Thursday, September 20, 2012

தாய்க்குலத்துக்கு ஒரு விசேட பதிவு!



கூந்தல் அழகுக்கு:

கூந்தலின் வேர்கள் வலுவாக இருந்தால் கூந்தல் உதிராது. கூந்தலுக்கு அவ்வப்போது மசாஜ் செய்வதன் மூலம் வேர்களை வலுவடையச் செய்யலாம் என்கின்றனர் அழகியல் நிபுணர்கள். அவர்கள் கூறும் ஆலோசனைகளை பின்பற்றுங்களேன்.

எண்ணெய் மசாஜ்: ஒவ்வொரு கூந்தலுக்கும் ஒரு ஆயுள் உண்டு. குறிப்பிட்ட ஆயுட்காலம் முடிந்தாலும் அந்தக் கூந்தல் உதிரும். கூந்தல் உதிர்வதைத் தடுக்க அழுக்கு சேராமல் சுத்தமாக வைத்தக் கொள்ள வேண்டும். இரும்புச் சத்து நிறைந்த உணவுகளை அதிகம் சாப்பிட வேண்டும். தினசரி காலை எழுந்தவுடன் 15 நிமிடங்களுக்கு விரல் நுனிகளால் தலையில் நன்றாக மசாஜ் செய்யவும். வேர்க்கால்களுக்கு ரத்த ஓட்டத்தை அதிகப்படுத்தும் வேர்க்கால்களின் பலவீனத்தை இது போக்கும். கூந்தல் உதிர்வது கட்டுப்படுத்தப்படும். எண்ணெய் மசாஜ் கூந்தலின் பளபளப்பை அதிகரிக்க உதவும்.

நீராவி ஒத்தடம்: தேங்காய் எண்ணெயை லேசாக சூடாக்கி கூந்தலின் வேர்களில் ஆரம்பித்து நுனிவரை தடவவும். விரல் நுனியால் வேர்களை நன்றாக தேய்த்து விடவும். பிறகு வெந்நீரில் ஒரு துணியை நனைத்து, அதை நன்றாக பிழிந்து விடவும். சூடான துணியை தலையில் கட்டவும். 15 நிமிடம் கழித்து கூந்தலை சீயக்காய் அல்லது ஷாம்பூவால் கழுவவும். வேர்களுக்குள் எண்ணெய் ஊடுறுவ இது உதவும். மாதம் ஒருமுறை இவ்வாறு செய்யலாம். 

விளக்கெண்ணெய், தேங்காய் எண்ணெய், ஆலிவ் எண்ணெய் மூன்றும் சம அளவு எடுத்து லேசாக சூடாக்கித் தலையில் தடவி மசாஜ் செய்து, வெந்நீரில் முக்கிப் பிழிந்த டவலால் தலைக்கு நீராவி ஒத்தடம் தர வேண்டும். பிறகு தரமான சீயக்காயோ, ஷாம்புவோ போட்டு கூந்தலை அலச வேண்டும். வாரம் ஒருமுறை இப்படிச் செய்தாலே கூந்தல் உதிர்வு நின்று ஆரோக்கியமாக வளரும்.

கறிவேப்பிலை தைலம்: நூறு மி.லி. தேங்காய் எண்ணெயில் கைப்பிடியளவு கறி வேப்பிலையைப் போட்டுக் கொதிக்க வைத்து, ஆறவிட்டு வடிகட்டி வைத்துக்கொண்டு, அந்த எண்ணெயைத் தினம் தலைக்குத் தடவவேண்டும். கூந்தலை நன்றாக விரித்துப்போட்டு வேர்களில் படுமாறு அந்த எண்ணெயை தடவினால் அது கூந்தலை பலப்படுத்தும். கோபுரம் தாங்கி இலை சாறு எடுத்து நல்லெண்ணெயில் காய்ச்சி அதை கூந்தலில் பூசி ஊறவைத்து தலை முழுகினால் முடி உதிர்வது நின்று விடும்.

தேங்காய்ப்பால் மசாஜ்: ஐந்து டேபிள் ஸ்பூன் திக்கான தேங்காய் பாலில் ஒரு டேபிள் ஸ்பூன் எலுமிச்சம் பழச்சாறு கலந்து, கூந்தலின் வேர்களில் படும்படி நன்றாக மசாஜ் செய்து, சிறிது நேரம் அப்படியே விட்டு அலசலாம்.

 இளநீர் அதிகம் கிடைக்கிற பட்சத்தில் அதனால் கூந்தலை அலசுவது கூந்தலுக்கு ரொம்பவும் ஆரோக்கியமானது. 

பத்து கிராம் ஜெலட்டினை ஒரு டம்ளர் தக்காளி ஜூஸில் கரைத்துக் குடிப்பது கூந்தலை மட்டுமின்றி, நகங்களையும் ஆரோக்கியமாக வைக்கும்.
 
புளித்த தயிரில் மருதாணி இலை, செம்பருத்திப் பூ ஆகியவற்றைப் போட்டு மூன்றையும் சேர்த்து நன்றாக அரைத்து கலக்கி தலையில் பூசி 2 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். அதன் பிறகு சீயக்காய் தூள் போட்டு குளிர்ந்த நீரில் குளித்து வந்தால் முடி கொட்டாது. பொடுகும் வராது. வெந்தயத்தை ஊற வைத்து அரைத்து தயிருடன் கலந்து, தலைக்குத் தடவி, சிறிது நேரம் ஊறியவுடன் குளிக்கலாம். சைனஸ் பிரச்சினை இருப்பவர்கள் இதைத் தவிர்க்கவும்.

