Saturday, February 23, 2013

பொய் சொல்றாங்க,!



பொய்  சொல்வது

1) குழந்தைக்கு- ஒரு குற்றம்

2) வாலிபர்க்கு- ஒரு தவறு

3)காதலனுக்கு- ஒரு கலை

4)வழக்கறிஞருக்கு- ஒரு  தொழில்

5)அரசியல்வாதிக்கு- ஒரு தேவை

6)பிரம்மச்சாரிக்கு- ஒரு திறமை

7)முதலாளிக்கு- ஒரு மேலாண்மைக் கருவி

8)ஊழியருக்கு- ஒரு சாக்குப் போக்கு


கொசுறு............


நட்பு?!
...............
அவனைப் பற்றி

ஆயிரம் குற்றம் 

சொன்னாய்நீ

என்னிடம்

என் எண்ணமெல்லாம்

என்னைப் பற்றி

அவனிடம் என்ன

 சொன்னாய்  நீ

என்பதில்தான்!  
.......................................




20 comments:

  1. Replies
    1. எது கேவலம் எனச் சொல்கிறீர்கள்?பொய் சொல்வதும்,புறங்கூறுவதுமா?உண்மைதான்.
      இல்லை பதிவே கேவலம் என்று சொல்கிறீர்கள்?!அப்ப்டியென்றால் என்ன சொல்ல..மன்னிக்கவும்!

      உடன் வருகைக்கு நன்றி தனபாலன்

      Delete
  2. Replies
    1. வாத்தியார் ரைட் போட்டுட்டாரு!(மார்க் போடலையா?!)

      நன்றி சௌந்தர் சார்

      Delete
  3. Replies
    1. பொய்யை விக்கறீங்களா?:)
      நன்றி பள்ளிச் சிறுவரே!(தமிழாக்கம்!)

      Delete
  4. பொய்யும் தொழிலா ?

    ReplyDelete
    Replies
    1. கவிதாயினி அம்மா!கவிதைக்குப் பொய்யழகாமே!நீங்கள் என்ன சொகிறீர்கள்?
      நன்றி !

      Delete
  5. இரண்டுமே இருவித சிந்தனை சூப்பர்... பொய் சொல்வது சிலருக்கு பொழுதுபோக்காகவும் இருக்கு.

    நட்பு கவிதை அருமை.

    ReplyDelete
  6. வக்கீலுக்கு பொய்சொல்ல சொல்வது யார்?

    ReplyDelete
  7. பொய்யைப் பற்றிய உண்மைகள் சூப்பர்

    ReplyDelete
  8. ஆமால பொய்ய இப்படி கூட சொல்லலாமோ !!

    ReplyDelete
  9. பொய் சொல்லுவதுவதற்கு இத்தனை பொருளா? அது சரி. கணவர்களுக்கு?
    நட்பைப்பற்றிய கவிதை அருமை!

    ReplyDelete
  10. நீங்க நல்லா எழுதியிருக்கீங்க, ரொம்பவே ரசிச்சேன்-னு நான் சொன்னா அது நிச்சயம் பொய்யில்லை குட்டன்!

    ReplyDelete
  11. பொய்யை பற்றிய சுவாரஸ்யமான பதிவு! இது பொய்யில்லை! நன்றி!

    ReplyDelete
  12. பொய்யை பற்றி உண்மையுடன் சொல்லிவிட்டீர்கள் நல்ல இருக்கு

    ReplyDelete
  13. இந்தக்காலத்தில் உண்மையையும் பொய்போல் சொல்ல வெண்டியுள்ளது.
    பதிவு அருமை குட்டன் ஐயா.

    ReplyDelete
  14. //என் எண்ணமெல்லாம் என்னைப் பற்றி அவனிடம் என்ன சொன்னாய் நீ என்பதில்தான்!//

    :)

    ReplyDelete