Thursday, December 20, 2012

பெரியோர் சொன்ன சின்னக் கதைகள்!-2

ஒரு விவசாயி தன் நிலத்தில் விதை விதைத்து முடித்தான்,

இறைவனுக்குப் படையல் வைத்து வேண்டிக்கொண்டான்”இறைவா!இன்று விதை விதைத் திருக்கிறேன்.மழை பெய்து நன்கு விளைய அருள் செய்!”

ஒரு குயவன் நிறைய பானைகள் செய்து விட்டு கடவுளை வேண்டிக்கொண்டான் ”கடவுளே!இன்று நான் பானைகள் செய்து விட்டேன்;அவை நன்கு காய்ந்த பின் விற்று வரும் பணத்தில்தான் குடும்பம் நடக்க வேண்டும்.நல்ல வெயில் ’சுள்’ளென்று அடிக்க அருள் புரி.”

இது போல் ஒன்றுக்கொன்று எதிரான பல கோரிக்கைகள் ஆண்டவனிடம் வைக்கப்பட்டன.

அவன் என்ன செய்வான்?எதை நிறைவேற்றுவான்?

கோவிலை விட்டு எங்காவது போய் ஒளிந்து கொள்ளலாமா என யோசித்தான்.

பிருகஸ்பதியைக் கூப்பிட்டு ஆலோசனை கேட்டான்.

“எங்காவது காட்டுக்குள் சென்று விடுங்கள்”

“காடா?காடுகளே இல்லாமல் அழித்துக் கொண்டிருக்கிறான் மனிதன்.அங்கே போனால் மாட்டிக் கொள்வேன்.”

“சந்திரமண்டலத்துக்குச் சென்று விடுங்கள்.”

”ஏற்கனவே அங்கு அவன் கால் பதித்து விட்டான்;அங்கு குடியேறும் நாள் வெகு தூரத்தில் இல்லை”

இவ்வாறு ஒவ்வொன்றாக நிராகரிக்கப்பட்டது.

கடைசியில் இறைவன் சொன்னான்”அவன் என்னைத் தேடாத ஒரு இடம் உள்ளது;குப்பை கூளம் நிறைந்த இடம்,அதுதான் அவன் உள்ளம்.அங்கு சென்று அமர்ந்து விடுகிறேன்.அவன் வெளியில் எல்லா இடத்திலும் தேடுவான்;உள்ளத்தினுள் இருக்கும் என்னைக் காண மாட்டான்”   !!!!

14 comments:

  1. சரியான இடத்தைத் தான் தேர்ந்தெடுத்திருக்கிறார் இறைவன். நல்ல கருத்துடன் கூடிய பதிவு வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  2. சின்ன பதிவா போட்டாலும் உம்மால தான்யா நச்சுனு பதிவு போட முடியும் மிஸ்டர் குட்டன்

    ReplyDelete
  3. நல்ல கருத்துடனான பகிர்வு தொடருங்கள்.

    ReplyDelete


  4. //அவன் என்னைத் தேடாத ஒரு இடம் உள்ளது;குப்பை கூளம் நிறைந்த இடம்,அதுதான் அவன் உள்ளம்.அங்கு சென்று அமர்ந்து விடுகிறேன்.அவன் வெளியில் எல்லா இடத்திலும் தேடுவான்;உள்ளத்தினுள் இருக்கும் என்னைக் காண மாட்டான்” !!!!//

    கதை அருமை! உளங்கனிந்த பாராட்டுக்கள்!

    ReplyDelete
  5. நல்ல கருத்துதான்! இறைவனை இப்படித்தான் தேடிக் கொண்டிருக்கிறோம்!

    ReplyDelete
  6. அருமையான கதையைக் கொடுத்தீர்கள் குட்டன் ஐயா.

    ReplyDelete