Friday, December 14, 2012

மனம் திறந்து பேசுகிறேன்!



பிப்ரவரி 2012 இல் இந்த வலைப்பூ மலர்ந்தது.

ஆகஸ்டு மாதம் முடிய எழுதிய பதிவுகள் மொத்தம் 14 தான்.

செப்டம்பர் மாதத்தில் கொஞ்சம் வேகம் பிறந்தது .   

இன்று வரை 100 பதிவுகள் எழுதி விட்டேன்!

சதம் அடித்து விட்டேன்.

ஆனால் அதற்குள் ,இந்தப் பத்து மாதத்தில் ,சதம் அடிப்பதற்குள்,மிகவும் சிரமப்பட்டு விட்டேன் என்பதே உண்மை.

பதிவர்களில் பல விதம்.

தினம் ஒரு பதிவு எழுதியே தீர வேண்டும்;அப்போதுதான்  இடத்தைத் தக்க வைத்துக் கொள்ள முடியும் என்ற வேகத்தில் எழுதுபவர்கள்.

இவர்கள் இலக்கு-பின்னூட்டங்கள்,ஹிட்ஸ்,வாக்குகள்,ரேங்க்!

வேறு சிலர் எதைப் பற்றியும் கவலைப்படாமல் எழுதிக்கொண்டே இருப்பவர்கள். 

இவர்களாலும்  எழுதாமல் இருக்க முடியாது.அது ஒரு போதை!

வேறு ரகத்தவர் ஆத்ம திருப்திக்காக எழுதுபவர்கள்.தங்கள் எண்ணங்களுக்கு வடிகால் தேடி எழுதுபவர்கள்.

வேறு சிலர் அவ்வப்போது ஒரு பொழுது போக்குக்காக எழுதுபவர்கள்.

இப்படி எத்தனையோ விதம்.

இதில் நான் எந்த விதம்—தெரியலையேப்பா!

இன்னொரு விதமான பகுப்பு—

சிலர் கவிதை மட்டுமே எழுதுபவர்கள்.

சிலர் அரசியல் மட்டும் எழுதுபவர்கள்.

சிலர் கதைகள் மட்டும் எழுதுபவர்கள்

சிலர் மொக்கை மட்டுமே போடுபர்கள்.

 எதுவும் தெரியாமல் எல்லாவற்றிலும் குழப்பும்,குழம்பும் ஒரு பதிவன்-குட்டன்


இனியும் தொடர்ந்து  எதையாவது பதிவிட வேண்டும்; குழப்ப வேண்டும்;அறுக்க வேண்டும்.

முடியுமா ?தெரியவில்லை.

முயல்வேன்;முயற்சி திருவினை ஆக்கும்!

ஒரு பதிவு ஒப்பேத்தியாச்சு!



25 comments:

  1. முதல் நூறுதான் கஷ்டம் என நினைக்கிறேன்
    பின்னர் ஒரு தெளிவும் தைரியமும்
    தானாக வந்துவிடும்
    ஜமாயுங்கள்
    பதிவுகள் ஆயிரமாயிரமாய் வளர
    என் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்கு நன்றி ஐயா

      Delete
  2. சதத்திற்கு வாழ்த்துக்கள். தொடர்க!
    த.ம. 3

    ReplyDelete
  3. //இன்று வரை 100 பதிவுகள் எழுதி விட்டேன்!
    சதம் அடித்து விட்டேன்.//

    வாழ்த்துக்கள்! தொடர்ந்து எழுதுங்கள்!

    ReplyDelete
    Replies
    1. நன்றி தமிழ் இளங்கோ ஐயா

      Delete
  4. நூறு ஆயிரமாக வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்கு நன்றி புலவர் ஐயா

      Delete
  5. Replies
    1. நன்றி வெங்கட் நாகராஜ்

      Delete
  6. வாழ்த்துக்கள்! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  7. 100 ஆயிரமாக வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  8. நண்பரே நானும் உங்களைப்போல் ஆகஸ்ட் மாதத்தில் தான் எழுத ஆரம்பித்தேன் நானும் கூட நூறு பதிவுக்குமேல் எழுதி விட்டேன் நானும் உங்களைப்போல் பயமாய் உள்ளது
    நூறுக்குமேல் பலநூறு எழுதி பாராட்டு பெறுங்கள்

    ReplyDelete
    Replies
    1. நன்றி கவியாழி கண்ணதாசன் அவர்களே

      Delete
  9. நூறாவது பதிவிற்கு வாழ்த்துக்கள்! நீங்கள் பதிவர்களில் எந்த இரகம் என்று நீங்களே கணித்துவிட்ட பிறகு நாங்கள் என்ன சொல்ல? விரைவில் ஆயிரமாவது பதிவை எதிர்பார்க்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்கு நன்றி ஐயா

      Delete
  10. வாழ்த்துக்கள் பாஸ்.... அடுத்து இரட்டைச் சதமடிக்கவும் வாழ்த்துகிறேன்

    ReplyDelete
  11. வாழ்த்துக்கள் குட்டன் தொடரட்டும் பணி:)))

    ReplyDelete
  12. ஒரு பதிவு ஒப்பேத்தியாச்சு :)))

    நுர்று ஆயிரமாக பெருக வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  13. \\அறுக்க வேண்டும்.\\ யாரு கழுத்தை...!!

    ReplyDelete