முதலில் தமிழ் மணம்.
கம்பன் வீட்டுக் கட்டுத் தறியும் கவிபாடும் என்று
சொல்வார்கள்.அதுபோல,புலவர்கள் மட்டுமல்ல,அவர்கள் மனைவிகளும் சொல்லின் செல்விகளாகத்தான்
இருந்தனர்.
ஒரு நிகழ்வு.
ஒரு நாள் புலவர் ஒருவர் நண்பருடன் பேசிக் கொண்டிருந்ததில்
நேரம் போனதே தெரிய வில்லை. நண்பர் சென்ற பின் அவர் வயிறு அவருக்கு உணர்த்தியது ,சாப்பாட்டு
வேளை கடந்து விட்டது என்று.’சாப்பிடலாமா?’என்று மனைவியைக் கேட்டார்
மனைவி சொன்னாள்”அரிசிவாங்கலையே?!”
புலவர் திகைத்தார் ,என்ன இப்போது போய் இவ்வாறு சொல்கிறாளே
என்று.
மனைவியைக்கேட்டார்”அரிசி வாங்கவில்லை என்று இப்போது
சொல்கிறாயே.பசிக்கிறதே?” என்று.
மனைவி சொன்னாள் ”அரி,சிவா ங்கலையே என்று சொன்னேன்”
புலவர் புரிந்து கொண்டு பலே என்றார்.
உங்களுக்குப் புரிகிறதா?
புலவர் வழக்கமாக,இறை வழிபாடு முடித்தபின்தான் சாப்பிடுவார்(இறைக்குப்
பின்தான் இரை!)அன்று நண்பருடன் பேசிக் கொண்டிருந்ததில் வழிபாடு செய்யவில்ல.அதையே மனைவி
உணர்த்தினாள்.
எப்படி தமிழ் மணம்?!
………………………………………
அடுத்து மோகன்.
இவரைப்பற்றி நான் சொல்வதெல்லாம் செவிவழிச் செய்திகளே.
மோகன்குமாரமங்கலம்;டா.சுப்பராயனின் புதல்வர்.முதலில்
கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்து பின் காங்கிரஸ் கட்சிக்கு மாறியவர்.மத்திய அமைச்சராக
இருந்தவர்.ஒரு விமான விபத்தில் காலமானார்.
இவர் கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்தபோது,தமிழ் நாட்டில்
பொதுக்கூட்டத்தில் ஆங்கிலத்தில் தான் பேசுவாராம்,தமிழராக இருந்தும்!
சிறந்த வழக்கறிஞர்.எம்.ஆர்.ராதா வழக்கில் ஆஜரானதாகக்
கேள்வி.
மோகன் என்று பெயர் இருந்தாலே சட்ட நிபுணராகத்தான்
இருப்பார்களோ?!
………………………………………..
அடுத்து கேபிள்.
நான்கு பெரு நகரங்களிலும் கேபிள் டி.வி எல்லாம்.31
அக்டோபர் முதல் டிஜிடலுக்கு மாற வேண்டும்.எனவே செட் டாப் பெட்டி அவசியமாகிறது .உங்கள்
கேபிள்காரரிடம் இப்போதே ஏற்பாடு செய்து விடுங்கள்.
..............................................
அடுத்து சிவா
இப்பொது நான் படித்துக் கொண்டிருக்கும் புத்தகம்”த
இம்மார்ட்டல்ஸ் ஆஃப் மெலூஹா” .ஆங்கிலம் எழுதியவர் அமீஷ்.
கைலாயத்தில் வசிக்கும் ஒரு
பழங்குடித்தலைவரான சிவன்,மலைதாண்டி காஷ்மீரப் பள்ளத்தாக்குக்கு கூட்டத்துடன் நந்தியால்
அழைத்து வரப்படுகிறார்.அங்கு மன்னன் தக்ஷன்.அவன் மகள் சதி.அந்த நாட்டுப் பரம்பரைக்கதையின்
படி அவர்களைக் காப்பாற்ற நீலக் கழுத்துள்ளவன் வருவான்.இவ்வாறாகப் போகிறது கதை.படித்து
முடித்த பின் விளக்கமாக எழுதுகிறேன்.
