Friday, September 21, 2012

குழந்தை பிறக்க என்ன செய்ய வேண்டும்?சில எளிய வழிகள்!



”தலைப்பில் உள்ள கேள்வியே அபத்தமாக இருக்கிறதே?ஒரு சிறுவனைக் கேட்டால் கூட இதற்குப்   பதில் சொல்லி விடுவானே” என்றுதானே நினைக்கிறீர்கள்?

நீங்கள் நினைப்பது சரிதான்

ஆனால் இதைத்தவிர வேறு ல காரணங்கள் ,நம்பிக்கைகள் (மூட),மக்கள் மத்தியில் இருக்கின்றன.

நம்நாட்டில்தானே என்று கேட்டால், இல்லை என்பதுதான் பதில்.

சில நம்பிக்கைகளை முதலில் பார்ப்போம்

1)திராட்சைச் சாறு அருந்துவது,இருமல் மருந்து குடிப்பது(சூப்பர்!),ரோஸ்மேரிச் செடி நடுவது ஆகியவை கர்ப்பம் தரிக்க உதவும்!

2)புதினாவைத் தவிர்ப்பது நல்லது.சேனைக்கிழங்கு சாப்பிட்டால் இரட்டைக் குழந்தை பிறக்கும்(அப்படிப் போடு!)

3)செம்புற்றுப் பழம் சாப்பிட்டாலோ,எலியைப்பார்த்தாலோ(எப்போது?!)குழந்தையின் உடலில் தழும்புகள் இருக்கும்.

4)வெள்ளிப் பொருள்களைப் பிறருக்குப் பரிசாகக் கொடுக்கும் பெண்ணுக்குக் குழந்தை பிறக்கும்(இதுதான் பெஸ்ட்,போய் வரிசையில் நின்று விட வேண்டியதுதான்!)

5)ஆண் அரைக்கால் சட்டை அணிந்தால் விந்தணு சரியான சூட்டில் இருக்கும்!(இப்ப எல்லாருமே அரைடவுசர் போட்டுத்தான் திரியறாங்க,ஹா,ஹா)

இதெல்லாம் நம்பும் இவர்களுக்கு,சுழற்சி முறை பற்றி,எந்த நாட்களில் உறவு கொண்டால் கருத்தரிக்க வாய்ப்பு அதிகம் என்பது பற்றித் தெரியவில்ல!

இதெல்லாம் இங்கிலாந்தில்!

குழந்தை பெற்று விட்டால் போதுமா,பேணி வளர்க்க வேணும் தெரியுமா என்று ஒரு பழைய திரைப்பாடலில் வரும்.

 அதைப் பற்றி அடுத்து கொஞ்சம் சீரியஸ் செய்தி.

வெட்கப்பட வேண்டிய,வேதனைப்பட வேண்டிய செய்தி!

நீங்கள் தொலைக்காட்சியில் ஆப்பிரிக்காவில் குழந்தைகள்,எலும்பும் தோலுமாய்,பசி பட்டினியால் வாடுவதைப் பார்த்திருப்பீர்கள்.

திடுக்கிடும் செய்தி---ஊட்டசத்து விஷயத்தில் இந்தியா ஆப்பிரிக்காவுக்குச் சளைத்ததல்ல! 

அங்கோலா,கேமரூன்,காங்கோ,யேமன் ஆகிய நாடுகளுக்கு இணையாக,துணையாக இந்தியா இருக்கிறது.

இந்தியாவில் 50 விழுக்காடு குழந்தைகள்,எடை குறைவாகவும்,வளர்ச்சி குன்றியும் இருக்கி றார்கள்.

மகளிர் மற்றும் குழந்தைகளில், 70 விழுக்காட்டுக்கும் மேல்  ஊட்டச்சத்துக் குறைபாட்டு நோய்களால்(ரத்தச்சோகை) அவதிப் படுகிறார்கள்.

இந்த விஷயத்தில் பாகிஸ்தானும் ,வங்காளதேசமும்,இந்தியாவை விட மேலான நிலையில் உள்ளனவாம்!

மேரா பாரத் மஹான்!

22 comments:

  1. அடாடா... குழந்தை வளர்ப்பின் பின்னே இப்படி ஒரு தகவல் இருப்பதை இப்போதான் தெரிஞ்சுக்கிட்டேன். வேதனை! குழந்தை பிறப்பதற்கு இன்னதுதான் செய்ய வேண்டும் என்றில்லாமல் நம்பிக்கைகள் பற்றிப் படித்ததும் வியப்பளித்தது. அருமை.

    ReplyDelete
  2. நிஜமாகவா !
    இவங்க என்னவோ வல்லரசு அது இதுன்னு
    பினாத்தராங்களே.அது எப்படி ரத்த சோகையோடு
    சத்தில்லாமல்.

    ReplyDelete
    Replies
    1. வருத்தும் உண்மை
      நன்றி ரமணி ஐயா

      Delete
  3. நிஜமாகவா !
    இவங்க என்னவோ வல்லரசு அது இதுன்னு
    பினாத்தராங்களே.அது எப்படி ரத்த சோகையோடு
    சத்தில்லாமல்.

    ReplyDelete
  4. பல தெரியாத விடயம் அருமை....................

    ReplyDelete
  5. நல்ல விஷயங்கள்.கொப்பி பண்ணி வச்சிருக்கேன்.நன்றி குட்டா !

    ReplyDelete
  6. பதிவு நன்றாக உள்ளது. எத்தனை நம்பிக்கைகள்!!!!ம்...ம்!!!!!!
    நல்வாழ்த்து.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி வேதா இலங்காதிலகம் அவர்களே

      Delete
  7. வரப்பு உயர கோல் உயரும் என்ற கதை தான்....

    நல்ல பகிர்வு குட்டன் சார்.

    ReplyDelete
  8. இதுவரை தெரிந்து கொல்லாத ஒன்று !!!!!!!!!!!

    ReplyDelete
  9. செய்திகள் அனைத்தும் சிந்திக்க வைப்பவை, பகிர்வுக்கு நன்றி அய்ய.

    ReplyDelete