நோயாலே மடிந்திட்டான் புத்தன் கண்டீர்
அந்தணனாம் சங்கரா சார்யன் மாண்டான்
அதற்கடுத்த விராமா நுஜனும் போனான்
சிலுவையிலே அடியுண்டு யேசு செத்தான்
தீயதொரு கணையாலே கண்ணன் மாண்டான்
பலர்புகழு மிராமனுமே யாற்றில் வீழ்ந்தான்;
பார் மீது நான் சாகாதிருப்பேன் காண்பீர்!-- ( பாரதி)
பாரதிக்குச் சாவில்லை!
இன்னும் வாழ்கிறான் நம்முடன்.
காலனைச் சிறுபுல்லென மதித்துக்
காலருகே வந்தால் அவனை மிதிக்கவும்
எண்ணிய வீரனுக்குச் சாவேது?
பாரதிக்குப் பிறந்த நாள் வாழ்த்துகள்!
அழகாக கவிதை...
ReplyDeleteவாழ்த்துக்கள்
நன்றி ஆத்மா
Deleteநல்லதொரு பகிர்வு! சாகாவரம் பெற்ற பாரதிக்கு சிறப்பான பாராட்டு கவி! வாழ்த்துக்கள்!
ReplyDeleteநன்றி சுரேஷ்
Deleteஎன்ன விபரீதமான சிந்தனை?
ReplyDeleteதன்னை சங்கரர், ஏசு, இராமனுஜர், புத்தர், இராமர் - இவர்களோடு ஒப்பிட்டு ஒருவன் பேசுவான் என்று நினைத்திருந்தால் வேதனையில் துடித்திருப்பார்.
இவர்களையெல்லாம் தொழுதவர் அவர். எப்படி இணையாவார்?
அந்த வரிகள் பாரதியினுடையவை;அடைப்புக் குறிக்குள் பாரதி என்று குறித்திருக்கிறேனே!
Deleteபின் வருபவையே என் வரிகள்.
வருகைக்கு நன்றி இளம்பிறை அவர்களே
ada...
ReplyDeleteநன்றி சீனி
Deleteவாழ்க பாரதி!
வாழ்க,வாழ்க
Deleteநன்றி ஐயா
பாட்டுக்கொரு புலவனை அவரது பிறந்தநாளில் வாழ்த்தியது மகிழ்ச்சி. கவிஞர் கண்ணதாசன் சொன்னதை மாற்றி, ‘பாரதி நிரந்தரமானவன் அழிவதில்லை. எந்த நிலையிலும் அவர்க்கு மரணமில்லை.’ என்று பாடலாம்
ReplyDeleteசரியாகச் சொன்னீர்கள் ஐயா!
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் நன்றி