Thursday, December 27, 2012

குஷ்புவின் சத்தமில்லாத சமூக சேவை!



ரயில் நிலையம்.

நடை மேடையில் ஒரு கோடி.

அங்கேயே வாழ்ந்து அங்கேயே பணிபுரியும் சிறுவர்கள் கூட்டம்….

ஒரு பெண்ணைச் சுற்றி…

அந்தப்பெண்....

அவர்கள் நலனுக்காகப் போராடுபவள்.

சிறுவர்கள் ஏன் வீட்டை விட்டு ஓடிப் போகிறார்கள் என்பதைப் பற்றிய ஒரு ஆய்வு மேற் கொண்டிருக்கும் பெண்.

சில மாதங்களுக்கு முன் இதே ரயில் நிலையத்தில் நிகழ்ந்த ஒரு சம்பவமே அவளை அந்தச் சிறுவர்களுக்காகப் பணி செய்யத் தூண்டியது.

அந்தநாள்….

ரயில் நிலையத்தில் கிடைக்கும் சீசாக்கள்,காகிதம்,குப்பைகளை விற்றுச் சம்பாதிக்கும் ஒரு சிறுவன்,ஒடும் ரயிலில் அகப்பட்டுச் சின்னா பின்னமான நாள் .

அதை அவள் பார்க்க நேர்ந்தது.

நீண்ட நேரம் அவ்வுடல் தண்டவாளத்தின் அருகிலேயே கிடந்தது.

மனிதர்கள் போய்க்கொண்டும் வந்து கொண்டும் இருந்தார்கள்-எதுவுமே நடக்காத மாதிரி.

அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வெகு நேரமாயிற்று

அந்த நிகழ்ச்சி அவளை வெகுவாக உலுக்கியது.

எந்தவித பாதுகாப்பும் இல்லாத,யாராலும் கண்டு கொள்ளப்படாத அந்தச் சிறுவர்களின் வாழ்வுக்காக ஏதாவது செய்ய வேண்டும் எனத் தீர்மானித்தாள்.

தேசிய சிறுவர் உரிமைப் பாதுகாப்பு ஆணையம் இத்தகைய சிறுவர் நலனுக்காகச் சில வழிகாட்டுதல்கள் விதித்துள்ளது.

அவை அமுல் படுத்தப் பட வேண்டும் என நீதி மன்றத்தில் ஒரு பொது நல வழக்குத் தொடர்ந்திருக்கிறாள் அப்பெண்.

பல அரசு சாரா அமைப்புகளுடன் சேர்ந்து அச்சிறுவர்களுக்காகப் போராடி வருகிறாள், இந்த,வசதியான குடும்பத்தில் பிறந்த,பட்ட மேற்படிப்பும் முனைவர் பட்டமும் பெற்ற இந்த இளம் பெண்.

இவள் பெயர்...குஷ்பு ஜெயின்...

இடம்...புது தில்லி ரயில் நிலையம்.

அவளுக்கு என் தலை தாழ்ந்த வணக்கங்கள்.


ஆதாரம்:டைம்ஸ் ஆஃப் இந்தி

24 comments:

  1. நீங்கள் குஷ்பு என்று எழுதியிருந்தபோதே இவர் ‘அவர்’ இல்லை என்று தெரிந்துகொண்டேன். ஏனெனில் நம்மவர் பற்றி தினம் செய்தி வந்துகொண்டே இருக்கும்போது, அவர் சேவை செய்தது மட்டும் தெரியாமல் போய்விடுமா என்ன? நல்ல உள்ளம் கொண்டவரை அறிமுகப்படுத்தியதற்கு நன்றி!

    ReplyDelete
    Replies
    1. நீங்க உஷாரானவர்தான்!
      நன்றி

      Delete
  2. அட இப்படி தலைப்பு வைச்சாத்தான் நாலு பேரு படிக்க வருவாங்க! நல்லதொரு பகிர்வு! நன்றி!

    ReplyDelete
    Replies
    1. நாலு பேரு படிக்கணுனா என்ன வேணா செய்யலாம்?!
      நன்றி

      Delete
  3. நிச்சயம் பாராட்டித்தான் ஆக வேண்டும் .அவருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. குட்டன் அல்வா ஸ்டால்!! எல்லாரும் வாங்க சுடச் சுட அல்வா!!

