Monday, August 27, 2012

தமிழ்மண ஓட்டுப் போடுவது வெறும் சடங்கா?சிந்தியுங்கள்

 தலைப்பில் உள்ள கேள்வியை நான் எழுப்பக்காரணம்,இன்று வெளியான ஒரு வலைப்பூ இடுகை.

மூத்த பதிவர் ஒருவர் தாம் ஓய்வு பெறப்போவதாக அறிவித்துள்ளார்.அந்தப் பதிவிற்கு 14 பேர் வாக்களித்துள்ளனர்..

ஒரு பதிவுக்கு நாம் வாக்களிக்கிறோமென்றால்,அப்பதிவு நமக்குப் பிடித்திருக்கிறது,அதில் சொன்ன கருத்தோடு ஒத்துப் போகிறோம் என்றுதானே பொருள்.நமக்குப் பிடிக்கவில்லை என்றாலோ,கருத்தோடு மாறு படுகிறோமென்றாலோ,ஒன்று வாக்களிக்கக் கூடாது,அல்லது மைனஸ் வாக்களிக்க வேண்டும்.

குறிப்பிட்ட பதிவில் வாக்களித்திருப்பவர்கள் நிலைப்பாடு என்ன?

அப்பதிவர் ஓய்வு பெறுவதை விரும்புகிறீர்கள்,அவர் கருத்தோடு உடன் படுகிறீர்கள், அல்லவா?

ஆனால் பின்னூட்டக் கருத்துக்கள் அனைத்தும் அவ்வாறு இல்லையே?

அப்படியென்றால் வாக்களிப்பது என்பது,சிந்திப்பு அற்ற வெறும் சடங்கா?

சிந்தியுங்கள்!

1 comment:

  1. வாக்குப் போடுவதின் மூலம் நாம் அப்பதிவை முன்நிறுத்தலாம். அதனால் அப்பதிவு பலரைச் சென்றடையும், கருத்து எப்படியிருப்பினும் பலரைச் சென்றடைதலுக்கு வாக்கு!!!
    இது என் புரிதல்... புரிதலில் தவறிருக்கலாம்.

    ReplyDelete