Tuesday, December 25, 2012

யார் துறவி?!



சுவாமி விவேகானந்தர் துறவறம் மேற்கொள்ள வேண்டும் எனும் எண்ணத்தில் தம்
அன்னையிடம் அனுமதி கேட்கச் சென்றார்.

அவர் அன்னை அவரை ஒரு கத்தியை எடுத்து வரச் சொன்னார்.

அன்னை சொன்ன படியே அவரும் ஒரு கத்தியை எடுத்து வந்தார்.

அதைப் பார்த்துவிட்டு அன்னை அவரிடம் சொன்னார்”இப்போது வேண்டாம்.இன்னும் சில நாள் போகட்டும்”

சில மாதங்கள் கழிந்தபின் சுவாமி மீண்டும் தன் தாயிடம் அனுமதி கேட்டார்.

அவர் முன்பு போலவே ஒரு கத்தியை எடுத்து வரச் சொன்னார்.

விவேகானந்தரும் எடுத்துச் சென்றார்.

தாய் சில காலம் போகட்டும் எனச் சொல்லி விட்டார்.

இதே போல் ஓரிரு முறை நடந்தபின்.கடைசி முறை அவர் அம்மா சொன்னது போல் கத்தியை எடுத்துச் செல்லவும்,அவர் பார்த்து விட்டு இப்போதுதான் நேரம் வந்திருக்கிறது,நீ துறவறம் மேற்கொள்ள” என்று சொன்னார்.

விவேகானந்தர் தாயிடம் முன்பு அனுமது மறுத்த,இப்போது அளித்த காரணத்தைக் கேட்டார்.

தாய் சொன்னார்”முன்பெல்லாம் நீ கத்தியை எடுத்து வரும்போது,பிடி உன் பக்கமும்,கூர் முனை என் பக்கமும் இருக்குமாறு எடுத்து வருவாய்.ஆனால் இன்றுதான்,முனை உன்பக்கமும் பிடி என் பக்கமும் இருக்குமாறு எடுத்து வந்தாய்.ஒரு துறவி என்பன் பிறருக்குத் துன்பம் தராமல்,அவர் துன்பங்களை ஏற்றுக்கொண்டு அவர்களுக்கு நன்மை மட்டுமே செய்ய வேண்டும்.அதையே இந்தக் கத்தி பிடித்த கை உணர்த்துகிறது”

எத்தனை துறவிகள் அவ்வாறு இருக்கிறார்கள்?


22 comments:

  1. நல்ல கருத்து. இப்போதுள்ள துறவிகளில் பலர் நம்மைப்போன்ற பிறவிகள்தான்.

    ReplyDelete
  2. ஒரு துறவி என்பன் பிறருக்குத் துன்பம் தராமல்,அவர் துன்பங்களை ஏற்றுக்கொண்டு அவர்களுக்கு நன்மை மட்டுமே செய்ய வேண்டும்..

    சிறப்பான பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..

    ReplyDelete
  3. அருமையான கருத்துடன் கூடிய கதை
    பதிவாக்கித் தந்தமைக்கு மனமார்ந்த நன்றி
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. உண்மைதான்...துறவறம்...அது இறைவனின் வரம்..பல்லாயிரக்கணக்கான மனிதர்களில் யாரோ ஒருவருக்குதான் அந்த பாக்கியம் கிட்டும்..
    பதிவு அருமை..நன்றி

    ReplyDelete
  5. நல்ல கருத்துள்ள கதை .. நன்றி

    ReplyDelete
  6. உண்மைச் சம்பவம் ? தகவலுக்கு நன்றி

    ReplyDelete
  7. மிகவும் அருமையான பதிவு சகோ நன்றி

    ReplyDelete
  8. மிக அருமையான உதாரண புருஷரை பற்றிய அற்புத பதிவு! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  9. சம்பவம் உண்மையா என்று தெரியவில்லை, ஆனால் அருமையான கருத்து

    ReplyDelete


  10. உண்மைக் கதையைச் சொல்லி உள்ளத்தில் பதிய வைத்தீர் நன்றி குட்டன்!

    ReplyDelete
  11. அன்புள்ள ஐயா , இந்த நிகழ்வை வேறுமாதிரி சொல்லக்கேட்டிருக்கின்றேன், இருந்த போதிலும் இதுவும் சுவையாகவே உள்ளது . சிறந்த கருத்து , வரவேற்க வேண்டிய விஷயம்.

    நன்றி , ஐயா .

    ReplyDelete
  12. அன்புள்ள ஐயா, வணக்கம்.

    இந்த நிகழ்வை வேறுமாதிரி கேட்டிருக்கின்றேன் , இது விவேகாந்தரின் வாழ்வில் நடைபெற்ற நிகழ்வு ,

    அருமையான வழிகாட்டும் அற்புத பகிர்வு,


    நன்றியுடன்

    ReplyDelete