Monday, December 3, 2012

நித்யானந்தா பற்றிய அரிய தகவல்கள்!



பகவான் நித்யானந்தா அவர்கள் பிறப்பு பற்றி உறுதியான தகவல்கள் இல்லை.

அவரது சீடர்கள் சொல்வது- கோழிக்கோட்டுக்கு அருகில் உள்ள டுனேரி கிராமத்தில் ஒரு ஆதரவற்ற குழந்தையாக நாயர் தம்பதியால் கண்டெடுக்கப்
பட்டார்.

பிறப்பு 1897 ஆம் ஆண்டு என்று மட்டும் தெரிகிறது. இருபது வயதுக்கு முன்பே அவர்,ஹிமாலயாவில் அலைந்து திரிந்து ஆத்ம ஞானம் பெற்றார் .

1920 இல் திரும்பி வந்து கன்னங்காட்டில் ஒரு ஆசிரமம் கட்டத் தொடங்கினார்.
அக்கால ஆங்கில அதிகாரிகள் அவர் கள்ள நோட்டுத்தயாரிப்பதாகச் சந்தேகப் பட,அவர் அவர்களை முதலைகள்  நிறைந்த ஒரு குளத்துக்கு அழைத்துச் சென்று அதில் மூழ்கி ரூபாய் நோட்டுக்கள் எடுத்துக் காட்டினாராம்.

1936 இல் மகாராஷ்ட்ராவில் உள்ள கணேஷ்புரிக்குச் சென்று அங்கேயே தங்கி ஆசிரம் நிறுவினார்.8-8-1961 இல் மகா சமாதி அடைந்தார்.

இவருக்குப் பின் ஆசிரமத்தலைவராக வந்தவர் ஸ்வாமி முக்தானந்தா.1982 இல் இவர் காலமானார். 

அவருக்குப் பின் குருமயி சித்விலாசானந்தா, அவர் சகோதரர் நித்யானந்தா இருவருக்கும்  கருத்து வேற்றுமை வந்து ,நித்யானந்தா தனியாகச் சென்று ஆசிரமம் அமைத்துப் பின்  தஸ்னமி அகாராவின் மஹா மண்டலேஸ்வரர் ஆனார்.

பகவான் நித்யனந்தாவின் சமாதி கணேஷ்புரியில் இருக்கிறது.


17 comments:

  1. நான் இவரோ என்னு நினைச்சிட்டேன்.
    இவருக்கும் அரிய தகவல்கள் இருக்குமோ என்று ஆசைப்பட்டுட்டேன்

    ReplyDelete
  2. @@ நித்யானந்தா..
    நானும் இவரோ என்றுதான் நினைத்து வந்தேன்..பகவான் நித்யானந்தாவின் தகவல்கள் கேள்விப்படாதவை.நன்றியோடு நான்.

    ReplyDelete
  3. இந்த தடவை நான் ஏமாறவில்லை. வழக்கம்போல் நீங்கள் வேறு ஒருவரைப்பற்றி பதிவிட்டிருப்பீர்கள் என நினைத்தேன்.எனது கணிப்பு சரியாகிவிட்டது!

    ReplyDelete
    Replies
    1. விழித்துக் கொண்டீர்கள்;புலி வருது கதை இனி நடக்காது!
      நன்றி

      Delete

  4. இவர் வேறு அவர் வேறா ! அடக் கடவுளே! நல்ல தலைப்பு!

    ReplyDelete
    Replies
    1. இருவர் பெயரும் ஒன்றேன்றால் நான் என்ன செய்ய அய்யா?
      நன்றி

      Delete
  5. யோவ்........ நீ பேசாம பதிவின் தலைப்பை, "குட்டன் அல்வா ஸ்டால்" அப்படின்னு மாத்திடு, அதான் பொருத்தமா இருக்கும்!!

    ReplyDelete
    Replies
    1. அட!இதுவும் நல்லாருக்கே! முதலில் உப தலைப்பாகப் போட்டு விடட்டுமா?!
      நன்றி ஜயதேவ் தாஸ்

      Delete
  6. ஏம்பா! இப்படி ஏமாத்தறீங்க? அரிய தகவல்கள்! நன்றி!

    ReplyDelete
  7. பாஸ் இத தஞ்சாவூர் கல்வெட்டில எழுதிவச்சுட்டு அருகில நீங்க உக்காந்துக்குங்க...ஹிஹி...அந்த நித்தியை விடுங்கப்பா சனியன் தொலையட்டும்

    ReplyDelete
  8. தலைப்பில் எத்தனை நாள் தான் ஏமாற்றப் போறீங்க?

    :)

    ReplyDelete
  9. ஐயையோ நான் அப்படியே ஷாக் ஆயிட்டேன்

    ReplyDelete
  10. நித்யமே ஜெயம்.....

    ReplyDelete