Monday, February 25, 2013

இதுதாண்டா காதல் (தத்துவம்!)

சொல்ற தத்துவம் புரிஞ்சா புரிஞ்சுக்குங்க...
புரியாட்டியும் நீங்களே ஏதாச்சும் புரிஞ்சுக்குங்க....


தத்துவம் 1

"காதல் பண்ணுறவனுக்கு காதலிதான் அழகு...
காதல் பண்ணாதவனுக்கு அழகானவ எல்லாம் காதலி..."


தத்துவம் 2

"காதலிக்கற பொண்ணையே கல்யாணம்
பண்ணிக்க முடியும்னு சொல்ல முடியாது..
கல்யாணம் பண்ணினவன் எல்லாம்
பொண்டாட்டியத்தான் காதலிப்பான்னு
சொல்ல முடியாது..."


தத்துவம் 3

"எல்லா பொண்ணும் அழகா தெரிஞ்சா
அது ஜொள்ளுடா...
ஒரு பொண்ணு மட்டும் அழகா தெரிஞ்சா
அது காதல்டா...."


தத்துவம் 4


"பொண்டாட்டிய மட்டும் காதலிக்கணும்னு
நெனைக்கறது பொம்பள புத்தி...
காதலிக்கிற எல்லாரையும் பொண்டாட்டியா
நெனைக்கறது ஆம்பளை புத்தி..."


தத்துவம் 5


"காதலிச்ச பொண்ணையே கல்யாணம் பண்ணுறவன் அதிர்ஷ்டசாலி
கல்யாணம் பண்ணுன பொண்ணையே காதலிக்கறவன் புத்திசாலி..."


தத்துவம் 6


"ஏன்னா அவ அழகுன்னு சொல்லுறவன் லோக்கல் லவ்வர்..
ஏன்னா அவ என் காதலின்னு சொல்லுறவன் True லவ்வர்..."


தத்துவம் 7


"காதலிய பொண்டாட்டி ஆக்க
முடியலைனா பொண்டாட்டிய
காதலி ஆக்கிக்குங்க...."


தத்துவம் 8

"கல்யாணத்துல காதல் முடியலாம்... ஆனா
காதல் கல்யாணத்துலதான் முடியனும்னு இல்லை..."


தத்துவம் 9


"அதிகமான பொண்ணுக பின்னாடி சுத்துனவனும்
ஒரே பொண்ணோட செட்டில் ஆனவனும்
சந்தோசமா இருந்ததா சரித்திரம் இல்லை..."
 


நன்றி
(தமிழ்த் தாயகத்திற்காக
சவிதா செல்வராஜ் )

29 comments:

  1. நல்ல தத்துவங்கள் போங்க! பகிர்வுக்கு நன்றி!

    ReplyDelete
  2. ஒன்பது தத்துவங்களும் அருமையோ அருமை குட்டன்!

    #"அதிகமான பொண்ணுக பின்னாடி சுத்துனவனும்
    ஒரே பொண்ணோட செட்டில் ஆனவனும்
    சந்தோசமா இருந்ததா சரித்திரம் இல்லை..." 

    ஹா ஹா ஹா !!

    ReplyDelete
  3. ஹா... ஹா.... பித்துவங்கள்... (சிலது உண்மை...)

    ReplyDelete
    Replies
    1. பித்துவங்கள்தான் சரி!
      நன்றி தனபாலன்

      Delete
  4. சொல்ற தத்துவம் புரிஞ்சா புரிஞ்சுக்குங்க...
    புரியாட்டியும் நீங்களே ஏதாச்சும் புரிஞ்சுக்குங்க....


    நல்லா புரிஞ்சிகிட்டேன் குட்டன் ஐயா.

    ReplyDelete
    Replies
    1. புரிஞ்சிகிட்டீங்களா?!
      நன்றி

      Delete
  5. செம தத்துவங்க.... கிளப்புங்க...

    ReplyDelete
  6. /"காதலிச்ச பொண்ணையே கல்யாணம் பண்ணுறவன் அதிர்ஷ்டசாலி
    கல்யாணம் பண்ணுன பொண்ணையே காதலிக்கறவன் புத்திசாலி..."//

    10000% true

    ReplyDelete
  7. கலக்கல் தத்துவங்கள் ...

    ReplyDelete
  8. காதல் தத்துவங்கள்... கண்டிப்பா உங்க மனைவி கிட்டயும் காதலிகள் (இருந்தால்) கிட்டயும் காட்டுங்க....

    ReplyDelete
    Replies
    1. காதலா?அப்படின்னா என்ன?மனைவிகிட்டக் காட்டியாச்சு;புயல் வீசிகிட்டிருக்கு!
      நன்றி பள்ளிச் சிறுவரே!

      Delete
  9. என்ன. இப்படி தத்துவமா தந்து கலக்கிவிட்டீங்க! வயிற்றைக் கலக்குதுங்க. (சிரித்து சிரித்து!)

    ReplyDelete
  10. கலக்கல் அனைத்தும்

    ReplyDelete
  11. 1, 3, 4, 5 அருமை! மற்றவை ரசனை! அதென்ன கடைசித் தத்துவம் நம்ம சூப்பர் ஸ்டார்கிட்ட இருந்து சுட்ட மாதிரி இருக்கே.... சுட்ட பழமும் சுவைதான் குட்டன்! அசத்துங்க...!

    ReplyDelete
    Replies
    1. சூப்பர் ஸ்டார் கமெண்ட்தானே சூப்பர்னு சொல்வீங்க!
      நன்றி பால கணேஷ் சார்

      Delete
  12. தத்துவம் 5 க்கும் தத்துவம் 9 எவ்வளவு முரண் பாடுகள் ஏன்? ஏன் ? இப்படி சொதபிடீங்க சந்தோஷமா படிச்சிட்டு வரும் போது

    ReplyDelete
    Replies
    1. முரண்பாடா? 5 இல் காதல் இருக்கு!9இல் இல்லை!
      நன்றி மலர்பாலன்

      Delete
  13. காதல் பண்ணுறவனுக்கு காதலிதான் அழகு...
    காதல் பண்ணாதவனுக்கு அழகானவ எல்லாம் காதலி//

    ஆஹா வசமா அருவாளுக்கு வேலை குடுக்குராயின்களே..

    ReplyDelete
    Replies
    1. அருவாளா?பயமா இருக்கு மனோ!
      நன்றி

      Delete
  14. காதல் தத்துவம் கலக்குது குட்டன்

    ReplyDelete