Tuesday, December 11, 2012

தர்ம சங்கடம்!



ஏ.சி.பி. குட்டன் மனைவியுடன் வெளியே கிளம்பத் தயாராகிக் கொண்டிருந்தார்.

அவர் கடமையில் மிகக் கண்டிப்பானவர்.நேர்மை தவறாதவர்.

அந்த ஊர் ரவுடிகளுக்கெல்லாம் சிம்ம சொப்பனமாக விளங்கினார்.

மக்களின் ஒழுங்கு பற்றி மிகக் கண்டிப்பாக இருப்பவர்.

தான் போகும் வழியில் யாராவது ஒழுங்கீனமாக நடப்பதைக் கண்டால்,அதற்கான தண்டனை தராமல் விட மாட்டார்.

பொது இடங்களில் காதல் என்ற பெயரில் நடக்கும் சல்லாபங்களை அறவே வெறுத்தவர்.

அப்படி யாரையாவது பார்த்தால் அவர்களை விசாரித்து ,அவர்களைப் பற்றிய ஆதரங்களைச் சரி பார்த்துக் கண்டித்து அனுப்புவார்.

தன் கீழ் பணி புரிபவர்க்கும் இது விஷயத்தில் கடும் உத்தரவு பிறப்பித்திருந்தார்.

இருவரும் வெளியே செல்லத் தயாராயினர்.

காரில் ஏறிப் புறப்பட்டனர்.

மாலை முடிந்து இருள் பரவிக் கொண்டிருந்தது.

செல்லும் வழியில் முக்கியமான எதையோ மறந்து விட்டதாக மனைவிக்குச் சந்தேகம் வரக், கைப்பையத் திறந்து பார்த்தார்.

வண்டி செல்லும்போது சரியாகப் பார்க்க முடியவில்லை.

கணவரை வண்டியை நிறுத்தச் சொல்லி விட்டுக் கைப்பையைக் கவிழ்த்துத் தேட ஆரம்பித்தார்.

அந்தநேரத்தில்—

மூடப்படிருந்த காரின் கண்ணாடி தட்டப்பட்டது.

கண்ணாடியை கீழே இறக்கினார் குட்டன்.

வெளியே ஒரு காவலர்.

உள்ளே யார் இருக்கிறார்கள் எனப் பார்த்தார்.

அவருக்குக் குட்டனைத் தெரியவில்லை.

“இந்த நேரத்தில் இங்கு காரை நிறுத்தி விட்டு என்ன செய்கிறீர்கள்?”எனக் கடுமையாகக் கேட்டார்.

குட்டன் திகைத்தார்.

தான் யார் என்று சொல்ல மனமில்லை,சங்கடமாக இருந்தது

“நாங்கள் ஒரு கல்யாண வரவேற்புக்குப் போய்க்கொண்டிருக்கிறோம்.இது என் மனைவி. கைப்பயில்  தேடுவதற்காக வண்டியை நிறுத்தினோம்.”

”ஏதாவது ஆதாரம் இருக்கிறதா?”

நல்ல வேளையாக அவரும் மனைவியும் குழந்தையும் சேர்ந்து எடுத்த ஃபோட்டோ டேஷ்போர்டில் இருந்தது.

அதைக்காட்டினார்.

“சரி போங்க” காவலர் நகர்ந்தார்

ஏசியிலும் ,ஏசிக்கு வியர்வை வந்தது!



3 comments:

  1. ஹா ஹா ஹா !!! தர்மசங்கடத்தை மிக அருமையாக சொன்னீர்கள் அருமை. நல்லவேளை போட்டோ இருந்தது...

    ReplyDelete
  2. நல்லதொரு கதை...

    ஆனா இது நம்ம நாட்டுல இல்லயில்ல...

    ReplyDelete
  3. நல்ல பதிவு. சமீபத்தில் ஒரு மூத்த காவல் அதிகாரிக்கு இது போன்ற சங்கடம் ஏற்பட்டதாக கேள்வி.

    ReplyDelete