சிவனையோ ,ராமனையோ ஏன் ஏசுவையோ பற்றிக்கூட இப்படியெல்லாம்
புத்தகம் எழுதி விட முடியும்.
ஆனால்?!!
நல்லா வைக்கிரீங்கையா தலைப்பு (யாரும் சொல்லும் முன் நான் சொல்லிடுறேன் இதை )
ReplyDeleteஉள்ளே சொல்றதுதான் தலைப்பில்;தலைப்பில் உள்ளதுதான் உள்ளே!
Deleteநன்றி மோகன்குமார்
ஹா ஹா ஹா நிஜமாவே என்னமோ, ஏதோலாம் நினைச்சுட்டேன்! ஆவ்வ்வ்வ்வ்! பதிவு சூப்பர்!!
ReplyDeleteநன்றி மாத்தியோசி-மணி
Deleteகுசும்பு குட்டன் .........
ReplyDelete:) நன்றி அஞ்சா சிங்கம்
Deleteதலைப்பு வைக்க ரூம் போட்டு யோசிப்பீங்களோ!
ReplyDeleteநல்ல பகிர்வு குட்டன்!
நன்றி வெங்கட் நாகராஜ்
Deleteஎன்னாது காந்தி செத்துட்டாரா?
ReplyDeleteயாருங்க அது காந்தி?
Deleteநன்றி
என்னாது காந்தி செத்துட்டாரா?
ReplyDeleteதலைப்பு என்னமோ விவகாரம்னு நினைக்க வெச்சது. ஆனா சொல்லியிருக்கற மேட்டர்லாம் சூப்பரு. அசத்திட்டீங்கோ...!
ReplyDeleteநன்றி பால கணேஷ்
Deleteசுவாரஸ்யமான தகவல்கள்! நேற்றுதான் இந்த மாதிரி தலைப்பு வேணாமுன்னு மதுமதி சொன்னாரு! அதுக்குள்ளேவா?
ReplyDeleteஇன்று என் தளத்தில்
பிள்ளையார் திருத்தினார்!
http://thalirssb.blogspot.in/2012/09/blog-post_15.html
வருஷத்துக்கு ஆறு சிலிண்டர்தான்! மண்ணுமோகன் ஆப்பு!
http://thalirssb.blogspot.in/2012/09/blog-post_5435.html
:-))
ReplyDeleteநன்றி நண்டு@நொரண்டு
Deleteசெம பதிவு பாஸ் ! சிவா ட்ரையாலஜி புத்தகம் வாசிக்க வேண்டும் சகோ.. யாரைப் பற்றி வேண்டுமானாலும் எழுதலாம் சகோ. ஏன் கடவுளைக் கூட ... ஆனால் அவரைப் பற்றி வாய் திறந்தாலே உலகம் பற்றி எரியுமுங்கோ ?
ReplyDeleteஅதேதான்!
Deleteநன்றி இக்பால் செல்வன்
வித்தியாசமா கலக்கிட்டீங்க குட்டன்.
ReplyDeleteநன்றி முரளிதரன்
Deleteகுட்டன்..பலே!!
ReplyDeleteநன்றி சிவகுமார்
DeleteAdang kokka makkaa
ReplyDeleteநன்றி ஹாரி பாட்டர்
Deleteஎப்படியெல்லாமோ அல்வா சாப்பிட்டுருக்கேன், இந்த மாதிரி அல்வாவை இப்பத்தான் பார்க்கிறேன், நல்ல கற்பனை.
ReplyDelete:) நன்றி ஜெயதேவ்தாஸ்
Deleteதலைப்பால் மட்டும் நீங்கள்
ReplyDeleteஎங்களை ஈர்க்கவில்லை
சொல்லிய விஷயமும் சொல்லிச் சென்றவிதமும்
அதைவிட அதிகம் ஈர்த்தது
சுவாரஸ்யமான தகவல்களுடன் பதிவு அருமை
தொடர வாழ்த்துக்கள்
tha.ma 11
ReplyDeleteநன்றி
Delete