ஹேவலாக் எல்லிஸ்,செக்ஸின் மனோதத்துவம்
என்ற நூலை எழுதியவர்.இன்றும் பேசப்படும் ஒரு புத்தகம்.பாலுணர்வை அறிவியல் ரீதியாக
அணுகிய புத்தகம்.
ஹேவலாக் எல்லிஸ் சொன்ன சில பொதுக்கருத்துகள்(இவற்றுக்கும் நூலுக்கும்
சம்பந்தம் இல்லை)
1)குறையில்லாத அழகு என்பதே ஒரு
குறைதான்!
2)கவர்ச்சி என்பதே பெண்ணின்
வலிமை;அது போலவே வலிமை என்பதே ஆணின் கவர்ச்சி.
3)ஆண்--பெண்ணின் ஆசை அணைப்பு என்பது,இசை
போன்றது;பிரார்த்தனை போன்றது
4)வாழ்க்கையின் ஆணி வேரே
பாலுணர்வுதான்.அவ்வுணர்வைப் புரிந்து கொள்ளாதவர், வாழ்க்கையை மதிக்கத் தெரியாதவர்.
நாணம் என்பது என்ன?நாணத்தினால்
முகம் சிவந்தாள் என்றெல்லாம் கதாசிரியர்கள் எழுதுகிறார்களே அது என்ன?அதன்
அறிகுறிகள் என்ன?
அறிகுறிகள்;-இடையருகில்
நடுக்கம்,கைகால்கள் வலிமையற்றுப் போதல்,அழுத்தம், நடுக்கம், உடலில் பரவும்
சூடு,இதயத்துடிப்பு அதிகரித்தல்,உடல் குளிர்ந்து மீண்டும் உஷ்ணமாதல், தொண்டையில்
ஏதோ அடைத்தல்,காதுகளில் ரீங்காரம், கைகால் விரல்களில் ஒரு துடிப்பு, தலைக்குள் ஒரு
அழுத்தம் ஆகியவை!
இது நூலில் வருவது.ஒரு முன்னோட்டம்
இந்நூலின் சில முக்கிய பகுதிகளை இந்த
அடல்ட்ஸ் கார்னரில் தரலாம் என ஒரு யோசனை
முடிந்தால் செய்வேன்.
No comments:
Post a Comment