தாம்பத்திய உறவில் முக்கியமானது எது?
உடனே நீங்கள் சொல்வது,உறவு என்ற சொல்லே அதைச் சொல்லி
விடுகிறதே என்றா?
படுக்கையைப் பகிர்ந்து கொள்வது மட்டும் தாம்பத்தியமாகி
விடுமா?
இல்லறம் இனிமையானதாகி விடுமா?
இந்த உறவில் மிக முக்கியம்,புரிதல்,விட்டுக் கொடுத்தல்,அனைத்தையும்
பகிர்தல்.
இன்பம்- துன்பம்,எழுச்சி-வீழ்ச்சி,வரவு –செலவு என்று
எல்லாம் பகிர்ந்து கொள்ளுதல்.
இதைச் சொல்கையில் சமீபத்தில் நான் படித்த ஒரு குட்டிக்கதை
நினைவுக்கு வருகிறது.
நகைச்சுவைக்காகச் சொல்லப்பட்ட கதைதான்.
ஆனால் அதையும் மீறி அதனுள் இருக்கும் அந்த உன்னதமான
தாம்பத்திய உறவின் அழுத்ததைப் பாருங்கள்.
இதோ கதை--------
ஒரு வயதான தம்பதி ஓட்டலுக்குள் நுழைந்தனர்;
கணவனுக்கு வயது 85க்கு மேலும்,மனைவிக்கு 80க்கு மேலும்
இருக்கலாம்.
ஒரு மேசையின் முன் அமர்ந்தனர்.
பணியாளிடம் இரண்டு இட்லி,ஒரு வடையுடன் இன்னொரு தட்டும்
கொண்டு வரச் சொன்னார்கள்.
இட்லி வடையும் காலித்தட்டும் வந்தன.
கணவன் ஒரு இட்லியையும்,வடையில் பாதியையும் காலித்தட்டில்
வைத்து,சாம்பார்,
சட்னியிலும் பாதி ஊற்றி,மனைவி முன் வைத்து விட்டுச் சாப்பிடத்தொடங்கினான்.
அவன் சாப்பிடுவதைப் பார்த்தவாறே மனைவி அமர்ந்திருந்தாள்,அவ்வப்போது
தண்ணீரைக் குடித்தவாறு.
ஓட்டலில் இருந்த மற்றவர்கள்,இவர்கள் வசதியற்றவர்கள்,எனவே கொஞ்சமாக
வாங்கிப் பகிர்ந்துகொள்கின்றனர் என எண்ணினர்.
ஒரு இளைஞன் அவர்களிடம் வந்து,இன்னொரு தட்டு இட்லி
வடை தான் வாங்கித்தருவதாகக் கூற அவர்கள் மறுத்து விட்டனர் ,தாங்கள் எப்போதுமே பகிர்வதே
பழக்கம் எனக் கூறி.
கணவன் சாப்பிட்டு முடித்தான்.
கை கழுவப்போனான்.
இளைஞன் மீண்டும் வந்து மனைவியிடம்
கேட்டான்”ஏன் நீங்கள் சாப்பிடவேயில்ல?”
அவள் கூறினாள்”பல் செட்டுக்காகக் காத்துக் கொண்டிருக்கிறேன்!!”
பகிர்தலின் உச்சம்!!!
இதுதாங்க காதல்...
ReplyDeleteஅழகு...
நன்றி ஆசிரியரே!
Deleteபகிர்தலின் உச்சம் எதிர்பாராதது. குட்டிக்கதையே ஆனாலும் சொல்லாமல் சொல்லி விளங்க வைத்தது அதிகம்.
ReplyDeleteநன்றி நடனசபாபதி ஐயா
Delete
ReplyDeleteஇந்த உறவில் மிக முக்கியம்,புரிதல்,விட்டுக் கொடுத்தல்,அனைத்தையும் பகிர்தல்.
இன்பம்- துன்பம்,எழுச்சி-வீழ்ச்சி,வரவு –செலவு என்று எல்லாம் பகிர்ந்து கொள்ளுதல்.
உண்மை ,, அருமையான எல்லோரும் தெரிந்துக்கொள்ள வேண்டிய பகிர்வு.
நன்றி ஆகாஷ்
Deleteசுகாதாரம் அற்ற செயல், இதனை எவ்வாறு "பகிர்தலின் உச்சம்!!!" என்பது!!!!
ReplyDeleteமுத்தமிட்டு எச்சில் பரிமாற்றம் செய்வது கூடச் சுகாதாரமற்ற செயல்தான்!
Deleteஅவர்களுக்குள் பேதங்கள் அற்றுப்போ ய் விட்டன பலசரக்கு!
நன்றி
Aahaa!
ReplyDeleteஓஹோ!
Deleteநன்றி
Final twist super!!
ReplyDelete