அடிமையா யிருப்பதும் சுகம்தான்
சிலநேரம்!
அடியே அதைநான் உணர்கிறேன் உனாதிக்கத்தில்
தளையறுத்து நான் எழ எண்ணும்
போதெல்லாம்
தாமரைக்கண் பார்வையால் கட்டிப்
போடுகிறாய்!
சினங் கொண்டு நான் சீறத் துடிக்கையில்
சிங்காரச் சிரிப்பினால் சிந்தை கவர்கிறாய்
ஏன் அடங்கிக் கிடக்கிறோம் என்றெண்ணினாலோ
தேன் மொழி பேசி என்னை த் திணற வைக்கிறாய்.
சத்தம்போட்டுன்னை அடக்க நினைத்தாலோ
முத்தமொன்றினால் மூங்கையாய் ஆக்குகின்றாய்.
உணர்ந்து விட்டேன் நான் சுகம் இதுவேயென்று!
டிஸ்கி: இரண்டு நாட்கள் தங்கமணியைப் பிரிந்து இருந்தால் நான் கூடக் கவிஞனாகிறேன்!!:)
நல்ல வரிகள்...
ReplyDeleteநன்றி தனபாலன் அவர்களே.
Deleteம்ம்ம்ம்ம்
ReplyDeleteநல்ல கவிதை\
குட்டரே
நன்றி சிட்டுக்குருவி ஐயா
Deleteதேன் மொழி பேசி என்னை த் திணற வைக்கிறாய்.
ReplyDeletesweet lines
நாங்களும் யூத்து தாங்கோ எங்களையும் சேத்துக்கங்கோ
ReplyDeleteபெயரில் ரஜினி இருக்கையில் நீங்கள் எவர் யூத்தான்!
Deleteம் கலக்கறீங்க தல....
ReplyDeleteஆனால் இதுக்கு என்னோட கமாண்டு...
ரைட்டு...
நன்றிகவிஞர் ஆசிரியரே!
Deletepirivuthaan anaiththaiyum unara vaikkum
ReplyDeleteஆம் அம்மா!அன்பின் ஆழம் அப்போதுதான் புரிகிறது!
Deleteநன்றி
''..தாமரைக்கண் பார்வையால் கட்டிப் போடுகிறாய்!...''
ReplyDeletemmm...good.நன்றாயிருக்கிறது.
நல்வாழ்த்து.
வேதா. இலங்காதிலகம்.
கோவைக் கவி என் கவிதையைப் பாராட்டியது ம்கிழ்ச்சி அளிக்கிறது.
Deleteநன்றி
நாம் எப்பவுமே யூத்தான்...
ReplyDeleteஅழகாய் உன்னது உப தலைப்பு....
யூத் தள வருகைக்கு வந்த யூத்தான உங்களுக்கு நன்றி எஸ்தர் சபி
Deleteஉலகில் பாதிப்பேருக்கு மேல்
ReplyDeleteஇப்படி அடிமையாய்த்தான் இருக்கிறோம்
அந்த சுகம் அனுபவித்தவர்களுக்குத்தான் தெரியும்
அனுபவித்து எழுதிய கவிதை மனம் கவர்ந்தது
அனுபவித்துப் படித்தேன்
தொடர வாழ்த்துக்கள்
உலகில் பாதிப்பேருக்கு மேல்
ReplyDeleteஇப்படி அடிமையாய்த்தான் இருக்கிறோம்
அந்த சுகம் அனுபவித்தவர்களுக்குத்தான் தெரியும்
அனுபவித்து எழுதிய கவிதை மனம் கவர்ந்தது
அனுபவித்துப் படித்தேன்
தொடர வாழ்த்துக்கள்
tha.ma 8
ReplyDeleteஉலகில் பாதிப்பேருக்கு மேல்
ReplyDeleteஇப்படி அடிமையாய்த்தான் இருக்கிறோம்
அந்த சுகம் அனுபவித்தவர்களுக்குத்தான் தெரியும்
அனுபவித்து எழுதிய கவிதை மனம் கவர்ந்தது
அனுபவித்துப் படித்தேன்
தொடர வாழ்த்துக்கள்
உங்கள் பாராட்டு எனக்கு ஒரு புதிய உற்சாகத்தைக் கொடுத்திருக்கிறது சார்.
Deleteநன்றி.
ReplyDeleteகவிதை அருமை! சந்தமும் பொருளும் தங்கள் கவிதன்மைக்கு எடுத்துக்காட்டு!
என்னைப் பறக்க வைத்திருக்கிறீர்கள்!
Deleteநன்றி ஐயா.
கவிதை கவிதை....
ReplyDeleteதொடரட்டும் கவிதைகள் - அதுக்குன்னு தங்கமணிய ஊருக்கு அனுப்பிடாதீங்க!
//அதுக்குன்னு தங்கமணிய ஊருக்கு அனுப்பிடாதீங்க!//
Deleteசான்ஸே இல்லை.,ரெண்டு நாளிலேயே கஷ்டமாயிருச்சு!
கவித முய்ற்சி தொடர்கிறது!
நன்றி வெங்கட் நாகராஜ்
காதல் பிரிவு அழகான கவிதைகளை நிச்சயம் தரும் !
ReplyDeleteசந்தேகமின்றி!
Deleteநன்றி ஹேமா அவர்களே