    குஷ்பு ஜெயின்\\குஷ்பு என்றால் நறுமணம் என்று அர்த்தமாம். நம்ம மாநிலத்தில் உள்ளது நாறிப் போனது. ஆனால் இது உண்மையில் குஷ்பு தான்!!

    ReplyDelete
    Replies
    1. அல்வாதான் பயங்கரமா விற்பனை ஆகுது!
      நன்றி ஜயதேவ்

      Delete
  5. //அட இப்படி தலைப்பு வைச்சாத்தான் நாலு பேரு படிக்க வருவாங்க! //

    தவறான கணிப்பு இந்த தலைப்பை பார்த்தே தவிர்த்தேன் கடைசியாக உறங்கபோகுமுன் ஒரு முறை பார்ப்போம் என்றே நான் படித்தேன். நல்ல உள்ளத்துக்கு நன்றி!.

    ReplyDelete
    Replies
    1. உங்களைப் போன்றோர் குறைவு!
      நன்றி

      Delete
  6. குஷ்பு ஜெயின் நிச்சயம் பாராட்டப்பட வேண்டியவர்தான். நல்லதொரு தகவல் பகிர்ந்தமைக்கு நன்றி.

    ReplyDelete
  7. இது போல எளியவர்களுக்கு நம் வணக்கங்கள் என்றும் உண்டுதான்,இவர் போல இன்னும் நிறையப்பேர் இருக்கிறார்கள்தான்.

    ReplyDelete
  8. //குஷ்பு ஜெயின்\\குஷ்பு என்றால் நறுமணம் என்று அர்த்தமாம். நம்ம மாநிலத்தில் உள்ளது நாறிப் போனது. ஆனால் இது உண்மையில் குஷ்பு தான்!!//

    அது குஷ்பு, இது ''குசு''பு

    ReplyDelete
  9. This comment has been removed by the author.

    ReplyDelete
  10. நல்லவர்களும் வாழ்கிறார்கள் இன்னும்.சந்தோஷப்படுவோம் !

    ReplyDelete
  11. காட்சி ஊடகங்களே எங்கள் பிள்ளைகளை விட்டுவிடுங்கள்

    நன்மக்களே!
    வன்முறை கொலை கொள்ளை பாலியல் குற்றங்கள் பரவாமல் தடுக்க காட்சி ஊடகங்களின் பங்கு, இன்றைய தமிழக மக்களின் இன்றைய தேவைகள், நம் அரசின் கடமைகள், அரசுத் துறைகள் செயல்பாடின்மை குறித்த விழிப்புணர்வு ஆர்ப்பாட்டத்திற்கு அன்புடன் அழைக்கின்றோம்.
    நாள் 04-01-2013 வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு
    இடம் மெமோரியல் ஹால் சென்னை சென்ட்ரல் இரயில் நிலையம் அருகில் சென்னை.

    பெண்கள் பாலியல் வன்முறையால் பாதிக்கப்படுவதை தடுக்க வன்முறை கலாச்சாரம் பரவாமல் தடுக்க.
    மத்திய மாநில அரசே காட்சி ஊடகங்கள் காலை மாலை வேளைகளில் நாட்டு விடுதலைக்கு வித்திட்ட மாவீரர்களின் தியாகங்களையும் நாட்டு விடுதலை பற்றிய காட்சிகளையும் இந்திய துணைக்கண்டத்தின் பெருமைகளையும் அதன் வரலாற்றையும் இந்திய கலாச்சாரங்களையும் நீதி போதனைகளை மட்டும் ஒளிபரப்பிட வேண்டுமென்று சட்டம் இயற்றுங்கள்.
    காட்சி ஊடகங்களே எங்கள் பிள்ளைகளை விட்டுவிடுங்கள் எங்கள் பொருளைப் பெற்று உங்கள் வளங்களைப் பெருக்கிக் கொண்டு எங்கள் பிள்ளைகள் மனங்களில் நஞ்சை விதைக்கும் காட்சிகளை மாற்றுங்கள்.

    சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினங்களில் மட்டுமாவது நாட்டுக்காக உழைத்த உத்தமர்களைப் போற்றுங்கள். சுதந்திரப் போராட்டம் மற்றும் தியாகிகளின் தியாகங்களைப் போற்றுங்கள்.

    சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினங்களில் மட்டுமாவது எங்கள் பிள்ளைகளின் காமத்தை தூண்டும் ஆபாச காட்சிகள் இரட்டை அர்த்த வசனங்கள் இல்லாத காட்சிகளை காண்பியுங்கள்.
    சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினங்களில் எங்கள் பிள்ளைகளை தவறான கதாநாயகனாக மாற்றும் வன்முறை கலாச்சார சீரழிவு காட்சிகளை தவிர்த்து எங்கள் பிள்ளைகளுக்கு வீரம்,அன்பு, சமூகம், மனிதாபிமானம் சமூக அக்கறை கொண்ட தலைவர்களைப் பற்றிய காட்சிகளைக் காண்பியுங்கள்.

    சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினம் போன்ற தினங்களில் அரை குறை ஆடைகளில் கவர்ச்சி நடிகர்களின் பேட்டி அவர்களின் சாதனைகளைக் கூறாமல் தியாகிகளின் வரலாற்று சாதனைகளை அவர்கள் தம் வாரிசுகளின் பேட்டி கண்டு எங்கள் பிள்ளைகளுக்கு தேசப் பற்றை விதையுங்கள்.
    இன்றைய சமுதாய நலனுக்காக சேவையாற்றும் அரசு அல்லாத சேவை அமைப்புகளை அதன்செயல்பாடுகள் பற்றி எங்கள் பிள்ளைகளுக்கு சொல்லித்தரும் காட்சிகளைக் காண்பியுங்கள்.
    மக்கள் விழிப்புணர்வு பெற போராடும் நல்ல மனிதர்களை அவர்கள் தம் சேவை பற்றியும் எங்கள் பிள்ளைகளுக்கு சொன்னால் எங்கள் பிள்ளைகளும் சமுதாயச் சேவை செய்யவேண்டும் என்ற சிந்தனையை உருவாக்கும் நிகழ்சிகளைக் காண்பியுங்கள்.
    புதிய கண்டுபிடிப்பாளர்கள், சாதனையாளர்கள், சுய தொழில் முனைவோர்கள், உழவுத்தொழில் செய்பவர்கள் மற்றும் நேர்மையான அரசு அலுவலர்களைப் போற்றி அவர்களை ஊக்கப்படுத்தும் காட்சிகளைக் காண்பியுங்கள்.

    மேற்கண்ட நம் கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த மூன்று ஆண்டுகளாக 2010 ஆம் டிசம்பர் 3 ஆம் தேதிமுதல் இன்றுவரை இந்தியன் குரல் அமைப்பு போராடிவருகிறது.
    நம் கோரிக்கை அரசுக்கும் இந்த காட்சி ஊடகங்களுக்கும் முன்வைக்கின்றோம்.
    இந்த ஆண்டும் மேற்கண்ட நம் கோரிக்கைகளை வலியுறுத்தியும் இன்றைய நிகழ்வுகள் குறித்தும் 04-01-2013
    வரும் சனவரி மாதம் நான்காம் நாள் சென்னை மெமோரியல் ஹால் அருகில் காலை பத்து மணிக்கு ஆர்ப்பாட்டம் நடைபெறும். அனைவரும் பெரும் திரளாக கலந்து கொள்ள அன்புடன் அழைக்கின்றோம்
    காட்சி ஊடகங்களால் உருவாகும் கலாச்சாரச் சீரழிவை தடுத்து நிறுத்திட ஒன்று படுவோம்.
    மனிதாபிமானமுள்ள அரசும் மனிதாபிமானமுள்ள காட்சி ஊடகங்கள் நம் கோரிக்கைகளை ஏற்றுக்கொள்ளும் என்று நம்புகின்றோம்.

    -இந்தியன் குரல்

    ReplyDelete
    Replies
    1. நல்லது நடக்கட்டும்.நன்றி

      Delete
  12. My salutations to the noble soul.May her tribe increase. Well have you ever worked in DAILY THANTHI news paper. You seem to have perfected the art of enticing readers with attractive titles. Vasudevan

    ReplyDelete