முத்தம்
கொடுத்தால் தீப்பிடிக்குமா?
தீப்பிடிக்க
முத்தம் கொடுடா என்றால்?
காமம்
என்பது தீ போன்றது.
ஒரு
சின்னப் பொறி இருந்தாலும் காமத்தீ பெரிதாக வளர்ந்து எரிக்கத் தொடங்கி விடும்
முத்தம்
என்பது ஒரு தீப்பொறி.
அது
காமத்தீயைப் பெரிதாக கொழுந்து விட்டு எரியச் செய்து விடும்.
தீயின்
இயல்பே அதுதானே!
பாரதி
சொல்வான் -
“அக்கினிக்
குஞ்சொன்று கண்டேன்-அதை
அங்கொரு காட்டிலோர் பொந்திடை வைத்தேன்
வெந்து தணிந்தது காடு-தழல்
வீரத்திற் குஞ்சென்று மூப்பென்று முண்டோ?”
சிறு
பொறி காட்டையே அழித்து விடும்
சிறு
காமப் பொறி ஒரு முனிவனின் தவத்தையே
கலைத்து விடும்!
தீ
என்பது ஐந்து பூதங்களில் ஒன்று. தீயாலும் எரிக்க முடியாத ஒன்று என பகவான் எதைச்
சொல்கிறான் தெரியுமா?
“நைனம்
தஹதி பாவக:”—இந்த ஆத்மாவை நெருப்பு எரிப்பதில்லை.
நெருப்பு
என்று ஒன்று கண்டு பிடிக்கப் படாமல் இருந்திருந்தால் எப்படியிருக்கும்?
ஆணுக்கும்
பெண்னுக்கும் காம உணர்வே எற்படாமல் போயிருந்தால் எப்படியிருக்கும்?
உலகம்
இல்லை!
இப்போது
பல நாடுகளிலும் பரபரப்பாகப் பேசப்படுவது,இம்மாதம் 21 ஆம் தேதி உலகம் அழியுமா என்பதுதான்!
எனக்கு
ஒன்று புரியவில்லை.
இதில்
கவலைப்படுவதற்கோ அச்சப்படுவதற்கோ என்ன இருக்கிறது?
அழியப்போவது
உலகம் என்றால் ,எதுவுமே பிழைக்காது என்ற நிலையில் நம்மைப் பற்றி ஏன் கவலைப்பட
வேண்டும் தனி மனிதன்?
இன்று
தேதி 15.
இன்னும்
ஆறுநாள்தான்!
அனுபவிக்க
வேண்டியது ஏதாவது இருந்தால் அனுபவித்து விடுங்கள்—தீப்பிடிக்க!
உலகம் புதிதாக அழிய ஒன்றும் இல்லை... நாம் ஏற்கனவே அழிந்து கொண்டுருக்கும் உலகத்தில் தான் வாழ்கிறோம்..குட்டன்
ReplyDeleteசரியே ஆய்ஷா ஃபரூக்!
Deleteநன்றி
Ayesha Farook மிகச் சரியாகச் சொல்லி இருக்கிறார்.
ReplyDeleteஓகே!
Deleteநன்றி
இதிலென்ன ஆராய்ச்சி தீபிடிக்க உரசல்தான் அவசியம்
ReplyDeleteநன்றி கண்ணதாசன்
Deleteஉலகம் அழியப்போகுதா.... :) சரி அதையும் பார்த்துடுவோம்! :)
ReplyDeleteநன்றி வெங்கட்
Deleteநல்ல ஆராய்ச்சி!
ReplyDeleteஉலகம் அழியறதை ஆசை தீரப் பார்த்துட்டுக் கடைசியா நான் சாகணும்.
ReplyDeleteநன்றி பரமசிவம்
Deleteஉலகம் முழுக்க இதே பேச்சு! 22ம் தேதி அழியவில்லை என்று பேசுவோம்! நன்றி!
ReplyDeleteநன்றி சுரேஷ்
Deleteஅவன் உலகம் அழிடுது படமெடுத்து காசு பண்ணிகிட்டான். அழியுதுன்னு அவன் நம்பியது நிஜம்னா உலகம் அழியாட்டி அந்த பணம் எங்களது இல்லைன்னு bet கட்டச் சொல்லுங்க பார்ப்போம்.
ReplyDelete