இப்போதெல்லாம் மாடிப்படிகள் செங்குத்தாகி விட்டன
கடையில் வாங்கும் பொருள்கள் கனமாகி விட்டன
நேற்று நடக்கையில்தான் கவனித்தேன்,
எங்கள் தெரு நீண்டு
விட்டது.
இளைஞர்களுக்கு மரியாதை என்பதே இல்லாமல் போய் விட்டது.
நம்முடன் பேசும்போது வாய்க்குள் முணுமுணுக்கிறார்கள்,
எத்தனை சொன்னாலும் அவ்வாறே செய்கிறார்கள்
நான் வாய் அசைவைக்கொண்டு அறியவா முடியும்?!
அவர்கள் வயதில் நான் இருந்ததை விட
அவர்கள் இளமையாயிருக்கிறார்கள்.
ஆனால் என் வயதையொத்த பிறர் எல்லாம்
என்னை விட முதுமையடைந்திருக்கிறார்கள்.
நேற்று பழைய நண்பன ஒருவனைப் பார்த்தேன்
தொண்டுக்கிழமாகி விட்டான், என்னைத்
தெரிந்து கொள்ள முடியவில்லை அவனால்!
அவனைப் பற்றி நினைத்துக்கொண்டே
கண்ணாடி முன் நின்று தலை சீவிக்கொண்டேன்
கண்ணாடியில் தெரிவது யார்?
ஹூம்!
இக்காலத்தில் கண்ணாடிகளும் தரம் குறைந்து விட்டன!
ம் ...
ReplyDeletekalatin colam
ReplyDeletearoumai koutten ayya.
நன்றி அருணா செல்வம்
Deleteநல்லா இருக்கு.
ReplyDeleteஎல்லா முதிவர்களும் தாங்கள் தங்கள் வயதொத்தவர்களை காட்டிலும் இளமையாக இருப்பதாகத்தான் நினைப்பார்கள் என்ற நாட்டு நடப்பை நன்றாக பதிவு செய்து இருக்கிறீர்கள்.வாழ்த்துக்கள்!
ReplyDeleteஅவர் போட்டிருக்கிற கண்ணாடியை மாற்றச் சொல்லுங்க பாஸ்
ReplyDeleteஹா,ஹா!
Deleteநன்றி ஆத்மா
வயது போய்விட்டால் இப்படியான எண்ணங்கள் இயல்பாய் வருமோ.பயமாத்தான் இருக்கு !
ReplyDeleteகாலத்தை வெல்ல முடியுமா?
Deleteநன்றி ஹேமா
ஹா! ஹா! அருமை!
ReplyDeleteநன்றி சுரேஷ்
Deleteகண்ணாடியும் போய் சொல்ல ஆரம்பித்துவிட்டதோ?
ReplyDeleteஅப்படித்தான் தோன்றுகிறது
Deleteநன்றி
புலம்பலும் அருமை!
ReplyDelete:)))
ReplyDeleteநன்றி வரலாற்று சுவடுகள்
முதியவர் புலம்பலில் உண்மை அப்படியே இருக்கே!
ReplyDeleteஎல்லா முதியவர்களும் நினைக்கும் நினைப்பு தான்.