Friday, February 8, 2013

எனக்கு அல்வா கொடுத்திட்டீங்களே!

நேற்று நான் ஒரு பதிவு இட்டேன்.

முன்பெப்போதோ படித்த பொருநராற்றுப்படையில் பாடினியின் வர்ணனை நினைவுக்கு வந்தது.

சங்க இலக்கியத்தில் பெண்ணின் அழகு எவ்வளவு சிறப்பாக வர்ணிக்கப்பட்டிருக்கிறது என்பதை எடுத்துச் சொல்லும் பதிவு ஒன்று எழுதலாம் என்ற எண்ணம் பிறந்தது.

சிரமப்பட்டு பொருநராற்றுப்படையைத் தேடி அந்தப் பகுதியை தேர்ந்தெடுத்து,அதை அப்படியே கொடுத்தால் பயனில்லை என்பதால் ,பதவுரையும் கொடுத்து வெளியிட்டேன்.

தலைப்பு கவர்ச்சியாக இருக்க வேண்டும் என்பதற்காக”ஒரு பெண்ணின் அழகு-கேசாதிபாத வர்ணனை ” எனத் தலைப்புக் கொடுத்தேன்.

நான் எதிர்பார்த்தேன்,அந்தப்பதிவு நல்ல வரவேற்பைப் பெறும்,அதிக வருகைகள் இருக்கும், பலரின் கருத்துகள் வரும் என்றெல்லாம்!

ஏமாந்தேன்.

வழக்கமான வருகையில் பாதி கூட இல்லை.

வந்த பின்னூட்டங்கள் மூன்றுதான்.வழக்கமான நண்பர்கள் பலரும் கூட அந்தப் பதிவைப் புறக்கணித்து விட்டார்கள்!

நான் மிக ரசித்து எழுதிய பதிவு!

ஆனால் மற்றவர்கள் ரசிக்கவில்லையே!


ஒரு வேளை நேற்று விஸ்வரூபம்   வெளியானதால் இருக்குமோ!!!

என்ன இருந்தாலும் என்னை விடக் கமலுக்கு ஈர்ப்பு அதிகம்தான்!!!


:-(  :-(   :-(    !!!   :-)  :-)  :-)






16 comments:

  1. சென்னையில் இருப்பதாக கேள்விப்பட்டேன்...

    இளைஞரே... தங்களின் திருமுகத்தை எப்போது பார்க்க முடியும்...? பழகலாம் வாருங்கள் வெளியே... மற்றவை உங்கள் விருப்பம்...

    ReplyDelete
    Replies
    1. காலம் கனியட்டும்!
      நன்றி!

      Delete
  2. இந்த பதிவு என் கண்ணில் படவில்லை! ஒரு வேளை இரவில் வெளியிட்டீர்களா? படித்திருவோம்!

    ReplyDelete
  3. இந்த மாதிரி தலைப்பு வைப்பதற்கு நீங்கள் இன்னும் கொஞ்சம் வளரவேண்டும்.

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துங்கள் வளர்வதற்கு!
      நன்றி

      Delete
  4. குட்டனை விரும்பிப் படிக்கும், அழகுத் தமிழை வெகுவாய் ரசிக்கும் என் கண்ணிலும் படாமல் போனது துரதிர்ஷ்டம்தான் (என்னுடைய). இப்படி ஏதாவது காரணங்களால் பலர் தவறவிட்டிருக்கலாம் என்று பாஸிடிவாகவே நினையுங்கள் குட்டன். நீங்கள் செய்யத் துவங்கியிருக்கும் நல்ல தமிழ் ரசனை வளர்க்கும் பகிர்வுகளையம் அவ்வப்போது தொடருங்கள் என்பது என் வேண்டுகோள்.

    ReplyDelete
    Replies
    1. முயல்வேன்!
      நன்றி பாலகணேஷ்!

      Delete
  5. தலைப்பை சிறிது மாற்றியிருந்தால் (உ.ம். அடடா என்ன அழகு!) பார்வையிடுவோர் எண்ணிக்கை கூடியிருக்கும் என எண்ணுகிறேன்!

    ReplyDelete
  6. ஆகா! என்னே நளினம்! இப்போதே சென்று இது என்ன பதிவு என்று பார்த்து விடுகிறேன்.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி கோவைக்கவி அவர்களே

      Delete
  7. வருந்தாதீர்கள். இதுவும் கடந்துபோகும்.....

    ReplyDelete
  8. குட்டன் அந்த மூன்று பேரில் நானொருவன் என்பதில் எனக்கு மகிழ்ச்சி. உங்க மகிழ்ச்சிக்கு எழுதுகன, ஒட்டு, பின்னூட்டமெல்லாம் மாயைகள்.

    ReplyDelete