ஒரு சிறந்த பென்சிலாக விளங்க வேண்டுமானால்,அந்தப் பென்சில்—
தன்னை ஒருவர் கையில்
எடுத்துக் கொள்ளச் சம்மதித்தால்தான் சிறப்பான செயல்களைச் செய்ய முடியும்
தேவைப் படும்போதெல்லாம் நன்கு
சீவி கூர்படுத்தப்படத் தயாராக இருக்க வேண்டும்- அது வலித்தாலும் கூட.
செய்த தவறுகளைத் திருத்திக்கொள்ள
வேண்டும்
உள்ளே என்ன இருக்கிறதோ அது
மிக முக்கியம்
எந்த நிலையிலும் எந்த
நேரத்திலும் தெளிவாக எழுத வேண்டும்;தன் செயலைப் பதிக்க வேண்டும்
இப்போது
அந்தப் பென்சிலின் இடத்தில் நம்மை வைத்துப் பார்ப்போமா?
கடவுளின் கையில் நம்மை ஒப்படைக்க வேண்டும்நம்மிடம்
இருக்கும் திறமைகள் மற்றவருக்குப் பயன்பட வேண்டும்
.
வாழ்க்கையில் பல பிரச்சினைகள் வரலாம்;ஆனால் அவையே
நம்மைக் கூர் படுத்திச் சிறக்கச் செய்யும் சாதனங்கள்.
நம் தவறுகளைத் திருத்தி நம்மை மேம்படுத்திக் கொள்ள வேண்டும்.
நமக்குள்ளே என்ன இருக்கிறது என்பது மிக முக்கியம்
வாழ்வில் எந்தக்கட்டத்திலும் எந்த நிலையிலும் சோர்வின்றிச்
செயல் பட்டு நம் முத்திரை பதிக்க வேண்டும்
நாம் பென்சில் போலத்தான்.
படைத்தவன் நம்மைப் படைத்த நோக்கத்தைச் சரிவர நிறவேற்ற
வேண்டும்.
வாழ்க்கையில் சிறக்க வேண்டும்!
அழகான உதாரணமும்.. பதிவும்.. உண்மைதான்ன்ன்..
ReplyDelete“உளி ஏறுவது வலி என நினைத்தால்....
கற்கள் சிலையாகாது..”..
அழகாகச் சொன்னீர்கள் அதிரா.
Deleteநன்றி
பென்சில் தத்துவம் சிறப்பு! உண்மையில் கடைபிடிக்க வேண்டிய ஒன்றும் கூட! நன்றி!
ReplyDeleteகருத்துக்கு நன்றி சுரேஷ்
Deleteநல்ல ஒப்புமை....
ReplyDeleteஅழகிய நடையில்...
மிக்க நன்றி சௌந்தர் சார்
Deleteபென்சிலையும் மனிதர்களையும் ஒப்பிட்டு எழுதியவிதம் அருமை!
ReplyDelete// நாம் அனைவரும் பென்சில்களா?! ////
ஆம்! நிச்சயமாக!
சரிதான்!
Deleteநன்றி மணி மணி
அருமையான விளக்கம்...
ReplyDeleteநன்றி ஸ்கூல் பையன்
Deleteபென்சில் ஒப்புமை அருமை...
ReplyDeleteநன்றி ரெவெரி
Deleteம்ம்..உண்மை தான்..நல்லா சொன்னிங்க பாஸ்..
ReplyDeleteநன்றி ஆதிரா
Deleteவாழ்வில் எந்தக்கட்டத்திலும் எந்த நிலையிலும் சோர்வின்றிச் செயல் பட்டு நம் முத்திரை பதிக்க வேண்டும்//உண்மை
ReplyDeleteநன்றி கண்ணதாசன் ஐயா
Deleteநல்ல உதாரணம்.... சிறப்பான பகிர்வுக்கு நன்றி குட்டன்.
ReplyDeleteநன்றி வெங்கட்
Deleteஎன்ன வர வர தத்துவங்களாக தந்துகொண்டு இருக்கிறீர்கள். இருப்பினும் ஒப்பீடு சரியே!
ReplyDeleteஎன்னவோ தெரியவில்லை;தத்துவம் வருகிறது!
Deleteநன்றி சார்
ஹா ஹா ஹா !!! நான் இந்த பென்சிலை கடவுள் கையில் கொடுக்காமல், ஒரு அரக்கன்/சாத்தான் கையில் கொடுத்தால் எப்படி இருக்கும் என்று யோசித்து பார்த்தேன். செம சிரிப்பு....
ReplyDeleteநல்ல கருத்து நண்பா, உதாரணத்துடன் சொன்னது அருமை!
:))
Deleteநன்றி ஆகாஷ்
''..படைத்தவன் நம்மைப் படைத்த நோக்கத்தைச் சரிவர நிறவேற்ற வேண்டும்.
ReplyDeleteவாழ்க்கையில் சிறக்க வேண்டும்! ..''
unmai.
Eniya vaalththu.
Vetha.Elangathilakam.
நன்றி வேதாம்மா
Deletearumai sako..!
ReplyDeleteநன்றி சீனி
Deleteபென்சிலா...?
ReplyDeleteசீவ சீவ குட்டையாகி விடுவோமே....
என்ன குட்டன் ஐயா.... தத்துவம் இடிக்கிறதே....
முடிவு என்பது மனிதனுக்கும் உண்டல்லவா!
Deleteபென்சில் சிறித்து சிறிதாக மறைந்தாலும்,பயன்பட்டு மரைகிறது.
மெழுகுவர்த்தி தன்னையே உருக்கிக் கொண்டு ஒளி தருகிறது
அதுதானே சிறப்பு அருணாம்மா
நன்றி
Deleteசிறப்பான உதாரணம் அருமையான பதிவு
ReplyDeleteநன்றி ராஜ்
Deleteபென்சில் உவமை அருமை உண்மை
ReplyDeleteநன்றி மலர் பாலன்
Deleteநல்ல தத்துவம்.
ReplyDeleteநன்றி மாதேவி
Deleteஆஹா, ஒரு பென்சில் உள்ளே இவ்வளவு தத்துவமா !! நல்ல பதிவு நண்பரே !
ReplyDeleteநன்றி சுரேஷ் குமார்
Deleteபென்சிலை பயன்படுத்தும்போது இனி உங்கள் நினைவு வரும்.
ReplyDeleteபென்சில் தத்துவங்கள் சிறப்பாக இருக்கின்றன.
வாழ்த்துகள்