Wednesday, December 12, 2012

உங்கள் துன்பங்களை நான் ஏற்றுக் கொள்கிறேன்!

பணம்தான் வாழ்க்கையில் எல்லாமா?

பணத்தால் படுக்கையை வாங்கலாம்;தூக்கத்தை வாங்க முடியுமா?!

பணத்தால் கடிகாரத்தை வாங்கலாம்;நேரத்தை வாங்க முடியுமா?!

பணத்தால் புத்தகத்தை வாங்கலாம்;அறிவை வாங்க முடியுமா?!

பணத்தால் மருந்தை வாங்கலாம்;ஆரோக்கியத்தை வாங்க முடியுமா?!

பணத்தால் அந்தஸ்தை வாங்கலாம்;மரியாதையை வாங்க முடியுமா?!

பணத்தால் உடலுறவை வாங்கலாம்;உண்மைக்காதலை வாங்க முடியுமா?!

பல நேரங்களில் பணத்தால் கிடைப்பது துன்பம்,வேதனை.

நான் உங்கள் நண்பன்.

ஒரு நண்பனாக நான் உங்கள் துன்பம் வேதனைகளை ஏற்கத் தயார்.

உங்கள் பணத்தை எல்லாம் எனக்குக் கொடுத்து விட்டு நிம்மதியாக இருங்கள்!

------உங்கள் நண்பன் ஒருவன்.

(இணையத்திலிருந்து)

இலவச இணைப்பு--ஒரு ஜோக்
------------------------------------------

வகுப்பறையில் இரு மாணவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருந்தனர்.

ஆசிரியர் வந்து அவர்களைக் கண்டித்துக் காரணம் கேட்டார்.

அவர்கள் சொன்னார்கள்”சார் கீழே பத்து ரூபாய் கிடந்தது.அதை மிகப் பெரிய பொய்யனுக்குக் கொடுப்பதாகத்  தீர்மானித்தோம்.யார் அது என்பதில்தான் வாக்குவாதம்.”


ஆசிரியர் சொன்னார்”பொய்யா?சே?என்ன மோசமான எண்ணம் உங்களுக்கு?நான் உங்கள் வயதில் பொய்யே சொன்னதில்லை.”

மாணவர்கள் அந்தப் பணத்தை ஆசிரியருக்கே கொடுத்து விட்டனர்.

(இந்தியாவின் நேரங்கள்)

10 comments:

  1. நியாயமான கேள்விகளுடனான பகிர்வு.

    ReplyDelete
  2. இதுவும் நல்லாத்தான் இருக்கு ? ஆரம்பம் சரிதான் முடிவு ?

    ReplyDelete
    Replies
    1. முதல் பின்னூட்டம் கவிதாயினி!இரண்டாவது கவியாழி!ஆனால் கவிதையோ எனக்கு வராது!!
      எந்த முடிவு?பதிவின் முடிவா?ஆரம்பத்தின் முடிவா?முடிவின் முடிவா!
      நன்றி!

      Delete
  3. மத்தவங்க துன்பத்தை ஏற்ற உங்களுடைய துன்பத்தை நான் ஏத்துக்கறேன், எல்லோரும் குடுக்கும் பணத்தை எனக்கு அனுப்பிடுங்க. இரண்டாவது, வாத்தியார தலையையே எல்லோரும் உருட்டுரீங்கலேப்பா!!

    ReplyDelete
  4. ம்ம்ம்ம்ம்
    கேள்விகள் நியாயம்
    நகைச்சுவையும் கலக்கல்

    ReplyDelete
  5. பணம் தான் அனைத்திற்கும் மூல காரணம்...
    அருமையாக சொல்லியிருக்கிறீர்கள் குட்டன் ஐயா.

    ReplyDelete
  6. முதல் துணுக்கின் கடைசி வரியை மிகவும் இரசித்தேன். இரண்டாவது துணுக்குக்கு கீழே தந்த அந்த செய்தித்தாள் பெயரின் தமிழாக்கம் அருமை!

    ReplyDelete
  7. நல்லாவே பிளான் பன்றிக பாஸ் ஹி ஹி ..

    ReplyDelete