Friday, August 31, 2012

நிலவில் தெரிந்த சாயிபாபா!


நிலா என்றவுடன் ஒரு கவிஞன் அதை ஒரு பெண்ணின் முகத்துக்கு ஒப்பிடுவான்

“கூன் பிறை நெற்றியென்றால் குறை முகம் இருண்டு போகும்”

“நிலவைப் பிடித்துச் சில கறைகள் துடைத்துக் குறு முறுவல் பதித்த முகம்”
என்றெல்லாம் பாடுவார்கள்.

ஆனால் சில காலத்துக்கு முன் நடந்தது இது.

ஒரு முழு நிலா இரவு.

தொலைபேசி அழைத்தது.

எடுத்தேன்

நண்பர் ஒருவர் பேசினார்.குரலில் ஒரு  பர பரப்பு.”நிலாவைப் பாருங்கள்;சாய்பாபா தெரிகிறார்.”

வெளியே சென்றேன்.பார்த்தேன்.

ஆம் சத்திய சாய் பாபாவின் முகம் தெரிந்தது.

நிலவின் கருப்பான பகுதி அவர் முடி போலவும் மீதிப் பகுதி அவர் முகம் போலவும் தெரிந்தது.

என் பங்குக்கு நான் ஒரு நண்பருக்கு ஃபோன் செய்து சொன்னேன்.

சிறிது நேரம் கழித்து அவர் தொலைபேசினார்.

“ஆமாம்.பார்த்தேன்.கால் மேல் கால் போட்டு சாயி அமர்ந்திருக்கிறார்”

நான் வியந்தேன்.

நான் சொன்னது சத்திய சாயி.

அவர் பார்த்த்து ஷீர்டி சாயி.

புரிந்து கொண்டேன்

எதை நினைத்துக் கொண்டு பார்க்கிறீர்கள்,அது அங்கே தெரிவதை.

இத்தனை நாட்கள் வடை சுடும் கிழவி கூடத் தெரிந்தாளல்லவா?!

எல்லாம் மனம் செய்யும் மாயம் அன்றி வேறில்லை!

பதிவுலகில் ஹன்சிகாவுக்காக இருவர் சண்டை போட்டுக் கொள்வார்கள்.

அவர்கள் பார்த்தால் நிலவில் ஹன்சிகா கூடத் தெரியலாம்!

இன்று இதை எழுதக் காரணம்,இன்று நீல நிலா.

மூன்றாண்டுகளுக்கு ஒரு முறையே நிகழ்வது.

ஒரே மாதத்தில் இரு முழு நிலவுகள் வந்தால்,இரண்டாவது நீலநிலா எனப் படுகிறது.

19 ஆண்டுகளுக்கு ஒரு முறை,ஒரே ஆண்டில் இரண்டு மாதங்களில் இரு முழு நிலவுகள் வருமாம்!இரு நீலநிலா!

எனவே இன்றைய வாய்ப்பைத் தவிர விடாமல் உங்கள் மனங்கவர்ந்தவரின் முகத்தை நிலவில் கண்டு களியுங்கள்!

டிஸ்கி:எனக்கு மிகவும் பிடித்த நிலாப்பாட்டு”நிலவே என்னிடம் நெருங்காதே”பாடியவர் பி.பி.எஸ்.

Thursday, August 30, 2012

என் குறி-ஒரு ஆணியக் கவிதை

 பெண் கவிஞர்கள் பெண்ணியம் என்று சொல்லி “விரியும் என் யோனி ‘ என்றெல்லாம்  கவிதை எழுதுகையில் நான் ஆணியம் பேச என் குறி பற்றி எழுதுவது தவறா?

“காடு  கழனி
 கரை வாய்க்கால்
 வயல் வரப்பு,
 கிணறு,குளம்
 காடு நாடு
 சிறுவர் பெரியவர்
 ஆண்கள் பெண்கள்
 இன்பம் துன்பம்
 பிறப்பு இறப்பு

இவை எதுவும் இல்லை

என் குறி விரைக்கவில்லையெனில்!”


Tuesday, August 28, 2012

மகத்தான வெற்றி அடைந்த பதிவர் திருவிழா!

26 ஆம் தேதி விழா முடிந்து,அதைப்பற்றி எல்லோரும் பதிவுகள் போட்டு ஓயும் நேரத்தில் இதோ ஒரு பதிவு.

விழாவுக்கு முன்னால் எத்தனையோ சச்சரவுகள்.

பதிவுகளில் மோதல்கள்.

ஆனால் மோதிக் கொண்டவர்களே விழாவன்று கட்டிப்பிடி வைத்தியம் செய்து கொண்டார்கள்.

பல பெண் பதிவர்கள் வந்து விழாவைச் சிறப்பித்தார்கள்.

தமிழ்நாட்டின் பல பகுதிகளிலிருந்து மட்டுமல்ல,மற்ற நாடுகளிலிருந்தும் பதிவர்கள் வந்திருந்தார்கள்.

சிறப்பான ஏற்பாடுகள்.அருமையான உணவு.

இதெல்லாம் எனக்கு எப்படித்தெரியும்?

பலரது பதிவுகளை படித்துதான்.

நான்தான் விழாவுக்குப் போகலையே!

சும்மா நாலு இடுகை கிறுக்கிவிட்டு,நானும் ஒரு பதிவர் என்று அங்கு போய் நிற்பதா?

என்னவென்று அறிமுகம் செய்து கொள்வது இந்த முகத்தை?

அதனால் போகவில்லை.

விழாவின் வெற்றி கண்டு மகிழ்கிறேன்.

அனைவருக்கும் வாழ்த்துகள்.Monday, August 27, 2012

தமிழ்மண ஓட்டுப் போடுவது வெறும் சடங்கா?சிந்தியுங்கள்

 தலைப்பில் உள்ள கேள்வியை நான் எழுப்பக்காரணம்,இன்று வெளியான ஒரு வலைப்பூ இடுகை.

மூத்த பதிவர் ஒருவர் தாம் ஓய்வு பெறப்போவதாக அறிவித்துள்ளார்.அந்தப் பதிவிற்கு 14 பேர் வாக்களித்துள்ளனர்..

ஒரு பதிவுக்கு நாம் வாக்களிக்கிறோமென்றால்,அப்பதிவு நமக்குப் பிடித்திருக்கிறது,அதில் சொன்ன கருத்தோடு ஒத்துப் போகிறோம் என்றுதானே பொருள்.நமக்குப் பிடிக்கவில்லை என்றாலோ,கருத்தோடு மாறு படுகிறோமென்றாலோ,ஒன்று வாக்களிக்கக் கூடாது,அல்லது மைனஸ் வாக்களிக்க வேண்டும்.

குறிப்பிட்ட பதிவில் வாக்களித்திருப்பவர்கள் நிலைப்பாடு என்ன?

அப்பதிவர் ஓய்வு பெறுவதை விரும்புகிறீர்கள்,அவர் கருத்தோடு உடன் படுகிறீர்கள், அல்லவா?

ஆனால் பின்னூட்டக் கருத்துக்கள் அனைத்தும் அவ்வாறு இல்லையே?

அப்படியென்றால் வாக்களிப்பது என்பது,சிந்திப்பு அற்ற வெறும் சடங்கா?

சிந்தியுங்கள்!