Wednesday, December 26, 2012

சொல்லக் கேட்டேன்;சொல்கிறேன்!




மரங்களை வெட்டுகிறோம்.
காடுகளை அழிக்கிறோம்.
கான்க்ரீட் காடுகளை உருவாக்குகிறோம்.
வைரமுத்துவின் ஒரு கவிதை வரிகள் இதோ…..

”பிறந்தோம்...
தொட்டில், மரத்தின் உபயம்,
நடந்தோம்...
நடைவண்டி, மரத்தின் உபயம்,
எழுதினோம்...
பென்சில்- பலகை, மரத்தின் உபயம்,
மணந்தோம்...
மாலை-சந்தனம், மரத்தின் உபயம்,
கலந்தோம்...
கட்டில் என்பது மரத்தின் உபயம்,
துயின்றோம்...
தலையணை பஞ்சு, மரத்தின் உபயம்,
நடந்தோம்...
பாதுகை ரப்பர், மரத்தின் உபயம்,
இறந்தோம்...
சவப்பெட்டி, பாடை, மரத்தின் உபயம்,
எரிந்தோம்...
சுடலை விறகு, மரத்தின் உபயம்,
மரம்தான் மரம்தான் எல்லாம் மரம்தான்,
மறந்தான் மறந்தான் மனிதன் மறந்தான்,
மனிதா மனிதனாக வேண்டுமா
மரத்திடம் வா...”

அருமை;அருமை
வேறென்ன சொல்ல? 
............................................................
அடுத்து சிறிது ஆன்மிகம்.

ஒரு நாள் ஸ்ரீகிருஷ்ணரும் ருக்மணியும் உஞ்சலாடிக் கொண்டிருந்தனர்.
திடீரெனக் கிருஷ்ணர் வாந்தியெடுத்தார்
ருக்மணி பதறிப்போய் என்ன வெனக் கேட்டாள்.
பகவான் சொன்னார்”கழுநீர் குடித்தேன்,அதுதான்”
ருக்மணி சிரித்தாள்”நீங்கள் மாடு மேய்ப்பவர் என்பதற்காக மாடு குடிப்பதையும் குடிக்க வேண்டுமா?”
கிருஷ்ணர் சொன்னார்...
”ஒருவனிடம் மூன்று மாடுகள் உள்ளன.ஒரு மாட்டுக்குப் புதுக் கழுநீரும் இரண்டாவதுக்கு ஒரு நாள் பழைய கழுநீரையும்,மூன்றாவதற்கு இரண்டு நாள் பழையதையும் கொடுப்பான்.இன்று மூன்றாவது மாட்டுக்கு மிகப் பழைய கழுநீரைக் கொடுக்கவே அது குடிக்கவில்லை.அவன் கிருஷ்ணாய என்று சொல்லிக் கொட்டி விட்டான்.என்ன செய்ய?”

ஆம் பகவான் நீங்கள் எதைப் படைத்தாலும் ஏற்றுக்கொள்கிறான்!
அவன் எளியன்!

9 comments:

  1. ஆரம்பம் முதல் இறுதி வரை மரம் மனிதனின் அத்தியாவசியம் என்பதை வைரமுத்துவின் வரிகள் சொல்கிறது.மனிதன் உணர்வானா?

    ReplyDelete
  2. வைரமுத்துவின் கவிதை அருமை.
    பகிர்தமைக்கு மிக்க நன்றி குட்டன் ஐயா.

    ReplyDelete
  3. மர மந்தைகளுக்கு புரிய மாட்டேன்குதே என்ன செய்வது?

    ReplyDelete
  4. இரண்டுமே அருமை! அருமை! பகிர்வுக்கு நன்றி!

    ReplyDelete
  5. //மரம்தான் மரம்தான் எல்லாம் மரம்தான்,
    மறந்தான் மறந்தான் மனிதன் மறந்தான், //

    உண்மையில் வைர வரிகள்! கவிப்பேரரசின் கவிதையை பகிர்ந்தமைக்கு நன்றி.
    இறைவன், பக்தன் எதைப் படைத்தாலும் ஏற்றுக்கொள்வான் என்பதை அழாக சொல்லியிருக்கிறீர்கள். நன்றி!

    ReplyDelete
  6. பகவான் நீங்கள் எதைப் படைத்தாலும் ஏற்றுக்கொள்கிறான்!
    அவன் எளியன்!

    மறந்தான் மறந்தான் மனிதன் மறந்தான்,
    மனிதா மனிதனாக வேண்டுமா
    மரத்திடம் வா...”

    வைர வரிகள்.. பாராட்டுக்கள்.

    ReplyDelete
  7. வைர முத்துவின் வைர வரிகள் அருமை! எடுத்துக் காட்டிதால் உமக்கும் பெருமை !

    ReplyDelete
  8. இத்தனைக்கும் தேவையான மரங்களைத்தானே அழித்துக்கொண்டிருக்கிறோம்.எத்தனை மனவருத்தம்!

    ReplyDelete