Tuesday, September 4, 2012

மைலாப்பூர் மயில்கள்!

மயூர சப்தப் பட்டினம் !

சாண்டில்யனின் சரித்திர நாவலில் வரும் ஒரு ஊரின் பெயர் போல் இருக்கிறதா?

மயூரம் என்றால் மயில்.

சப்தம் என்றால் ஒலி,ஓசை.

மயிலின் ஓசை கேட்டுக் கொண்டே இருக்கும் ஊர்.

மயில் ஆர்ப்பரிக்கும் பட்டினம்.

அதுவே மயிலாப்பூர் ஆகி விட்டது.

சென்னையின் மிக முக்கியமான ஒரு பகுதி.

பழமையும் புதுமையும்  சேர்ந்தே உறையும் இடம்.

மிக முக்கியமான இடம் திருமயிலைக் கபாலீச்வரம் எனப்படும் கபாலீஸ்வரர்-கற்பகாம்பாள் கோவில்

கோவிலைச் சுற்றி அழகான மாட வீதிகள்.

பொன்மாலைப் பொழுதுகளில் மாடவீதியைச்சுற்றி வந்தாலே போதும்;பொழுது போய் விடும்.

போதாதென்றால்,கோவிலுக்குள் ஒரு பிரதட்சிணம்.

சாமி தரிசனம் ,அம்பாள் தரிசனம் ஆச்சு,மயில்களும் பார்த்தாச்சு,பொழுதும் போச்சு,புண்ணியமும் வந்தது.(பாவமும்!)

ஆனால் மயில் ஆர்ப்பரிக்கும் பட்டினத்தில் இப்போது மயில்கள் இருக்கிறதா?

என்ன கேள்வி ஐயா இது.மாடவீதி சுற்றுவதும்,கோவிலுக்குப்போவதும் பக்தி மட்டுமா;மயில் பார்க்கவும்தான்!

மயில் என்றாலே அழகுதானே.

மயிலாப்பூர் திருவிழா என்று ஒன்று ஒவ்வோரு ஆண்டும் நடக்கும்.

வடக்கு மாட வீதி முழுவதும் கோலங்கள்.

காணக்கண் கோடி வேண்டும்!

இப்போதெல்லாம் என்றாவது கபாலீச்வரரைப் பார்க்கப்போனால்,ஒழுங்காகப் போய் வணங்கி விட்டு,கற்பகாம்பாள் மெஸ்சில்  ஒரு பிடி பிடித்து விட்டு,நேராக வீடுதான்.

மயில் பார்ப்பதெல்லாம் கிடையாது.

கூடவே தங்கமணி ஆயிற்றே!

(வேறு மயிலைப் பார்க்கவும் தோன்றுமா என்ன?!)


11 comments:

  1. நல்ல தகவல்கள்...

    முடிவில்... இப்படியொரு ஆசை இருக்கோ...?

    ReplyDelete
  2. என்ன கேள்வி ஐயா இது.மாடவீதி சுற்றுவதும்,கோவிலுக்குப்போவதும் பக்தி மட்டுமா;மயில் பார்க்கவும்தான்!
    மயில் என்றாலே அழகுதானே.//

    நிச்சயம் மயில் என்றால் அழகுதான்
    சொல்லிச் சென்ற விதம் அருமை
    பதிவைத் (மயிலை அல்ல ) தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. நல்லா ஆரம்பித்து எப்படியோ முடிச்சாச்சு.வயசு!

    ReplyDelete
    Replies
    1. உங்களை மாதிரிப் பெரியவர் வருகை எனக்குப் பெருமை

      Delete
  4. மயில் அகவும் மயிலாப்பூர்... சுவாரசியமான தகவல்கள்.

    கடைசில இப்படி சொல்லிட்டீங்களே குட்டன்! :))

    ReplyDelete
  5. நன்றி வெங்கட் நாகராஜ்

    ReplyDelete
  6. ஓஹோ!இப்படி மயில் பார்த்துத்தான் பொழுது போக்குகிரீறோ?

    ReplyDelete