நாளை காதலர் தினம்;ஆனால் என் அட்டவணைப்படி பதிவு எழுதும் தினமல்ல!
எனவே இன்றே காதலர் தின வாழ்த்துகள்.
காதலினால் மானுடர்க்குக் கலவி யுண்டாம்
கலவியிலே மானுடர்க்குக் கவலை தீரும்
காதலினால் மானுடர்க்குக் கவிதை யுண்டாம்;
கானமுண்டாம் சிற்பமுதற் கலைக ளுண்டாம்
ஆதலினாற் காதல் செய்வீர் உலகத்தீரே!
அஃதன்றோ இவ்வுலகத் தலைமை யின்பம்;
காதலினாற் சாகாம லிருத்தல் கூடும்
கவலைபோம்,அதனாலே மரணம் பொய்யாம். (பாரதி)
..........................................
காதல்!
அது அனைவரும் பேசும் மொழி
ஆனால் இதயம் மட்டுமே புரிந்து கொள்ளும் மொழி!
................................................
உன்னைச் சந்தித்தது தற்செயலே
உன்னிடம் நட்பானது தேர்ந்தெடுத்தே-ஆனால்
உன்னிடம் காதல் கொண்டது என்னையும் மீறி!
.....................................
காதல் என்பது என்ன?
கணிதத்தில்-ஒரு சமன்பாடு!
வரலாற்றில்-ஒரு போர்!
வேதியலில் -ஒரு எதிர்வினை!
ஓவியத்தில்-ஓர் இதயம்!
என்னில்---நீ!
.....................................................
அட அட்டவணை சரியாவே ஃபாலோ பண்றீங்க! :)
ReplyDeleteஇப்பத்தானே ஆரம்பம்!
Deleteநன்றி வெங்கட்
காதல் குறித்த உங்கள் தொகுப்பு அருமை குட்டன்! உங்களுக்கு இனிய காதலர் தின வாழ்த்துக்கள்! அதுசரி டைம் டேபிள் போட்டுத்தான் பதிவு போடுவீங்களா?
ReplyDeleteநேத்துதான் அட்டவணை போட்டேன்(நேற்றைய பதிவில்).உடனே கை விட முடியுமா
Deleteநன்றி
காதல் பதிவு நல்லா இருக்கு.
ReplyDeleteநன்றி முரளிதரன்
Deleteகாதலர் தினத்திற்கு, நாளை பதிவிட்டால் அது பத்தோடு பதினொன்றாகிவிடும் என்றுதானே இன்றே பதிவிட்டீர்கள். நல்லதுதான்
ReplyDelete:)) நன்றி சார்
Deleteரொம்ப அட்வான்சாக காதலர் தினம் கொண்டாட்டமோ?
ReplyDeleteநாளை என்ன ,இன்றேன்ன?!
Deleteநன்றி
பதிவு சூப்பர்... அதுக்காக இன்னைக்கேவா......
ReplyDeleteகாதலுக்கு நாள் உண்டா
Deleteநன்றி
உண்மை “காதலுக்கு“ என்றுமே திருநாள் தான்.
ReplyDeleteபதிவு அருமை குட்டன் ஐயா.
நல்ல தொகுப்பு!
ReplyDeleteநல்ல வரிகள்!
ReplyDeleteநன்றி ஜனா
Deleteஹி ஹி சூப்பரு....காதலினாற் சாகாம லிருத்தல் கூடும்....ம்ம் எங்க போய்க்கதைக்க ரைபண்ணும்போது பகீரெங்குதே அதுக்கு செத்துடலாம்போல இருக்கும்
ReplyDelete