Saturday, September 1, 2012

ஒரு 18+ ஜோக்!

ஒரு கடைக்கு ஒரு இளைஞன் வந்தான்.ஒரு ஆணுறை வாங்கினான்.பின் பெரிதாகச் சிரித்துக் கொண்டே சென்று விட்டான்.

மறுநாளும் அவன் வந்தான்.முதல்நாள் போலவே ஒரு ஆணுறை வாங்கினான்.மீண்டும் பெரிதாகச் சிரித்துக்  கொண்டே சென்று விட்டான்.

கடைக்காரருக்கு,இது விநோதமாகத் தோன்றியது;ஏன் அப்படிச் செய்கிறான் என அறிய ஆர்வம் பிறந்தது.

மறு நாளும் அவன் வந்தான் .முன்தினம் போலவே எல்லாம் நடந்தது.

அவன் சென்றவுடன் கடைக்காரர், தன் உதவியாளனை அழைத்து அவன் எங்கு செல்கிறான் என்று பார்த்து வரச் சொல்லி அனுப்பினார்.

போன உதவியாளன் சிறிது நேரம் கழித்துத் திரும்பினான்.

கடைக்காரர் அவன் எங்கே போனான் என ஆர்வத்துடன் வினவினார்.

அவன் சொன்னான்”உங்க வீட்டுக்குத்தான்!”

!!!!!!!!!!!!!!!!!!!!!


10 comments:

  1. Replies
    1. ஆசிரியர் அல்லவா!அதான்!
      நன்றி சார்

      Delete
  2. அந்த விலாசம்னே...!!
    விலாசம்... விலாசம்...

    ReplyDelete
  3. அந்த விலாசம்னே...!!
    விலாசம்... விலாசம்...

    ReplyDelete
  4. பெண்கள், 18+ இதைப் போடும் பதிவுகள் டாப்புல போகுது!!

    ReplyDelete
  5. இதே போல் இன்னொரு கதை .. ஒரு நாவிதன் கடையில் தினமும் ஒருவன் வந்து கூட்டம் அதிகம் இருப்பதை பார்த்து " இன்னும் எவ்வளவு நேரம் ஆகும் " என்று கேட்பான் ..நாவிதன் ஒரு மணி நேரம் ஆகும் என்பான் ..சரி பிறகு வருகிறேன் என்று கூறி செல்வான் ...ஆனால் வரமாட்டான் .பல நாட்கள் இது போல் நடக்க வியப்படைந்த நாவிதன் தன்னிடம் வேலை பார்க்கும் ஒரு சிறுவனை அவனை பின் தொடர சொன்னான் . சிறுவனும் சிறிது நேரம் கழித்து வர ஆர்வம் மிக கொப்பளிக்க நாவிதன் அவன் எங்கு சென்றான் என்று வினவினான் ..பதில் கேட்டவுடன் மயங்கி விழுந்தான் ..சிறுவன் சொன்ன பதில் இது தான் ..." உங்க வீட்டுக்கு தான் !" ...எப்படி ... உமக்கு மட்டும் தான் கதை சொல்ல தெரியுமா .... வாசுதேவன்

    ReplyDelete