Wednesday, December 19, 2012

அழிந்தால் அழியட்டும் இந்த உலகம்!



செல்லம்!இன்னைக்கு என்னடா செஞ்சிருக்கே!

இட்லிதாங்க.சட்னி கூடச் செய்யலை.பொடி வச்சுச் சாப்பிடுங்க.

மதியம் பாக்ஸில் என்னடா?

தயிர்ச்சோறுதாங்க.காலையிலேருந்து உடம்பே சரியில்லீங்க.

ஏன் அப்பவே சொல்லை?என்னடா செய்யுது.வா!டாக்டர் கிட்டப் போகலாம்.

அதெல்லாம் வேண்டாங்க.தலை சுத்தல் ,வாந்தி வர மாதிரி இருக்குது.

ஹையா!வா,வா,லேடி டாக்டரைப் பார்க்கப் போகலாம்

நீங்க வேற,இப்பத்தானே குளிச்சேன்.இது நேத்து வெளியே போகும்போது பேல்பூரி 
சாப்பிட்து ஒத்துக்கலீங்க!

நான் வேணா ஆபீஸுக்கு லீவு போட்டுடட்டுமா?’

ஐயோ அதெல்லாம் வேண்டாம்,கொஞ்ச நேரத்தில் சரியாப் போகும்

வேணா உதவிக்கு ஊரிலிருந்து உங்க அம்மாவை வரச் சொல்லட்டுமா?”

ண்ணுமில்லாதைப் பெரிசாக்காதீங்க!கொஞ்ச நேரத்தில சரியாப்போகும்

சரிடா செல்லம்!நான் ஆபீஸ் போயிட்டு வறேன்,ரெஸ்ட் எடுத்துக்கோ!”

என்னங்க!நீங்க நாளை மறுநாள்  லீவு போட்டுடுங்க.”

அன்னைக்கு என்ன விசேஷம்?”

அன்னைக்கு முழுவதும் ரெண்டு பேரும் பிரியாம சேர்ந்தே இருக்கணுங்க!”அவள் குரலில் ஒரு கெஞ்சல்;கண்களில் ஒர் வேண்டுதல்;வார்த்தைகளில் ஒரு பயம்.

என்னம்மா!என்ன விஷயம்?”

அன்னைக்கு உலகம் அழியப்போகுதாமே;அதான் உங்ககூடயே சேர்ந்து இருக்கணும்னு ஆசை

அவள் தொடர்ந்தாள்“கல்யாணமாகி இரண்டு வருடமாகியும் குழந்தை இல்லயேன்னு வருத்தப் பட்டுக்கிட்டிருந்தேன்.ஆனா இப்பத் தோணுது,குழந்தை பிறக்காததும் நல்லதுதான். பிறந்து சில நாட்களிலேயே உலகத்தோடு சேர்ந்து அதுவும் அழிய வேண்டுமா?”

படித்தவள்,உலகம் தெரிந்தவள்;அவளும் இதை நம்புகிறாள்!

கல்லூரிநாட்களில் உலகமே வீடாக நினைத்தவள்.

இப்போது இந்த வீடே இவள் உலகமாகிப் போகவே ,வேண்டாத கவலைகளைச் சுமக்கிறாள்.

அவளை நான் காயப்படுத்தக் கூடாது.

ஏனெனில் அவள் என் மீது கொண்ட அன்பு பெரியது;அளவிட முடியாதது.அதில் கொஞ்சமா வது நான் திருப்பித் தர வேண்டாமா?

“சரிடா!லீவு போட்டு விடுகிறேன்;ஆனால் உலகமெல்லாம் ஒன்றும் அழியப் போவதில்லை. இன்னும் நிறைய வருடம் குழந்தைகள் பல பெற்றுக்கொண்டு நாம மகிழ்ச்சியா வாழத்தான் போறோம்.எந்தக் கவலையும் இல்லாம நாளை மறுநாள் கொண்டாடிடுவோம்,ஓகே?”

அவள் என் நெஞ்சில் சாய்கிறாள்.

இன்றே லீவு போட்டு விடலாமா?!

17 comments:

  1. இது என்ன கூத்து?

    ReplyDelete
  2. o.k லீவு போட்டுக் கொண்டாடுங்க!....உலகம் அழியாது. அழிவு வரும்.
    வேதா.இலங்காதிலகம்.

    ReplyDelete
  3. வித்தியாசமா சொல்லியிருக்கிறிங்க...
    நல்லது

    ReplyDelete
  4. நிகழ்வை உங்கள் பாணியில்
    சொல்லிப் போன விதமும்
    முடித்த விதமும் மிக மிக அருமை
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  5. உலகம் அழியப்போவதில்லை என்பதை நயமாக சொல்லியிருக்கிறீர்கள். இரசித்தேன்.

    ReplyDelete
  6. Once in a while such fears overtake humanity. I remember ( probably the year was 1962) it was widely believed that the world would come to an end due to unique planetary configuration and prayers were held to thwart the eventuality. Such doomsday predictions are made regularly. How ever the way a story has been built around this phobia is nice. Vasudevan

    ReplyDelete
  7. அருமையான படைப்பு! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  8. கதை நல்லாயிருக்கு...!!

    ReplyDelete
  9. நன்றி ஜயதேவ் தாஸ்

    ReplyDelete