும்பாகச் சொன்னான்

அவள் சொன்னாள்.......

“அதுவா?என்னால் முடிந்ததைச் செய்து விட்டேன்.அது பெண்தானா என அறிய 9 மாதம் பொறுத்திருக்க வேண்டும்!”

நீதி: ஒரு பெண்ணைத் தூண்டி விடாதே!அவர்கள் பயங்கர புத்திசாலிகள்!


10 comments:

  1. கணவர் பிரெஞ்சு பேனாவை ஆசையாக கேட்டிருக்கிறார்... அதை புரிந்துக்கொள்ளாத மனைவி... ச்சே ரொம்ப மோசம் :)

    ReplyDelete
  2. நுணலும் தான் வாயால் கெடும்?

    ReplyDelete
  3. சரியான பதில்...! அடுத்து... டைவர்ஸ் எப்போது...?

    ReplyDelete
  4. சாதாரண பேனாவுக்கு இவ்வளவு ரகளையான பதிலா?

    ReplyDelete
  5. பெண்கள்ட்ட உஸாரா இருந்துக்கணுமப்பு! இல்லாட்டி இப்புடித்தான்!

    ReplyDelete
  6. ஐயோ கடவுளே என்ன இது.......
    ஓ... ஒரு... தென்றல் புயலாகி வருதே...
    கால தேவனின் தர்ம எல்லைகள் மாறுகின்றதே...

    ReplyDelete
  7. அப்பப்பா! என்ன ஓரு வம்பு தும்பு!
    என்னமாய் சிந்திக்கிறாங்கோ!
    நன்று....பதிவு.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
  8. பெண்கள் பாலியல் வன்முறையால் பாதிக்கப்படுவதை தடுக்க வன்முறை கலாச்சாரம் பரவாமல் தடுக்க.
    மத்திய மாநில அரசே காட்சி ஊடகங்கள் காலை மாலை வேளைகளில் நாட்டு விடுதலைக்கு வித்திட்ட மாவீரர்களின் தியாகங்களையும் நாட்டு விடுதலை பற்றிய காட்சிகளையும் இந்திய துணைக்கண்டத்தின் பெருமைகளையும் அதன் வரலாற்றையும் இந்திய கலாச்சாரங்களையும் நீதி போதனைகளை மட்டும் ஒளிபரப்பிட வேண்டுமென்று சட்டம் இயற்றுங்கள்.
    அரைகுறை ஆடையில் நடனங்கள் இறுக்கமான உடையில் கவர்ச்சியான தோற்றத்துடன் இரட்டை அர்த்த வசனங்கள் ஆபாச பாடல் காட்சிகளையும் வன்முறைக் காட்ச்சிகளையும் ஒளிபரப்பிட தடை செய்.
    நாடகம் என்ற பெயரால் நம் கலாச்சாரத்திற்கு ஒவ்வாத உலகிற்கே கற்பு நெறி என்றால் என்ன என்று போதிக்கும் எம்குலமாம் தமிழ் குலப் பெண்களை அவமதிக்கும் நோக்கில் கள்ளக்காதல் ஒருவருடன் காதல் பல ஆண்களுடன் கள்ளக்காதல் அதிலும் கணவருக்குத் தெரியாமல் கள்ளக்காதல் செய்வது எப்படி என்று சொல்லித்தரும் போக்கினை உடனே தடை செய்.
    மாமியாறிக் கொடுமைப் படுத்தும் மருமகள் மருமகளைக் கொடுமைப் படுத்தும் மாமியார் விதம் விதமான ஐடியாக்களில் கொலை செய்வது எப்படி என்று வ்த்தியாசம் மற்றும் விரசம் வீட்டுக்குள்ளேயே எந்த நேரமும் காட்டும் தொலைக்காட்ச்சி ஊடகங்களுக்கு கட்டுப்பாடுகள் விதி.
    காட்சி ஊடகங்களே எங்கள் பிள்ளைகளை விட்டுவிடுங்கள் எங்கள் பொருளைப் பெற்று உங்கள் வளங்களைப் பெருக்கிக் கொண்டு எங்கள் பிள்ளைகள் மனங்களில் நஞ்சை விதைக்கும் காட்சிகளை மாற்றுங்கள்.

    சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினங்களில் மட்டுமாவது நாட்டுக்காக உழைத்த உத்தமர்களைப் போற்றுங்கள். சுதந்திரப் போராட்டம் மற்றும் தியாகிகளின் தியாகங்களைப் போற்றுங்கள்.

    சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினங்களில் மட்டுமாவது எங்கள் பிள்ளைகளின் காமத்தை தூண்டும் ஆபாச காட்சிகள் இரட்டை அர்த்த வசனங்கள் இல்லாத காட்சிகளை காண்பியுங்கள்.
    சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினங்களில் எங்கள் பிள்ளைகளை தவறான கதாநாயகனாக மாற்றும் வன்முறை கலாச்சார சீரழிவு காட்சிகளை தவிர்த்து எங்கள் பிள்ளைகளுக்கு வீரம்,அன்பு, சமூகம், மனிதாபிமானம் சமூக அக்கறை கொண்ட தலைவர்களைப் பற்றிய காட்சிகளைக் காண்பியுங்கள்.

    சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினம் போன்ற தினங்களில் அரை குறை ஆடைகளில் கவர்ச்சி நடிகர்களின் பேட்டி அவர்களின் சாதனைகளைக் கூறாமல் தியாகிகளின் வரலாற்று சாதனைகளை அவர்கள் தம் வாரிசுகளின் பேட்டி கண்டு எங்கள் பிள்ளைகளுக்கு தேசப் பற்றை விதையுங்கள்.
    இன்றைய சமுதாய நலனுக்காக சேவையாற்றும் அரசு அல்லாத சேவை அமைப்புகளை அதன்செயல்பாடுகள் பற்றி எங்கள் பிள்ளைகளுக்கு சொல்லித்தரும் காட்சிகளைக் காண்பியுங்கள்.
    மக்கள் விழிப்புணர்வு பெற போராடும் நல்ல மனிதர்களை அவர்கள் தம் சேவை பற்றியும் எங்கள் பிள்ளைகளுக்கு சொன்னால் எங்கள் பிள்ளைகளும் சமுதாயச் சேவை செய்யவேண்டும் என்ற சிந்தனையை உருவாக்கும் நிகழ்சிகளைக் காண்பியுங்கள்.
    புதிய கண்டுபிடிப்பாளர்கள், சாதனையாளர்கள், சுய தொழில் முனைவோர்கள், உழவுத்தொழில் செய்பவர்கள் மற்றும் நேர்மையான அரசு அலுவலர்களைப் போற்றி அவர்களை ஊக்கப்படுத்தும் காட்சிகளைக் காண்பியுங்கள்.

    மேற்கண்ட நம் கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த மூன்று ஆண்டுகளாக 2010 ஆம் டிசம்பர் 3 ஆம் தேதிமுதல் இன்றுவரை இந்தியன் குரல் அமைப்பு போராடிவருகிறது.
    நம் கோரிக்கை அரசுக்கும் இந்த காட்சி ஊடகங்களுக்கும் முன்வைக்கின்றோம்.
    இந்த ஆண்டும் மேற்கண்ட நம் கோரிக்கைகளை வலியுறுத்தியும் இன்றைய நிகழ்வுகள் குறித்தும் 04-01-2013
    வரும் சனவரி மாதம் நான்காம் நாள் சென்னை மெமோரியல் ஹால் அருகில் காலை பத்து மணிக்கு ஆர்ப்பாட்டம் நடைபெறும். அனைவரும் பெரும் திரளாக கலந்து கொள்ள அன்புடன் அழைக்கின்றோம்
    காட்சி ஊடகங்களால் உருவாகும் கலாச்சாரச் சீரழிவை தடுத்து நிறுத்திட ஒன்று படுவோம்.
    மனிதாபிமானமுள்ள அரசும் மனிதாபிமானமுள்ள காட்சி ஊடகங்கள் நம் கோரிக்கைகளை ஏற்றுக்கொள்ளும் என்று நம்புகின்றோம்.
    -இந்தியன் குரல்
    9444305581

    ReplyDelete
  9. தங்களது வலைப்பதிவு பற்றி இன்றைய வலைச்சரம் வலைப்பதிவில் குறிப்பிட்டுள்ளேன். காண்க.

    ReplyDelete