வைட்டமின் பி உணவுகள்: வைட்டமின் பி 5 அதிகம் உள்ள உணவுகளை உட்கொள்வதன் மூலம் கூந்தலை பலமாக்கலாம். அதேபோல் வைட்டமின் இ அதிகம் உள்ள பட்டர்ப்ரூட், முந்திரி, பாதம் கொட்டைகள், ஆலிவ் ஆயில் போன்றவைகளை உணவில் சேர்த்துக்கொள்வதன் மூலம் முடி உதிராது பொடுகுத்தொல்லை ஏற்படாது. கற்றாழை கூந்தலின் வேர்க்கால்களை வலுவாக்கும். உதிர்ந்த கூந்தலுக்கு பதிலாக புதிய கூந்தலை வளரச்செய்யும்

( இதுவரை இணையத்தில் எடுத்த முத்து!நன்றியுடன்.)

இதெல்லாம்  செய்தால் உங்கள் முடி இப்படியிருக்குமோ!

  
கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி
காமம் செப்பாது கண்டது மொழிமோ
பயிலியது கெழீஇய நட்பின் மயிலியற்
செறி எயிற்று அரிவை கூந்தலின்
நறியவும் உளவோ நீ அறியும் பூவே.

 

14 comments:

  1. /////
    பத்து கிராம் ஜெலட்டினை ஒரு டம்ளர் தக்காளி ஜூஸில் கரைத்துக் குடிப்பது கூந்தலை மட்டுமின்றி, நகங்களையும் ஆரோக்கியமாக வைக்கும்.
    ////////

    இது ஜெலட்டின்... அப்படின்னா என்னங்க...
    நான் அதை வெடிக்கி இடத்திலதான் கேள்விபட்டிருக்கேன்

    ReplyDelete
    Replies
    1. ஆசிரியராச்சே!கேள்வி கேக்குறீங்க!என்னைத்தேட வச்சுட்டீங்க!
      தேடலில் கிடைத்த பதில்-//Gelatin (or gelatine, from Latin: gelatus = stiff, frozen) is a translucent, colorless, brittle (when dry), flavorless solid substance, derived from collagen obtained from various animal by-products. It is commonly used as a gelling agent in food, pharmaceuticals, photography, and cosmetic manufacturing. Substances containing gelatin or functioning in a similar way are called gelatinous. Gelatin is an irreversibly hydrolysed form of collagen, and is classified as a foodstuff. It is found in some gummy candies as well as other products such as marshmallows, gelatin dessert, and some ice cream and yogurt. Household gelatin comes in the form of sheets, granules, or powder. Instant types can be added to the food as they are; others need to be soaked in water beforehand.

      Gelatine is classed as a food in its own right and not subject to the food additives legislation in Europe. Gelatin has its own E number: 441.[1]//

      இதுக்கு மேல என்னைக் கேக்காதீங்க ஐயா!
      நன்றி

      Delete
  2. நல்ல பகிர்வு.

    படத்தில் உள்ளதுபோல இருந்தால் நன்றாகத்தான் இருக்கும். :)))

    முடிவளர்த்திக்கு பரம்பரையும், வயதும் காரணமாகின்றன என்றும் சொல்கிறார்கள்.

    ReplyDelete
  3. முடி உள்ளவங்களுக்கு கொட்டுப்படத்தானே செய்யும் .........
    அடுத்த பதிவு கொட்டுப்பட்ட முடியை என்ன செய்வது என்பதாக இருக்கணும்
    அப்படி இருந்தா நான் குச்சி முட்டாசி கொண்டுவந்து தருவேன்.

    ReplyDelete
  4. தலை முடிக்கு இவ்வளவு மருத்துவம் இருக்க மிகவும் நன்றாக இருந்தது

    ReplyDelete
  5. மிகவும் அருமை வச்சிடதிக ஆப்பு என்கபக்கமும் வாங்க நன்றாக இருந்தது நன்றி சகோ

    ReplyDelete
  6. சிறப்பான தகவல் பகிர்வு! பட் எனக்கு உபயோகப்படாது! பாதி முடி காலிங்க! நன்றி!

    ReplyDelete
  7. ஐயோ தாய் குலத்துக்கு விருந்து வச்சிருக்கிறீங்க நான் இந்தப் பக்கம் வரவேயில்லியே...
    நம்மளும் சுரேஷ் சார் பக்கம் தான்

    ReplyDelete
  8. வணக்கம்

    பத்துக்கும் ஐந்துக்கும் உழைக்கும் மக்கள்
    பஞ்சடைந்த தலைவாற எண்ணெய் ஏது?
    சொத்துக்கும் சுகத்துக்கும் குறைவே இன்றிச்
    சுரிதாரில் வருவோர்கள் ஏனோ இன்று
    இத்திக்கு முடியளவை ஆக்கிக் கொண்டே
    இங்கிலீச் பெண்ணாக மாறிப் போனார்!
    முத்துக்கு நிகரான பதிவைத் தந்த
    குட்டனைநான் கும்மிட்டேன்! வாழ்க நன்றே!

    கவிஞா் கி.பாரதிதாசன்
    தலைவா். பிரான்சு கம்பன் கழகம்
    http://bharathidasanfrance.blogspot.fr/
    kavignar.k.bharathidasan@gmail.com
    kambane2007@yahoo.fr

    ReplyDelete
  9. அருமையான தகவல்கள் நண்பரே.

    ReplyDelete
  10. ம்ம் நன்றி பதிவுக்கு.......

    ReplyDelete
  11. கடுப்பேத்துறார் குட்டன் !

    ReplyDelete